பெண்கள் முன்னேற்றம் -ஒரு பார்வை

இந்திய கலாசாரத்தில் பெண்கள் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். ஆனால் நிஜவாழ்க்கையில் இங்குள்ள பெண்களின் நிலைமை மிகமோசமாக உள்ளது;ஏன் சில சமயம் மிதிக்க படுகின்றனர் என்று கூட சொல்லலாம் !

மிதிக்கவும் வேண்டாம்;மதிக்கவும் வேண்டாம் எப்போது சமமாக நினைக்க போகிறார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.,
 
 
இதற்கு  எல்லாம் விடிவு காலம் அனைத்து பெண்களும் கல்வி கற்று தேர்வது ஒன்று தான் .போதிய கல்வி பெறாதது, பெண் சிசுக் கொலை ஆகியவற்றின் காரணமாக பெண்களின் விகிதம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்போதுதான் இந்த நிலை மாறும். பொருளாதார ரீதியில் ஆண்-பெண் இடையிலான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வது 25.7 சதவீதமாக உள்ளது. ஆண்களின் விகிதம் 51 சதவீதமாக உள்ளது.
 
பெண்கள் வேலைக்கு செல்வதால் ஆண்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது என்ற ஒரு சிலரின் வாதம் ஏற்புடையது அல்ல. .
நான் வெளிநாடுகளில் பார்த்து தெரிந்து கொண்டது எல்லாம் ,குடும்பத்தில் உள்ள இருவருமே வேலைக்கு செல்கிறார்கள் ;சம்பாதித்து குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் .
 
சட்டம் படித்த முதல் பெண் சபாநாயகர் மீரா குமார் இந்தியாவின் நிலையை பற்றி கூறி உள்ளது கவனிக்க பட வேண்டிய ஒன்று .
அவர் கூறியதையும் உங்கள் பார்வைக்கு பதிவில் இடுகிறேன் !

சமூகவிடுதலை மற்றும்பொருளாதாரசுதந்திரத்துக்கானதொடர் போராட்டத்திற்கு தேவையான தைரியத்தை தமிழகம் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது,” என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறினார்.

பாபு ஜெகஜீவன்ராம் அனைத்திந்திய சமத்துவ இயக்கத்தின் தமிழக கிளையின் சார்பில், லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு, ஒரிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

விழாவில், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பேசியதாவது:

தமிழகத்துக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இரண்டு தலைமுறை பந்தம் உள்ளது. எனது தந்தை, தமிழக மக்களின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.நீண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கு உண்டு. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறீர்கள். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றும் சமூக விடுதலை,பொருளாதார சுதந்திரம் நமக்கு கிடைப்பது சவாலாக உள்ளது. இவைகளுக்கு நாம் போராட வேண்டியுள்ளது. சமூக விடுதலைக்கும், பொருளாதார விடுதலைக்கும் நான் நடத்தும் போராட்டத்திற்கு தமிழகம் உந்து சக்தியாக இருக்கிறது. தொடர் போராட்டத்திற்குதேவையான தைரியத்தை தமிழகம் எனக்கு கொடுத்துள்ளது.

இந்தியாவில் எல்லா வளமும் இருக்கிறது. சாதிய வேறுபாட்டால் துண்டு துண்டாக பிரிந்து நிற்பதால், வளர்ச்சியடைந்த நாடாக உருவாக சிரமப்பட வேண்டியுள்ளது. பார்லிமென்டில் இடஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கல்வி முன்னேற்றத்திற்கு சட்டம் இயற்றப்படுகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்துவோரது மனோபாவம் சரியாக இருந்தால், சரியான வகையில் முறைப்படுத்தப்படும். இல்லையேல் சட்டம் அர்த்தமற்றதாகிவிடும்.இவ்வாறு மீரா குமார் கூறினார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே பேசும் போது, “”லோக்சபாவை நடத்துவது எளிதான விஷயமில்லை. மீரா குமார் முதல் பெண் சபாநாயகர் என்பதால் கவனமாக அவையை நடத்த வேண்டியுள்ளது. சட்டம் படித்தவர் என்பதால் அவையை எளிதாகவும், சிறப்பாகவும் நடத்த முடிகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கு இவர் மூலம் நல்லது நடக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. பெண்களுக்கான மசோதாக்களை நிறைவேற்ற இவர் உறுதுணை புரிவார் என்று, பெண்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்,” என்றார்.

Advertisements

13 Responses to பெண்கள் முன்னேற்றம் -ஒரு பார்வை

 1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  வேறு எந்த மதத்திலும் பெண்கள் மதிக்கப்படுவது இல்லை!.

  இஸ்லாம் போர்த்திக்கொண்டுப் போகச் சொல்கிறது!.

  கிறித்துவத்தில் ஏசுவின் மனைவியையும், தாயையும் பலர் மதிப்பதே இல்லை!.

  மற்ற எல்லா மதங்களிலும் பெண் கடவுளாக தகுதியற்று கிடக்கின்றாள்!.

  – ஜெகதீஸ்வரன்!
  http://sagotharan.wordpress.com

 2. கார்த்திக் சொல்கிறார்:

  நல்ல பதிவு.. அவர் சொன்னதில் தவறு இல்லை. ஒரு சில மதங்களில் அவ்வாறுதானே நடத்துகின்றனர் …

 3. priya.r சொல்கிறார்:

  தங்களுடைய வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி திரு கார்த்திக்.

  எங்களை போன்றவர்களின் ஆதங்கம் எல்லாம் பெண்களுக்கும் கல்வி வாய்ப்புகளையும் சம உரிமைகளையும் கொடுக்க நம் இந்திய சமுகம் முன் வர வேண்டும் என்பது தான் .இதில் தேவை இல்லாமல் ஏன் மதத்தை பற்றி எழுத வேண்டும் என்பது தான்.

  மற்றபடி தங்கள் பதிவுக்கு என் கணவர் ,நான் எல்லோரும் ரசிக ரசிகைகள் .அதுவும் தங்களின் ரங்கமணி தங்கமணி
  பதிவு எதிர்பதிவு ரொம்ப நகைச்சுவையாக இருந்தது . கால் சென்டர் பற்றிய பதிவும் சிறப்பாக இருந்தது.தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

 4. Karthik சொல்கிறார்:

  அடடே, என் பதிவை படிக்கறீங்களா ?? எனக்குத் தெரியாம போச்சே ??
  //எல்லாம் பெண்களுக்கும் கல்வி வாய்ப்புகளையும் சம உரிமைகளையும் கொடுக்க நம் இந்திய சமுகம் முன் வர வேண்டும் என்பது தான்/

  இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனக்கு

 5. islamic girl சொல்கிறார்:

  theyrinchutu paysunga sir

 6. suseela.R சொல்கிறார்:

  mathangalai patri pesa inga eana erukarathu எங்களை போன்றவர்களின் ஆதங்கம் எல்லாம் பெண்களுக்கும் கல்வி வாய்ப்புகளையும் சம உரிமைகளையும் கொடுக்க நம் இந்திய சமுகம் முன் வர வேண்டும் என்பது தான் .

 7. அனாமதேய சொல்கிறார்:

  nalla katturai, aanal, ennum peyriyathaga yazuthi erukalam,

 8. அனாமதேய சொல்கிறார்:

  islam pengelukku sahele urimaikelaiyum valengi ullethu padiththuppaarungel.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: