இந்த நாள் இனிய நாள்

மே 8, 2012

 

Bhuvana GovindYesterday 17:27 நான் இப்ப உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். இது ஒரு உண்மை கதை. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒருத்தர பத்தின கதை. கிட்டத்தட்ட அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி… கொஞ்சம் அதிகமா இருக்கோ, சரி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் ஒரு ஊர்ல ஒரு நிமிஷம் மரம் எல்லாம் அசையாம நின்னுடுச்சாம், மேல வந்த அலை அப்படியே ஒரு செகண்ட் hang ஆய்டுச்சாம், கோவில்ல அடிச்ச மணி அப்படியே சைலண்ட் ஆய்டுச்சாம்… நான் இப்ப உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். இது ஒரு உண்மை கதை. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒருத்தர பத்தின கதை. கிட்டத்தட்ட அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி… கொஞ்சம் அதிகமா இருக்கோ, சரி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் ஒரு ஊர்ல ஒரு நிமிஷம் மரம் எல்லாம் அசையாம நின்னுடுச்சாம், மேல வந்த அலை அப்படியே ஒரு செகண்ட் hang ஆய்டுச்சாம், கோவில்ல அடிச்ச மணி அப்படியே சைலண்ட் ஆய்டுச்சாம். அதாவது, உலக இயக்கமே ஒரு நிமிஷம் நின்னுடுச்சாம். அப்ப தமிழ்நாட்டின் ஒரு அழகான ஊர்ல ஒரு பெண் கொழந்தை பொறந்துச்சாம். அந்த கொழந்தைக்கு அவங்க பாட்டி பேரை வெச்சாங்களாம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அந்த கொழந்தை வளந்து அழகான பொண்ணா ஆச்சாம், எல்லார்கிட்டயும் ‘பிரிய’மா இருக்குமாம் அந்த பொண்ணு. இப்படி இருக்கைல ஒரு நாளு, ஒருத்தர் அந்த பொண்ணை “பொண்ணு பாக்க” வந்தாராம் (ஐயோ பாவம், யாரு பெத்த புள்ளையோ..:) அப்புறம் என்ன ஆச்சுன்னா…. (இப்ப தொடரும் போடணுமோ… ஹி ஹி… சரி மிச்சத்தையும் சொல்றேன் இருங்க) அப்புறம் என்ன ஆச்சுன்னா… அந்த நல்லவர் நம்ம அம்மணிய ‘பார்த்த முதல் நாளே’ கிளீன் போல்ட் ஆகி ஆயுள் கைதியா சிக்கிகிட்டாராம். அப்புறம் என்னவா? And they lived happily ever after தான்…;))) இப்ப எதுக்கு இந்த கதைனு கேக்கறீங்களா? நாளைக்கி அந்த “பிரிய”மான அம்மணிக்கு பர்த்டே’வாம், அதுக்கு தான் அவங்க வாழ்க்கை வரலாறை இங்க சொல்லி இருக்கேன். யாருனு கண்டுபுடிச்சீங்களா? சரி நானே சொல்லிடறேன் அவங்க சாதாரண ஆள் இல்ல, திருப்பூர் திலகி, அஞ்சா நெஞ்சி, மாதர் குல மங்கி ஐயோ சாரி ஒரு ரைமிங்ல வந்துடுச்சு… மாதர் குல மங்கைனு சொல்ல வந்தேன். எங்கள் அக்கா (ஐயோ சொக்கா) பிரியமான ப்ரியா அக்காவுக்கு நாளைக்கி ஹேப்பி பர்த்டே’ங்க. அதான் மேட்டர், அதுக்கு தான் இவ்ளோ பீட்டர்…:) ஹாப்பி பர்த்டே டு யு… ஹாப்பி பர்த்டே டு யு… ஹாப்பி பர்த்டே டு டியர் ப்ரியாக்கா… ஹாப்பி பர்த்டே டு யு… +Priya. R ப்ரியா அக்காவின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் ஒரு கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா……….. வாங்கி தரணும்னு தான் நெனச்சேன். ஆனா கடைல வாங்கறதெல்லாம் ஒடம்புக்கு அவ்ளோ நல்லதில்ல பாருங்க. அதான் நானே ஸ்பெஷல் ஸ்வீட் ரெடி பண்ணிட்டு இருக்கேன், எல்லாருக்கும் பார்சல் அனுப்பறேன் சரியா? (இருங்க இருங்க ஓடாதீங்க…;)

 

இன்றைய நாள் மிகவும் இனிமையாக என்றுமே மறக்க முடியாததாக இருந்தது .,காரணம் அப்பாவி தங்கமணி என்று அழைக்க படும் பிரபல பதிவர் அன்பு தங்கை புவனா தான் ., இப்படி ஒரு வித்தியாசமான வாழ்த்து மடல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை ! ரொம்ப தேங்க்ஸ் புவனா

 


