பூனை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி

மார்ச் 25, 2011

பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பூனையை பற்றி கண்டிப்பாக எழுதுவார்கள் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னார். ..

 நானும்  பூனையை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன் ஹி ஹீ

பூனை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி தான்

நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்த போது தான்  வெள்ளை வெளேர் என்று சின்ன குட்டியாய் பப்பி வந்து சேர்த்தது

நானும் எனது தம்பியும் ஸ்கூல் விட்ட நேரம் போக அதனுடன் தான் விளையாட்டு

எங்கு இருந்தாலும்  நான் ப்ளீஸ் ப்ளீஸ் என்று குரல் கொடுத்தால் என்றால் உடனே வந்து விடும்; ஒய்யாரமாக வந்து காலை உரசி செல்லும்; அழகாக  மடியில் வந்து தூங்கும் அதனை அசைக்காமல்  எடுத்து  மேஜையில்   வைத்து தடவி கொடுத்து அது தூங்குவதை பார்த்து கொண்டு இருப்பேன்.,எனது தம்பி அதன்  காதை ,தலையை தூக்கி கொஞ்சம் முரட்டு தனமாக விளையாடுவான்

அதனால் அவனிடம் அது அதிகமாக போகாது . 

அந்த பூனையை குளிக்க வைத்து உணவு இட்டு விளையாடுவது  தான் பெரும்பாலும்  லீவ் நாட்களில் வேலையாக

இருக்கும் .

இரவு நேரம் மட்டும் அதனை தனி ரூமில் விட்டு விடுவார்கள் ;அதன் மியாவ் மியாவ் என்ற குரல் பாவமாக இருக்கும்

சில சமயம் அந்த ரூமில் இருந்து  விடுவித்து விடுவேன்

சமத்தாக சோபா வுக்கு   அடியில் வந்து தூங்கி  விடும்

இப்படி இருந்த அந்த பப்பி  இரண்டு வருடங்கள்

கழித்து  ஒரு நாள் எங்கள் வீடில் இருந்து ரோடை கிராஸ் செய்யும் போது

வண்டியில் அடிபட்டு இருந்து விட்டது .,எனக்கு ரொம்ப வருத்தம் ;நான் அழுத அழுகையை

 பார்த்தோ என்னவோ , கொஞ்ச வருஷம்

வீட்டில்  பூனையே வளர்க்கவில்லை

பிறகு ஹை  ஸ்கூல் படிக்கும் போது ரோஸி அதற்கு பின் ஜீனோ

இப்போது எங்க அம்மா வீட்டில் இருப்பது தாராஇப்போது என் பசங்க அதனோடு

விளையாடுகின்றனர்.

 

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

 பூனையை பற்றிய சில தகவல்கள்

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.

பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ். நூறுக்கும் மேலாக வேறுபடுத்தி காண்பிக்கும் குரல் அமைப்பு கொண்டவை.

நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம்.

நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 – 39 °C (101 – 102.2 °F) வரை காணப்படும்.

பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை. 

  


PRIZE PRIZE SURPRIZE

மார்ச் 11, 2011

 

ஹரே கிருஷ்ணா

 இன்று எங்களின் திருமண நாள் ;இறைவர் எங்களை ஆசிர்வதிப்பாராக.. .,

 

காலையில் எழுந்து பார்க்கிறேன்

 

திகைப்பு,ஆட்சிரியம் ,மகிழ்ச்சி 

 

எங்க பசங்க எங்களுக்கு முன்பே சுமார் 4 .50 க்கு எழுந்து தோரணம் ,கலர் பலூன்கள்  போன்றவற்றால் 

ஹாலை அலங்காரித்து பிரமாத படுத்தி இருந்தார்கள் 

 

தனி தனியாக அவர்களின் சேமிப்பில் இருந்து பரிசு பொருள்கள் ,

இனிப்பு(chaco bars) வகைகளை வாங்கி வேறு வைத்து இருந்தார்கள்.

 

எனக்கு ஒரு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை 

 

இந்த பசங்க இவ்வளோ சின்ன வயசிலே எப்படி இதெல்லாம் தெரிந்து வைத்து செய்து இருக்கிறார்கள் என்று தான் .,

 

அவங்க அப்பாவும் எழுந்ததும் அவருக்கு எனக்கு என்று தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

 

அவங்க அப்பாவுக்கும் சந்தோசம் .,உன்னிடம் ஏற்கனவே இதை பத்தி சொன்னார்களா என்று என்னை பார்த்து கேட்டார் 

 

அவர் எல்லாம் அவங்க பெற்றோர் களிடம் இது போல் ஒரு நாள் கூட சொன்னதோ செய்ததோ கிடையாதாம் 

 

நானும் தான் என்றேன் .,நமது காலம் வேறு இவர்கள் காலம் வேறு என்று  நாங்கள் பேசி கொண்டோம் !

 

நான் பசங்கல கண்டிப்புடன் நடத்துவதால்  பசங்க  என்னிடத்தில் தான் சற்று பயம் எல்லாம் இருக்கும்  

அவங்க அப்பா இடத்தில் செல்லம் அதிகம்

அவங்க அப்பாவிடம் கொஞ்சி பேசும் போதெல்லாம் எனக்கு கொஞ்சம் வெண் பொறாமையாக கூட இருக்கும்

நான் கண்டிப்பா இருப்பதால் பிற்காலத்தில் என்னிடம் பாசம் அன்பு இல்லாமல் போய் விடுமோ என்று என்று எனது

கவலையை அவரிடம் தெரிவிப்பேன்

அவரும் சிரித்து கொண்டே போ (போடி)  அசடு ! நீ எப்போதும் அவர்கள் அருகில் இருப்பதால் கண்டிப்போடு தான் இருக்க வேண்டும்

நான் கம்பெனி ,வெளியூர் ,வெளிநாடு என்று இருப்பதால் அதிகம் கண்டிசனோடு  இருக்க முடியாது என்பார்

 

அடுத்து நம்ம  பாமிலி சாங் (குடும்ப பாடல்) பாடுங்கப்பா என்று ஒரே கலாட்டா

 

எதுக்குடா பசங்களா குடும்ப பாடல் என்றால்,ஏன் மம்மி நீங்க சினிமாவே பார்கறது இல்லையா ; நாம எங்கையாவது போய் ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பண்ணிட்டால் நம்ம பாமிலி பாடல் பாடினா தானே கண்டுபிடிச்சு சேர முடியும் என்று பதில் வேறு !

 

உடனே அவங்க அப்பா

 முத்துக்கு முத்தாக சொத்துக்கு  சொத்தாக

அண்ணன் தம்பி சேர்ந்து இருப்பீங்க கண்ணுக்கு கண்ணாக  என்று

பாட ,இவர்களும் கோரசாக பாட வீடு களை கட்டியது  

இது அவங்க அப்பா காலத்து பாடலாம் அவரும் அவர் தம்பியும் விளையாட்டாக பாடி கொள்வார்களாம்

இப்போ இது பாமிலி பாடல் ஆகி விட்டதாம் .,எனக்கு சிரிப்பு வந்தது

   அடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பின் நான் சமையல்  செய்ய கூடாது என்று சொல்லி இருவருக்கும் ஆளுக்கு ரெண்டு தோசை வார்த்து கொடுத்தனர்

உட்காருங்கடா பசங்களா என்று பின் நான் ஜாங்கிரி ,பூரி குருமா செய்து சாப்பிட  வைத்தேன்

அப்புறம் இந்த குட்டிப்பயல் கார்த்திக் என் கையை பிடித்து அவங்க அப்பா கையில் கொடுத்தான்

எனக்கோ முகம் சிவந்து வெட்கம் வேறு……

அதை பார்த்த அவங்க அப்பாவோ கல்யாணத்துக்கு அப்புறம் இப்போ தான் உங்க அம்மா வெட்கப்பட்டு பார்த்து இருக்கேன் என்று கிண்டல்,கேலி ………….

 

  அவரின் தங்கையிடம் சொல்லி வாங்கி வைத்து இருந்த

அழகிய முத்து மாலையை அவர் எனக்கு பரிசளித்தார்

 

பின்னர் இந்த பசங்க பிரண்ட்ஸ் ப்ரீதா,அமலன் வாழ்த்துக்கள் கூறி பரிசு கொடுத்து சென்றனர்

மற்ற அருகில் உள்ள குழந்தைகள் ஹாப்பி வெட்டிங் டே ஆண்டி அண்ட் அங்கிள் என்று ஒரே சத்தம்

 

பிறகு அருகில் உள்ள ரங்கநாதர் கோவில் சென்று பூதேவி ஸ்ரீதேவி சமேத அரங்கநாதரை அர்ச்சனை செய்து வழிபட்டு

வந்தோம்

 

இரண்டு பெற்றோர் வீட்டில் இருந்தும் வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள்
 
 
 

 

நாங்கள் ஆதர்சன தம்பதிகளா என்றெல்லாம் தெரியாது

ஆனால் ஒருவரை  ஒருவர் புரிந்து கொண்டு  ,விட்டு கொடுத்து ,சகிப்பு தன்மையோடு

மனவள  கலை  அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னபடி வாழ முயற்சி  செய்து கொண்டு

 இருக்கிறோம் என்பது தான் உண்மை! இறைநிலைக்கு எனது நன்றி  !!

 

 

 


நேர நிர்வாக குறிப்புகள்

மார்ச் 9, 2011

 

பொதுவாக ஒன்று சொல்வதுண்ட்டு!

நமது ஜனாதிபதி திருமதி பிரதிபா பாட்டிலுக்கும் அதே 24 மணி நேரம் தான் ;தெரு கோடியில் இருக்கும் பிட்சை காரிக்கும் 24 மணி நேரம் தான் .,என்னடா இப்படி சொல்கிறேனே என்று நீங்களும் சற்று திகைக்க கூடும்

ரொம்ப நாட்களாக இதை பற்றி எழுத நினைத்தது உண்டு

நானும் இந்த நேர நிர்வாக விசயங்களில் சற்று சொதப்பியும் இருந்து கொண்டு தான் இருக்கிறேன்

அதில் இருந்து எப்படி மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்

இன்றைக்குப் பெரும்பாலானவர்கள், 24 மணி நேரம் போதாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒன்றை முடிக்கவில்லையா என்று கேட்டால், ‘நேரமில்லை’ என்று எளிதாகக் கூறிவிடு வோர் அதிகம். ஆனால் நம்மை விட அதிக வேலைகளை, அதிகத் திறனோடு செய்பவர்கள் இருக்கிறார்கள், முக்கிய நபர்கள் பலர் ஒரேநேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்கிறார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் ஒரு நிமிடம் யோசித்தால் இது உண்மை என்பதை உணர முடியும்.நேரத்தைத் திறமையாகக் கையாளு பவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.இன்றைய வெற்றியாளர்கள் பலரும் நேரத்தைத் திறமையாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

நேர நிர்வாகம் என்பது நேரந்தவறாமல் இருப்பது மட்டுமல்ல. பல்வேறு வேலைகளைக் கையாளுவது, எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துவது.சரியான நேர நிர்வாகம் என்பது எதற்கு. முதலில் முக்கியத்துவம் அளிப்பது என்று அறிந்திருப்பது.பட்டியல் போடலாம்

பிரபல காலணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான  மேத்தா கூறுகிறார்:“உங்களின் இலக்கை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த நான்காண்டுகளுக்கான இலக்குகளையும் முடிவு செய்துவிடுங்கள். வருடாந்திர இலக்குகளின் அடிப்படையில் உங்களின் அன்றாடப் பணிகளையும், வாரப் பணிகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.”வெறுமனே சொல்வதோடு நின்றுவிடா மல் தனது வருடாந்திர இலக்கை எட்டுவதில் தினசரி கவனம் செலுத்துகிறார் மேத்தா.

 இரவில் எந்த நேரத்துக்குப் படுக்கப் போனாலும் அதிகாலையில் தவறாது 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். கண் விழித்ததுமே சுறுசுறு சிந்தனையில் ஈடுபடுகிறார்.அன்றைக்கு முடிக்கவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். அதன்பிறகுதான் செய்தித்தாளைப் புரட்டு கிறார்.

இவரைப் போன்ற முறையையே பின்பற்றுகிறார், தனியார் வங்கியொன்றின் துணைத் தலைவர்:-“அலுவலகப் பணி தொடர்பாக அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும், சொந்த விஷயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும் தயாரித்துக் கொள்கிறேன். தினசரி பட்டியலை அன்றன்று நிறைவேற்றுவதால் எனக்குப் பணியில் திருப்தியையும், மாதாந்திரப் பட்டியலை நிறைவேற்றுவதால் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் என்னால் அடைய முடிகிறது” என்கிறார் இவர்.

கஷ்டமானதை முதலில் முடிக்கலாம்எளிதானதை அல்லது தமக்கு மிகவும் விருப்பமானதை முதலில் முடிக்க நினைப்பது பலரின் பழக்கம். அது சரியல்ல என்கிறார்கள் சாதனையாளர்கள். முன்னணி பின்னலாடை  நிறுவனம் ஒன்றின் இயக்குநரான ரவி , தான் செய்ய வேண்டிய பணிகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்வதாகக் கூறுகிறார்.