குட்டிஸ் பக்கம்

பிப்ரவரி 13, 2012

 சென்ற வெள்ளி கிழமை நடந்தது.,

 வழக்கம் போல் பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு வந்த கார்த்திக் விளையாட போறேன் மா என்று பாட்மிட்டன் பாட்டை எடுத்து கொண்டு சென்றவன் விரைவில் வீடு திருப்பி விட்டான் ., எப்படியும் ஒரு மணி நேரம் கழித்து தான் வருவான் ;சீக்கிரம் வந்து விட்டானே என்று சற்று ஆட்சிரியத்தோடு அவனை பார்த்த போது நான் ஒரு விஷயம் சொல்றேன் ;என்னை நீங்க திட்ட கூடாது என்று சற்று பதட்டத்தோடு சொன்னான் சரி சொல்லு என்றேன் இல்லை என் மேலே எந்த தப்பும் இல்லை மம்மி என்றான் அதற்குள் அஜித் வந்து கூப்பிட திரும்பவும் விளையாட சென்று விட்டான் என்னவாக இருக்கும் என்று யோசித்து சரி அப்புறம் கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்

 பின்னர் ஒரு வழியாக அவன் சுற்றி வளைத்து மழலை குரலில் சொல்லிய விஷயம் இது தான் அவன் பேட்டை எடுத்து கொண்டு சுபாஷ் வீட்டிற்கு சென்று இருக்கிறான் எதோ விளையாட்டு விசயமாக இரண்டு பேருக்கும் வாய் சண்டை வந்து இருக்கிறது ரெண்டு பேரும் வெவ்வேறு ஸ்கூலில் போர்த் படித்து கொண்டு இருக்கிறார்கள் இதை கண்ட சுபாசின் பாட்டி ( காரைக் குடியில் இருந்து வந்து இருக்கிறார்) ஏண்டா சுபாஷ் ,கார்த்தி கிட்டே போய் இப்படி பேசி கிட்டு இருக்கிறே என்ன இருந்தாலும் உனக்கு தங்கச்சி ஸ்வேதா இருக்கா ; நீ தணிஞ்சு போனா தானே கார்த்திக் நம்ம ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்குவான் நம்ம வீட்டு மாப்பிள்ளையை நீ நல்லா நடத்தாம இப்படி பேசிகிட்டு இருக்கியே என்று சொல்லி இருவரையும் சமாதான படுத்தி இருக்கிறார் :)) அவனின் வெட்கத்தை கண்டு எனக்கு ஒரே சிரிப்பு!

நேற்று அந்த பாட்டி ஊருக்கு போகிறேன் என்று சொல்லி கொள்ள வந்தார் ., நீங்க வேற உங்க பேத்தியை கல்யாணம் செய்து வைக்க போறீங்க ன்னு சொல்லிடீங்கன்னு எங்க கார்த்திக் வேற உங்க வீட்டு பக்கமே திரும்ப மாட்டேன் என்கிறான் என்று சொன்னதற்கு அடடா ;கார்த்திக் ,சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று அவனிடம் சொல்லி விட்டு என்னிடம் நீங்க எல்லாம் நூறு பௌனோடு நல்லா செவப்பு கலரா இருக்கிற பொண்ணு தானே பார்ப்பீங்க என்று என்னையும் அதிர வைத்தார் :)) குறும்பு பாட்டி தான் என்று சொல்லி சிரித்து கொண்டேன்.


2011 in review

ஜனவரி 1, 2012

The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.

 

Here’s an excerpt:

The concert hall at the Syndey Opera House holds 2,700 people. This blog was viewed about 8�500 times in 2011. If it were a concert at Sydney Opera House, it would take about 3 sold-out performances for that many people to see it.

 

In 2011, there were 27 new posts, growing the total archive of this blog to 82 posts. There were 43 pictures uploaded, taking up a total of 13mb. That’s about 4 pictures per month.

The busiest day of the year was April 22nd with 221 views. The most popular post that day was பெண் பார்க்கும் நிகழ்வு -தொடர்ச்சி .

How did they find you?

Some visitors came searching, mostly for பெண்கள் முன்னேற்றம்அத்துடன்பெரியம்மா.

Where did they come from?

  Asia

 • 81�1% India
 • 6�1% Sri Lanka
 • 4�2% Malaysia
 • 2�7% Singapore
 • 2�1% United Arab Emirates
  North America

 • 87�1% The United States
 • 12�2% Canada
 • 0�7% Bermuda
  Oceania

 • 73�9% New Zealand
 • 26�1% Australia
  அய்ரோப்பா

 • 33�3% The United Kingdom
 • 29�2% Poland
 • 8�3% Germany
 • 8�3% Norway
 • 8�3% France
  ஆப்பிரிக்கா

 • 50�0% Egypt
 • 50�0% Seychelles

Most visitors came from India. The United States & Sri Lanka were not far behind.

Who were they?

Your most commented on post in 2011 was மரியாதை :கொடுக்கலும் வாங்கலும் !

These were your 5 most active commenters:

Perhaps you could follow their blog or send them a thank you note?

Attractions in 2011

These are the posts that got the most views in 2011. You can see all of the year’s most-viewed posts in your Site Stats.

Some of your most popular posts were written before 2011. Your writing has staying power! Consider writing about those topics again.

Thanks for the continual support of these top commenters and all other commenters and vistors of this blog

Wishing You Happy New Year 2012

 

 


CHEES O CHESS

திசெம்பர் 1, 2011

எங்க  நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை வாங்கி கொள்ளும் வெளி நாட்டை சேர்ந்தஇறக்குமதி யாளர்களில் ஒருவரான கமிலா எனக்கு சீஸ் பாக்கெட்கள் பரிசளித்தார் ;சரி ஏதாவது செய்து பார்ப்போமே என்று  பாஸ்தா செய்து பார்த்தேன் சுவை சரியாக இல்லை ; மாம்ஸ் சாப்பிட்டு ஏதோ டேஸ்ட் குறைகிறதே என்று ஒரு வளரும் சமையல் கலை வல்லுனியியை குறை சொன்னார் .,

சரி என்ன குறை ?

 மசாலா குற்றமா

சீஸ் குற்றமா

இல்லை

உப்பின் அளவில் ஏதாவது எச்சு கம்மியா என்று கேட்க நினைத்து அவரின் முகம் போன போக்கினை பார்த்து பேசாமல் விட்டு விட்டேன் 🙂

இது பற்றி துப்பு துலக்கலாம் என்று யோசித்து ஒருவழியா கண்டு பிடித்து விட்டேன் !

அது என்ன வென்றால்  சீஸ் பாக்கட்டின் உட்புறம் டபுள் லேயரில் முதல் லேயரை பிரித்த நான் இரண்டாவது லேயர் சீஸ்  கலரில் இருந்ததை  பிரிக்காமல் அப்படியே போட்டு விட்டேன் என்பது தான் காரணம்:))

 சரி இன்று பர்கர் செய்வோம் என்று முடிவு செய்து நீல்கிரிஸ் சென்று பர்கர் பன்கள் மற்றும் ரெடி கட்லெட் வாங்கி வந்தேன் இப்போது செய் முறையை பார்க்கலாமா

முதலில் தோசை கல்லை சூடு செய்து அதில் இரண்டாக அரிந்த  பர்கர் பன்னை பட்டர் தடவி சற்று வாட்டி எடுத்து ஒரு பன்னை எடுத்து அதில் வாங்கி வந்த கட்லெட் ஐ வைத்து தக்காளி சாஸ் ,சற்று துருவிய கேரட் ,முட்டை கோஸ் ,தேங்காய் துருவலை போட்டு இன்னொரு பன்னால் மூடினால் பர்கர் ரெடி!

 என்ன இரெண்டே வரிகளில் ஒரு சிறந்த சமையல் குறிப்பை கொடுத்த  முதல் இல்லத்தரசி நானா :)) 

 நீங்கள் குறை சொல்வதற்கு முன்னால் எப்படி முழுவதும் செய்வது என்று நான் தெரிந்து கொண்டதை சொல்லி விடுகிறேன் 🙂

 தேவையானவை:

கட்லெட் செய்ய:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்

வேக வைத்த காய்கறி கலவை – 1/2 கப்

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன்

மைதா (அ) கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்

துருவிய சீஸ்- 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

பர்கர் செய்ய:

பன் – 1 (அ) பிரெட் – 2 ஸ்லைஸ்

வெண்ணெய் – சிறிதளவு

துருவிய கேரட் – சிறிதளவு

மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – சிறிதளவு

தக்காளி சாஸ் – சிறிதளவு

 செய்முறை: எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும். (குறிப்பு: கடைகளில் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய பர்கரை, வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதில் பனீரை சேர்த்து செய்து கொடுக்கலாம். துருவிய காய்கறிகளை பச்சையாக பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள அத்தனை சத்துக்களும் நேரடியாகக் கிடைத்து விடும்.)-

நன்றி :ரேவதி

தேவை சிக்கனம்

நவம்பர் 3, 2011

சேமிப்புக் குணம்; சிக்கனம் ஆகியவை பற்றி நிறையப் பார்த்துவிட்டோம். ஆனாலும் அவ்வப்போது இந்த உணர்வைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.காரணம் செலவழிப்பதிலும், ஆடம்பர வசதிகளிலும் நம் மனம் அடிக்கடி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

செல்போன் இல்லாதவர்களைக் கண்டு செல்போன் இருப்பவர்கள் திருப்தி அடைவது இல்லை. லேட்டஸ்ட் மாடல் தேவை என்றோ, அவரைப்போல் இன்னொன்று வாங்கி வைத்துக் கொண்டால் அதில் மேலும் பல செளகரியங்கள் இருக்கின்றன என்றோ எண்ணிக்கொண்டு நிறைவற்ற மனத்துடன் வலம் வருகிறார்கள். ஏக்க உணர்வுடன் காலத்தை ஓட்டுகிறார்கள். ஒரு பலவீனமான கணத்தில் காசுதான் இருக்கிறதே, வாங்கினால் என்ன என்கிற நினைப்பு உந்தித் தள்ள விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சிகளாகி, சிறப்புச் சிறகுகளை இழந்து ஊர்ந்து செல்லும் சாதாரணப் பூச்சிகளாகிப் போகிறார்கள்.
 

கஷ்டப்பட்டவர், இன்று நன்றாக இருப்பவர் என்கிற நிலையில் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருடன் பேசிப் பாருங்கள். பரவாயில்லை. ஆனாலும்… என்று ஒரு பட்டியல் வாசிப்பார்.