அவை,

‘முக்கியமானவை – அவசரமானவை’,

‘முக்கியமானவை – அவசரமற்றவை’,

‘அவசரமானவை – முக்கியமற்றவை’,

‘முக்கியமற்றவை – அவசரமற்றவை’,‘

முதல் மூன்றை முடித்ததும் தான் நான் நான்காவதில் கவனம் செலுத்துகிறேன். எளிதான வேலையை முதலில் முடிக்க நினைப்பதில்லை’ என்கிறார் . அவர் தனது வழிகாட்டுதலாக திரு ராம் என்ற துணி ஏற்றுமதி நிறுவன இயக்குனரையும்  சண்முக வேல் என்ற மேலான்மை வகுப்புகள் எடுப்பவரையும் குறிப்பிடுகிறார்

இன்னொரு விசயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும் அது ஆட்சிரியம் ஆனால் உண்மை !உங்களுக்கு நீங்களே விருந்தளியுங்கள் !அவசரமான, முக்கியமான வேலைகளை முடித்துவிட்டால் அன்றைய தினத்தின் முடி வில் உங்களுக்கு நீங்களே ‘விருந்தளித்து’க் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ‘விருந்து நேரத்தின்’ மகிழ்ச்சியானது மேலும் அதைப் போல பல விருந்துகளை ‘ உங்களுக்கு நீங்களே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள்.

சில வேலைகள் போரடிப்பதாகவும், திரும்பத் திரும்பச் செய்வதால் அலுப்பூட்டுவதாகவும் இருக்கக் கூடும். அவற்றைத் தவிர்க்கவே நினைப்பீர்கள். ஆனால் அதற்கு மாறாக நீங்களே உங்களை ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.பல அசாதாரண விஷயங்கள் வெறும் புத்திசாலித்தனம் அல்லது படைப்புத் திறனால் மட்டும் சாதிக்கப்பட்டவை அல்ல; மாறாக நல்ல வேலைப் பழக்கத்தினால் நிறைவேற்றப்பட்டவை என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

இதை படிக்கும் அனைவரும் தாங்கள் எவ்வாறு நேர நிர்வாக விசயத்தில் எந்த மாதிரி வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள் என்பதை தெரியபடுத்தினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் !


எக்ஸாம் சீஸன் ஸ்டார்ட்ஸ்…

மார்ச் 9, 2011

 

வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும், தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்… மகிழலாம்! ஆனால்… குழப்பம், பதற்றம், கவலை, பயம் என்று அனைத்தும் சேர்ந்து மாணவர்களை சுழற்றியடிப்பதும் இந்த நாட்களில்தான்.

“நன்றாகப் படிப்பவர், சுமாராகப் படிப்பவர், இத்தனை நாளாக நத்தையாக இருந்துவிட்டு, இனிமேல்தான் வேகம் கூட்டப் போகிறவர்… என மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… குழப்பம், பதற்றம் போக்கும் வழிகளையும், தேர்வுக்கான சரியான பிரிபரேஷன் முறைகளையும் தெரிந்து கொண்டால், நிச்சயம் கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம். போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தங்கமாச்சே!” என்று சொல்லும் சமயபுரம், எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் , அந்த ‘தங்க’ சேமிப்புக்கான பத்து வழிமுறைகளை, தனது அனுபவ வீச்சிலிருந்து இங்கு பகிர்கிறார்!

1. Day’s Schedule:  உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ… அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.

2. Time Management:  நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்… அமைதியையும், நிதானத்தையும் தரும்.

3. Material Collection:   முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.
4. Blue Print:  அரசே தயாரித்து வழங்கும் இந்த முதனிலை திட்டப்படிவம், அதிக மதிப்பெண் எடுக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது. எந்தப் பாடத்திலிருந்து… எந்த மார்க் கேள்வி எத்தனை வரும் என்ற தெளிவை இந்த ‘  Blue Print’ தரும். 

5. Model Paper:  வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் ‘டாப்பரி’ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.

6. Self Test:  வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.

7. Presentation:   உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது… போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது… போன்றவை (Physical Presentation). இரண்டாவது… விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)

8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த ‘பேப்பர் அனாலிஸிஸ்’ உதவும்.

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.

இறுதியாக, ஆசிரியர், பெற்றோர் இவர்களுக் காகவோ… வேலை, சம்பாத்தியம் இவற்றுக்காகவோ வெற்று இயந்திரமாக படிக்க முயற்சிக்காமல்… தனக்காக, தன் மேம்பாட்டுக்காக என்ற அர்ப்பணிப்புடன் முழுமையாக மனம் இசைந்து படித்தால்… பரீட்சை சுலபமாகும், சுகமாகும்!

* நன்றி :அவள் விகடன் 28-ஜனவரி-2011