மனநிறைவு என்பது பொருள்களால் பொருளாதாரத்தால் மட்டும் நிரப்பிக் கொள்வது அல்ல. மனத்தாலும் நிரப்பிக்கொள்ள வேண்டும். 50 சதவிகிதத் தேவைகளை அடைந்துவிட்டால் மீதமிருக்கிற 50 சதவிகிதத்தை வெற்றிடமாக வைத்துக்கொண்டு ஏங்கித் தவிக்கிறவர்களின் வாழ்க்கை இனிய வாழ்க்கையல்ல. இந்த 50 சதவிகிதத்தை மனத்தால் நிரப்பிப் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தேவைகள் பூதாகரமாகத் தெரியும். பிய்த்துத் தின்னும். அரித்துப் பிடுங்கும். இது தவறுகளைச் செய்வதற்கே வழிவகுக்கும். இருப்புகளைக் காலி செய்வதிலேயே நம்மவர்கள் குறியாக இருக்கிறார்கள். எதிர்பாராத தேவைகளுக்கும், திடீர்ச் சமாளிப்புகளுக்கும் வருங்காலத்திற்கும் ஏதும் தேவை என்கிற நினைப்பை அதிகரித்துக் கொண்டால் நாமே வியக்குமளவு இருப்புகள் வளரும்.

ஒன்றை வாங்க மனம் துடித்தால் ஒரு வாரம் வரையிலாவது இந்த நினைப்பைத் தள்ளிப் பாருங்கள். அடுத்த வாரமும் இதே அளவு வேகமும் வீரியமும் இருப்பின், அதன் அவசியம் மற்றும் சாதக பாதகங்களை ஆராயுங்கள். இதை வாங்கியபிறகும் இருப்பு இருக்குமா பாருங்கள்.

செலவினங்கள் இனிப் பலன் தருபவையாக அமையட்டும். வேறு வகையில் சொன்னால் – வழித்துத் துடைத்து ஒன்றை வாங்குவது என்றால் அது முதலீடாகத்தான் இருக்கலாமே தவிர, செலவினமாக இருக்கக் கூடாது.

நன்றி : திரு லேனா தமிழ்வாணன்

 


பில் கேட்ஸ் ஆற்றிய உரை 1

நவம்பர் 3, 2011

மானுட வாழ்வில் நிலவிவரும் ஏற்றத் தாழ்வை நீக்குவதே மானுடத்தின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பேசிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

 “ஹார்வர்ட் பல்கலையில் படித்தது எனது வாழ்வின் குறிப்பிடத்தக்க அனுபவமாகும். இங்கிருந்துதான் எனது வாழ்க்கை தொடங்கியது. 1975ஆம் ஆண்டு இங்கு படித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு வந்த அந்த அழைப்பு இன்றுவரை நீடித்துவரும் மைக்ரோசா்ப்ட் நிறுவன வாழ்விற்கு அடித்தளமிட்டது. ஹார்வர்டில் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் பற்றிப் படித்தேன். ஆயினும், மானுடத்தின் மிகப் பெரிய சாதனை என்பது புதிய, புதிய கண்டுபிடிப்புக்களில் இல்லை. மாறாக, அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், மனித குலத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வை களைய எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் உள்ளது.

ஜனநாயகம், வலிமையான பொதுக் கல்வி, தரமான மருத்துவ வசதி, விரிவான பொருளாதார வாய்ப்புகள் என்று எதுவானாலும் சரி, அவை யாவும் ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும் – அப்போதுதான் அது சாதனையாகும். எல்லா வசதிகளும் உள்ள இந்த நேரத்தில் நீங்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறீர்கள். நாங்களுக்கு கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் யாவும் உங்களுக்குள்ளது. ஏற்றத் தாழ்வு தொடர்பாக நீங்கள் அறிந்துள்ள அளவிற்கு நாங்கள் அறியவில்லை. இந்த அளவிற்கு ஒரு புரிந்துணர்வோடு பட்டம் பெற்றுள்ள நீங்கள், உங்கள் சிறிய முயற்சியால் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல திறமையை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு எதையும் செய்யாமல் இருப்பீர்களானால் அது உங்களை என்றென்றைக்கும் வாட்டிக்கொண்டிருக்கும். நாங்கள் பெறாததை நீங்கள் பெற்றுள்ளீர்கள், உடனடியாகத் தொடங்குங்கள், நீண்ட காலம் உங்கள் பணியை தொடருங்கள்.

ஏற்றத் தாழ்வை ஒழிக்கத் தேவையான மாற்றம் சாதாரணமானதல்ல, அது மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கல்களை வெட்டி வீழ்த்தித் தீர்வு காண நான்கு படி நிலை பாதை உள்ளது. அது,

 1. இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்,

2. அதனை அடைய அதிகபட்ச சாத்தியமுடைய அணுகுமுறையை கண்டுபிடிக்க வேண்டும்,

3. அதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும்,

4. அந்த தொழில்நுட்பம் நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றாக – மிக அதிக விலையுள்ள மருந்தாகவோ அல்லது மிகச் சாதாரணமான படுக்கை வலையாகக் கூட இருக்கலாம் – அதனை கண்டறியுங்கள்.

 முதலில் பிரச்சனையை கண்டறிய வேண்டும். அதற்கான தீர்வு என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட வேண்டும். பிரச்சனையின் சிக்கல் உங்களை தடுத்து நிறுத்திவிட அனுமதிக்காதீர்கள், செயல்படுங்கள், மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு எதுவெனப் பார்த்து கையில் எடுங்கள். அதனைச் சாதிப்பதில்தான் உலகின் உன்னதமான அனுபவம் உள்ளது. உங்களுடைய திறன் என்பது நீங்கள் பெற்றுள்ள கல்வித் தகுதி மட்டுமே ஆகாது, அந்தத் திறனைக் கொண்டு இவ்வுலகில் நிலவும் மிக ஆழமான ஏற்றத் தாழ்வை நீக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதிலயே உள்ளது. உங்களிடமிருந்து வெகு தூரத்திலுள்ள அந்த மக்களோடு உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, ஆனால், அவர்களையும் சேர்ந்ததே மானுடம் என்பதை புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்.

(ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் பில் கேட்ஸ் ஆற்றிய உரை)


தமிழ் – சினிமா – விமர்சனம்

ஜூலை 19, 2011

  

 

                       தெய்வ திருமகள்

 

                  திரைப்பட விமர்சனம்

 
 
  
 
Deiva T hirumagal Movie Review

 

நடிப்பு – விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா

பாடல்கள் – நா முத்துக்குமார்
இசை – ஜீவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – நீரவ்ஷா
எடிட்டிங் – ஆண்டனி

தயாரிப்பு – எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து – இயக்கம் – விஜய்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

 
அத்தி பூத்தாற்போல் வரும் நல்ல படங்களின் இந்த படமும் ஒன்று ..

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்…

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

‘ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, ‘இனிப்பு இனிப்பாக இருக்கிறது’ என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்…. காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது ‘எ பிலிம் பை விஜய்’ என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து ரசிக்க  வேண்டிய படம்!

 
நன்றி : ஒன் இந்தியா.

ஒரு நாள் பதிவர் தொடர்ச்சி 1

ஜூன் 30, 2011

 

 

 

டீல் ஐ ஏற்பதா வேண்டாமா என்று நிருபர் யோசிக்கிறார்….

 

அப்போது பிரபல  பதிவரின்  மனதில் தான் முதல் முதலாக

ஒரு மொக்கை கதையை எழுதிய நிகழ்வு மனக்கண் முன்

வருகிறது ., ….

 

 

அந்த நாள்

சுருள் சுருளாக அந்த நிகழ்ச்சி ஓடி  கொண்டு இருக்கிறது …………

 

 

அந்த கதையை எழுதிய போது நடந்த சரித்திர பிரசித்தி பெற்ற

நிகழ்வு இதோ

 

 

ஏண்டி இங்கே கொஞ்சம் வரயா

வந்தேன் நானே வந்தேனே ; என்ன விஷயம் சொல்லுங்க  அக்கா 

ஏண்டி உன்கிட்டே என்ன சொன்னேன்

கதை எழுத சொன்னீங்க 

என்ன கதை எழுத சொன்னேன்

மொக்கை கதை எழுத சொன்னீங்க

எத்தனை கதை எழுத சொன்னேன்

ரெண்டு கதை எழுத சொன்னீங்க

எழுதினாயா

எழுதினேன் அக்கா

எத்தனை கதை எழுதினே

ரெண்டு கதை எழுதினேன்

ஒன்னு இங்கே இருக்கு

இன்னொன்னு எங்கேடி

அது தான் க்கா இது :))))

 

 

யேஏஏஏஐ ………..அக்காவை நோகடிக்காதே

என்ர பொறுமையும் சோதிக்காதே …………

சரிக்கா கோவபடாதீங்க உங்க உடம்புக்கு ஆகாது

இந்த கரிசனத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே

 

 

இப்போ என்ன நடந்துடுச்சு ! பொறுமையா தான் கேளுங்களேன்

 

அக்கா ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து குடித்து தன்னை ஆசுவாசபடுத்தி கொள்கிறாள் !

 

 

சரி சரி கண்ணு அக்கா ஒரு ப்ளாக் நடத்தி கிட்டு இருக்கேன் தானே

ஆமா இருக்கீங்க

அதுக்கு உன்கிட்டே கதை எழுதி தர சொல்லி கேட்டேன் இல்லையா

ஆமா கேட்டீங்க

என்ன கதை எழுத சொல்லி கேட்டேன்

நல்லா சிரிக்கிற மாதிரி மொக்கை மொக்கையா கதை எழுத சொல்லி கேட்டீங்க

எத்தனை கதை கேட்டேன்

ரெண்டு கதை கேட்டீங்க

எழுதினியா

எழுதினேன்க்கா

அம்மா ராஜாத்தி ஒரு கதை இங்கே இருக்கு

இன்னொரு கதை எங்கேன்னு சொல்லும்மா

அதான் க்கா இது ………………………

ஏய் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்று தங்கையை அடிக்க அக்கா துரத்துகிறாள்

அப்போது சீதா மாமி வருகிறார்

(பாக்கியம் ராமசாமி கதையில் வரும் சீதா இல்லே இவங்க!

இவங்க பேசினா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளோ இனிய குரல்)

என்ன என்ன இங்கே பிரச்சனை

அடைகலம் தேடி தங்கை

மாமியிடம்  

தஞ்சம் அடைகிறாள்

ஏண்டி திலகா எப்போ பார்த்தாலும் கோபிகா கிட்டே என்னடி பிரச்னை

இல்லே மாமி ;அவ என்னை ரெம்ப டென்ஷன் பண்ணறா

அதுக்கு ஏண்டி அவளை இப்படி தொரத்தரே

பாரு குழந்தைக்கு எப்படி மூச்சு  வாங்குதுன்னு

வேண்டாம் மாமி அவளை சப்போர்ட் ரெம்ப பண்ணாதிங்க 

இப்படி எனக்குன்னு தங்கையா வந்து வாச்சி இருக்கே குட்டி பிசாசு 

பாருங்க ஒண்ணுமே தெரியாத அப்பாவி யாட்டம் முழிக்கறதை  

அவ்வளவும் நடிப்பு …………………..

பாருங்க மாமி அக்காவை ,எப்படி கரிச்சு கொட்றாங்கன்னு

அய்யோடா ! உலகமாக நடிப்புடி ;சினேகா உன்கிட்டே பிச்சை வாங்கணும்

ஹய் அப்போ சினிமா ல நானும் நடிக்க போறேனா

என்னோட என் பாவோரைட் நடிகையும் நடிக்க போறாளா

வேண்டாண்டீ ;சினிமா பொழை  ச்சுட்டு   போகட்டும் பாவம்  விட்டுடு

சரிக்கா ;நீ எது சொல்லி நான் மறுத்து பேசி இருக்கேன்

உக்கும் என்று முகவாயை  இடித்து கொண்டு அப்போ அந்த இன்னொரு கதை எங்கேடி

அவள் அமைதியாகிறாள் ………………………………

அடியேய் .,உன்னை அப்படியே நாலு சாத்து சாத்தோணும்  என்று அடிக்க வருகிறாள்

 

 

மாமி குறுக்கே வந்து தடுகிறார்

தொ பாரு திலகா ;பொண்ணுன்ன அமைதியா இருக்கணும்

இப்படி எதற்கு எடுத்தாலும் கையை தூக்கினா உனக்கு தான் கேட்ட பேரு என்று அவளை

சமாதன படுத்தி கனிவோடு கோபிகாவை பார்க்கிறார்

கோபி என் கண்ணே ! குழந்தை முகத்திலே தெரிய்யறது

என்ன ஒரு தேசஸ் ! எனக்கு வாரிசா இவ தான் வர போறா

உலகமே இவளை ஒரு நாள் அண்ணாந்து பார்க்க போகுது என்று உச்சி முகர்ந்தார்

சரி ;அவ உங்க செல்லமாகவே  இருக்கட்டும்

நான் அந்த கடன்காரி கிட்டே ரெண்டு கதையை கேட்டு இருந்தேன் ;ஒரு கதை இங்கே இருக்கு

நீங்களே அவ கிட்டே கேட்டு  அந்த இன்னொரு கதையை வாங்கி கொடுங்கோ என்றாள் (முகம் சிவந்து கோபமாக )

அக்கா .

 

 

இவ்வளோ தானே ;இரு நானே  கேட்டு வாங்கி கொடுக்கிறேன் இதுக்கு போயி குழந்தையை திட்டிட்டு

வாம்மா குழந்தே ;அக்கா என்ன சொன்னா

அது வந்து மாமி அவ ப்ளாக் நடத்திட்டு இருக்காளோ இல்லையோ

ஆமா

அதுக்கு கதை வேணும் எழுதிட்டு வர சொன்னா

சரி

அது என்ன கதை

மொக்கை கதை

நீ எழுதிட்டு வந்தியோ

எஸ் மாமி

எத்தனை கதை செல்லம்

ரெண்டு கதை மாமி

சமத்து எங்க கோபி  

தேங்க்ஸ் மாமி

கண்ணு ,தங்கம் சூப்பர் ஆ இங்கே ஒரு கதை சிரிக்க

சிரிக்க எழுதி இருக்கே இல்லையா

ஆமாம் மாமி

இப்போது வெற்றி  பெருமிதத்துடன் அக்காவை பார்க்கிறார்

இதே மாதிரி அழகா இன்னொரு கதை எழுதி  இருக்கே தானே

ஆமாம் ஆமாம்

வெரி குட் ;அந்த இன்னொரு கதை கொடு கண்ணு

அது தான் மாமி இது !

ஆஆஆஅ

 மாமி யும் அக்காவும் மயக்கமாகிறார்கள்

தங்கை அந்த இடத்தை விட்டு எஸ் ஆகிறாள்..  

 

இப்போது பேட்டி நிருபரின் இந்த டீல் ஆல் நாட்டுக்கு என்ன

பிரயோஜனம் என்ற கேள்வி

அவர் முன் நினைவை (Flash back) கலைக்கிறது ………

 

தொடரும் :))

 

 


ஒரு நாள் பதிவர்

ஜூன் 27, 2011
 
 
 
 
 

 

 
இது ஒரு கற்பனை பதிவு !
 
யாராவது அவங்களை பத்தி தான் எழுதினேன்னு  சொன்னீங்க   அதுக்கு ரீல் டிவி பொறுப்பு ஏற்காதுங்க 🙂
 
 
இப்போது உங்களுக்காக ரீல் டிவி  நிலையத்தில் இருந்து நமது நிருபர் தீபிகா ….
 
கேமரா வுமன் ஹேமா தனது கை விரலை காண்பித்து 5 ,4 ,3 ,2 ,1  
ரெடி ஸ்டார்ட்

மேடம் உங்களை எங்க  ரீல்  டிவி க்காக பேட்டி காண வந்து இருக்கிறோம் 

மேடம் முகத்தில் புன்னகை

நேயர்களே இப்போது பிரபல பதிவர் பெயரிலி யுடன் நேர் காணல்!

வணக்கம்  மேடம்

வாங்கம்மா வணக்கம்!

 மேடம் எத்தனை வருசமா பதிவு எழுதி கிட்டு வரீங்க 

அது கடக்கிறது கழுதை ஒரு பத்து வருசமா !

உங்களோட பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது

சூடா ஒரு சமோசா!

 அது பேட்டி முடிச்சவுடனே தரோம் மேடம்

இல்லேமா அது தான் எனக்கு பிடிச்ச பதிவு !

 சரி மேடம் கவித கவித ன்னு எழுதறீங்களே அத பத்தி

சுட்ட கவிதையா சுடாத கவிதையா !

மேடம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்

மேடம் கிர்ர்ரர்ர்ர்ர் கோவத்துடன் தண்ணீரை எடுத்து குடித்து பின்னர் பாஸ் என்றார்!

ஏன் மேடம் தொடர்ந்து  மொக்கை பதிவுகளா எழுதி கிட்டு வரீங்க  

இல்லையே !

அப்போ அப்போ ஆன்மிகம் ,கதை ,கவிதை ,கட்டுரை எல்லாம் போட்டு கிட்டு தான் இருக்கேன்

 அதென்ன மொக்கை பதிவு என்ன அவ்வளோ ஈஸியா ;

எவ்வளோ கேலிகள் , கண்டனங்கள் ,விமர்சனங்கள் etc …………………….. 

ஆமாம் என்னோட மொக்கை பதிவுகளை படிப்பவர்களின் தொகை 15  விழுக்காடு அதிகமாகி இருப்பது தெரியுமா உங்களுக்கு !

அதை படிக்காதவர்கள் தொகை 80  விழுக்காடு என்பது தெரியுமா உங்களுக்கு

சரி என்னோட பதிவை ரசித்தவர்கள் 10001பேரு!

என்ன மேடம் மொய் எழுதற மாதிரி சொல்றீங்க ;மீதி இருக்கிற கோடானு கோடி பேர்கள் ரசிக்கலைன்னு  தானே அர்த்தம்

என்னோட பதிவை படிச்சவங்க  32  பேரு வாய்விட்டு சிரிச்சாங்கன்னு  பின்னூட்டங்கள்  சொல்லுது!

1652  பேரு மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள்ன்னு தமிழ் மணம் சொல்லுதே

தரவரிசை பட்டியலில் எனக்கு 29 ,999  இடம் என்று கூகிள் ரிப்போர்ட் சொல்லுதே

அவங்க மொத்தமே 30000  பேரை தான் தேர்ந்து எடுத்து தர வரிசை கொடுத்து இருக்காங்கன்னு அவங்க அறிக்கையே சொல்லுதே

வந்து வந்து ……………………..!

 சொல்லுங்க மேடம்  லைவ் ப்ரோக்ராம் நடந்து கிட்டு இருக்கு இல்லே

மேடம் மீண்டும் கோவத்துடன்

சரிம்மா ;ஒன்னு செய்யி ;நீ சிரிக்க சிரிக்க ஒரு  மொக்கை பதிவு போடு !

அது அது எனக்கு பின்னூட்டம் தான் தெரியும்

உனக்கு சவால் விடறேன் உன்னாலே  ஒரு நாள் பதிவரா இருந்து ஒரு மொக்கை பதிவு  எழுதி போஸ்டா போட முடியுமா!

என்ன பேச மாட்டேன்கிறே மா!

இப்போ தெரியுதா மொக்கை பதிவு எழுதறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லே ;அதுக்கு தான் நிறைய யோசிக்கனும்

நிறைய ஹோம் வொர்க் செய்யனும் ;நிறைய மொக்கை பதிவுகளை படித்து அதை ரீமிக்ஸ் செய்து போடணும்ன்னு உனக்கு தெரியுமா !

நின்னா யோசிக்கோணும்

நடந்தா யோசிக்கோணும்

ஓடினா கூட யோசிக்கோணும்

சரி அதை விடு

காய்கறி கடைக்கு போகும்போது

மளிகை கடைக்கு போகும் போது

ஏன் ஷாப்பிங் போகும் போது கூட யோசிக்கோணும்

செஸ் விளையாடும் போது

கேரம் விளையாடும் போது

ஏன் கார்ட்ஸ் விளையாடும் போது கூட யோசிக்கோணும்

காரில் போகும் போது

ட்ரெயின்ல   போகும் போது

ஏன் பிளைட் ல போகும் போது கூட யோசிக்கோணும்

என்று  சொல்லி விட்டு மேடம் பெரு மூச்சு விட்டு கொள்கிறார்

இல்லை ;என்ன இருந்தாலும் நீங்க மொக்கை பதிவு போடறதாலே நிறைய பேருக்கு மன உளைச்சல் மற்றும் எரிச்சல்  ஆளாகி மன நிம்மதி இல்லாம இருக்காங்கன்னு ……………………….

எப்போவும் விமர்சனம் ஈஸி ;ஆனா பதிவு எழுதறது ரெம்ப கஷ்டம்!

ஒண்ணா நீ  ஒரு நாள் பதிவரா இரு ;இல்லே என்னை பாராட்டி கமெண்ட்ஸ் ஒவ்வொரு பதிவுக்கும்  போடு

என்ன டீலா !

வந்து வந்து …………………..

வந்தாவது போயாவது சொல்லும்மா லைவ் ப்ரோக்ராம் நடந்து கிட்டு இருக்கு இல்லே!

……………………….

 தொடரும் !


துப்பறியும் கதை 1 தொடர்ச்சி 2

மே 26, 2011

 

சில விஷயம்  ஏன்,எப்படி ,எதனால் என்று நடந்தது என்று யாராலும் சொல்லவோ யூகிக்கவோ  முடிவதில்லை
ஆனால் கண்ணையும் காதையும் திறந்து  வைத்து இருந்தாலே போதும்
நாமே எதிர்பார்க்காத  தகவல் எல்லாம் நமக்கு எதிர்பாராத வேளையில் கிடைக்கும்

அப்படி தான் அமைதியாக ரிசப்சன் ஹாலில் அமைதியாக  அமர்ந்து இருந்த கொடி
அருகில் இருந்த தேனுவும் தானை தலைவியும் (கெக்கே பிக்குனி )  இருவர் பேசி கொண்டது
மேடம் இந்த சாரி உங்களுக்கு பாந்தமா இருக்கு எங்கே எடுத்தீங்க
அவர் இது சூரத் தில் இருந்து தருவித்ததுஎன்றார் ;இதை   
கேட்டதும் கொடிக்கு கிளிக் என்று மூளையில் ஒரு பல்பு எரிந்தது
உடனே அந்த கோபிகா திலகா இருந்த ரூமுக்கு புறப்பட்டு
டிரே மேலே பிரித்து வைக்க பட்டு இருந்த பேப்பரை பார்த்தால் அது ஒரு புகழ் பெற்ற துணி கடையின் விளம்பரம் !
உடனே தனது தோழியான காயத்ரியை கூப்பிட்டு ஸ்கூட்டியை எடுக்க    சொல்லி அவரசமாக வெளியே வந்து
வண்டியில் ஏறி உட்கார்ந்து அந்த சென்னை சாரீஸ் கடைக்கு விட சொன்னார்

வண்டி சென்று கொண்டு இருக்கிறது ;அதற்குள் அந்த போன் விசயத்தை என்னவென்று கவனிப்போம்
சுனாமி தான் ;அவள் படத்தில் நடிக்க போகிறாளாம் ;அவளை தேடி  ஷாலினி  அஜித் ,சங்கீதா விஜய் ,ஜோதிகா சூர்யா போன்ற தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்க வருவார்களாம் ;வந்தால் அவர்களை நாளை வந்து பார்க்க சொல்ல வேண்டுமாம்
இவ எதுக்கு நடிக்க வேண்டும் ;அப்படி நடித்து  நடிகையர் திலகம் என்று பேர் வாங்காவா போகிறாள் என்று கேள்விகளை
தள்ளி விட்டு பார்த்தால் அவள் சரியாக தமிழ் பேச தெரியாததே அவளை தமிழில் முன்னணி நடிகையாக ஆக்கி காட்டும்
என்ற நமது மதிப்பீடுகளை ஒரு புறம் வைத்து கொடியின் பின்னே நாமும் கடைக்குள் நுழைகிறோம்

சாரீஸ் செக்சன் எங்கே என்று பார்த்து இரண்டாம் மாடிக்கு போகிறோம்
அங்கே பார்த்தால் ………………………………
அந்த ரெண்டு பேரும் தான்
ஹு ரேகா  என்று  ஆனந்த கூச்சலை அடக்கி கொண்டு அவர்கள் அருகில் சென்று
கோபிகாவின் முதுகில் செல்லமாக ஒன்று வைத்தார் !
என்னடா கொசு கடித்த மாதிரி இருக்கே என்று திரும்பிய கோபிகா
கொடியை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்னர் சுதாகரித்து கொண்டு
வாங்க கொடி ;நீங்களும் இந்த நியூ கலைக்சன் எல்லாம் பாருங்க என்று அமர சொன்னார் !
காலை நேரமாகவே வந்து விட்டார்களாம்
போன் வந்தால் சாரீஸ் எடுப்பதில் கவன குறைவு  ஆகி விடும் என்று அலை பேசியை அணைத்து விட்டார்களாம்

அங்கே உங்களை காணாமல் பெரிய அளவில் கவலை பட்டு கொண்டு இருக்கிறோம் என்று
கொடி நடந்த நிகழ்சிகளை எல்லாம் தெரிவித்தார்
அதை கேட்ட ரெண்டு பேருக்கும் ஒரே ஆட்சிரியம் !!
நமக்கு நல்ல விளம்பரம் இது கோபிகா !
இந்த அளவு நமக்காக தேடினார்களா என்னே அவர்கள் கனிவு இது திலகா! 
இதை ஒரு பதிவாக போட வேண்டியது தான் என்று மனதிற்க்குள்  நினைத்து கொண்டார்

கொடி தான் கண்டு பிடித்த விவரத்தை விழா அமைப்பாளிகளிடம் சொல்லி
அவர்களின் முகத்தில் அமைதியை கொண்டு வந்தார் என்று சொல்லவும் வேண்டுமா
மதிய உணவு அருந்தி கூட்டு  பிராத்தனை செய்ய வந்த அனைவருக்கும் ஒரே சந்தோசம்
கொடிக்கு ஒரே பாராட்டு மழை!

சரி ஆளுக்கு எத்தனை சாரீஸ் எடுத்து கொண்டார்கள் என்று நினைக்கிறீர்கள் !
அதிகம் இல்லை ஜென்டில் விமன் இரண்டே இரண்டு டஜன் தான்  🙂 🙂

எல்லாம்Dhaksinothri,Dharini,Gowri,Kasuthi,Bridal,Panarasவகை சாரீஸ் தான் !