பூனை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி

பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பூனையை பற்றி கண்டிப்பாக எழுதுவார்கள் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னார். ..

 நானும்  பூனையை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன் ஹி ஹீ

பூனை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி தான்

நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்த போது தான்  வெள்ளை வெளேர் என்று சின்ன குட்டியாய் பப்பி வந்து சேர்த்தது

நானும் எனது தம்பியும் ஸ்கூல் விட்ட நேரம் போக அதனுடன் தான் விளையாட்டு

எங்கு இருந்தாலும்  நான் ப்ளீஸ் ப்ளீஸ் என்று குரல் கொடுத்தால் என்றால் உடனே வந்து விடும்; ஒய்யாரமாக வந்து காலை உரசி செல்லும்; அழகாக  மடியில் வந்து தூங்கும் அதனை அசைக்காமல்  எடுத்து  மேஜையில்   வைத்து தடவி கொடுத்து அது தூங்குவதை பார்த்து கொண்டு இருப்பேன்.,எனது தம்பி அதன்  காதை ,தலையை தூக்கி கொஞ்சம் முரட்டு தனமாக விளையாடுவான்

அதனால் அவனிடம் அது அதிகமாக போகாது . 

அந்த பூனையை குளிக்க வைத்து உணவு இட்டு விளையாடுவது  தான் பெரும்பாலும்  லீவ் நாட்களில் வேலையாக

இருக்கும் .

இரவு நேரம் மட்டும் அதனை தனி ரூமில் விட்டு விடுவார்கள் ;அதன் மியாவ் மியாவ் என்ற குரல் பாவமாக இருக்கும்

சில சமயம் அந்த ரூமில் இருந்து  விடுவித்து விடுவேன்

சமத்தாக சோபா வுக்கு   அடியில் வந்து தூங்கி  விடும்

இப்படி இருந்த அந்த பப்பி  இரண்டு வருடங்கள்

கழித்து  ஒரு நாள் எங்கள் வீடில் இருந்து ரோடை கிராஸ் செய்யும் போது

வண்டியில் அடிபட்டு இருந்து விட்டது .,எனக்கு ரொம்ப வருத்தம் ;நான் அழுத அழுகையை

 பார்த்தோ என்னவோ , கொஞ்ச வருஷம்

வீட்டில்  பூனையே வளர்க்கவில்லை

பிறகு ஹை  ஸ்கூல் படிக்கும் போது ரோஸி அதற்கு பின் ஜீனோ

இப்போது எங்க அம்மா வீட்டில் இருப்பது தாராஇப்போது என் பசங்க அதனோடு

விளையாடுகின்றனர்.

 

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?

அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?

சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?

சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!

தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!

பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?

 பூனையை பற்றிய சில தகவல்கள்

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.

பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ். நூறுக்கும் மேலாக வேறுபடுத்தி காண்பிக்கும் குரல் அமைப்பு கொண்டவை.

நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம்.

நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 – 39 °C (101 – 102.2 °F) வரை காணப்படும்.

பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை. 

  

Advertisements

14 Responses to பூனை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி

 1. Simulation சொல்கிறார்:

  ///பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பூனையை பற்றி கண்டிப்பாக எழுதுவார்கள் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னார்…///

  உண்மைதான்..
  http://simulationpadaippugal.blogspot.com/2006/08/blog-post.html

 2. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  என்னை வெறுப்பேத்தறதுகுன்னே வேணும்னே இந்த போஸ்ட் போட்ட ப்ரியா டௌன் டௌன்…ப்ருடஸ்…:((((((

  • priya.r சொல்கிறார்:

   சாரி ;உன்னை வெறுப்பு ஏற்படுத்தணும் என்று எழுதலைப்பா
   புரிஞ்சுக்கோ புவனா !!!!!!!!!!

   இப்போ தான் உனக்கு ஒரு மெயில் அனுப்பினேன் அதற்க்குள் என்னை திட்டி விட்டாயேஏஏஏஏ

   நான் என் செய்வேன் !

   ஹேய்! முதலில் குட்டி பூனையை கவனித்து பார் ;அப்புறம் உனக்கே பூனை மேல இண்டரஸ்ட் தோன்ற
   ஆரம்பித்து விடும்! 🙂 🙂

 3. Geetha Sambasivam சொல்கிறார்:

  நாய் தான் வளர்த்திருக்கோம். பல முறை கடைசியா வளர்த்து வந்த மோதி போனதுக்கப்புறம் எதுவுமே வேண்டாம்னு விட்டாச்சு. பூனையை எங்கே வளர்க்கிறது? அதுவே தானா வந்து இங்கே வளர்ந்துக்கிட்டு பிள்ளை, குட்டியும் பெத்துக்கும்! அதைத் தவிர, சுப்புக்குட்டி இருக்கவே இருக்கு! அணில், காக்கை, குயில், மைனா. இப்போப் புதுசா தேன்சிட்டும், கறுப்பு வாலாட்டிக் குருவியும், விசிலடிச்சானும் வந்திருக்கு. கலர் கலரா வண்ணாத்திப் பூச்சி வேறே! பத்தாதா இதுங்களை வளர்த்தாலே போதுமே! :))))))

  • priya.r சொல்கிறார்:

   வாங்க கீதாம்மா

   நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   ஆமாமா ! இவ்வளோ வளக்கறதே பெரிய விஷயம் ஆச்சே !

   குருவிகளை கேட்டதாக சொல்லுங்க கீதாம்மா 🙂

 4. chandrasekaran T R சொல்கிறார்:

  ///பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பூனையை பற்றி கண்டிப்பாக எழுதுவார்கள் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னார்…///

  உண்மைதான்.
  பிரியாவையும் சேர்த்துதான் சொன்னாங்க. நானும் டெடி நாய் வளர்த்தோம் அது மறைந்துபோன பிறகு எல்லோரும் வருத்தப்பட்டோம்.போஸ்ட் கூட பிளாக்லே போட்டேன்

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி TRC சார்
   செல்ல பிராணிக்கு பின்னால் எல்லோருக்கும் ஒரு சோக கதை இருக்கும் போல ……….

 5. Sankar Narasimhan சொல்கிறார்:

  உனக்கு மேல பெரிய பெரிய எழுத்தாளர் யாரது உன் தங்கையா?

  Pet animalas வீட்டுல வளர்க்கும் போது அதுவும் குழந்தைகளில் ஒன்றாக மாறிவிடும், எங்கள் வீட்டில் பெரிய ஜேர்மன் ஷெபர்ட் நாய் இருந்தது. என்னுடிய மகளுக்கு ஒரு பிக் பிரதர் மாதரி, சமீபத்தில் அது இறந்த பிறகு மகள் பட்ட மன கஷ்டத்தை பார்த்து இனிமேல் எந்த பெட் animalaum கிடையாது என்று முடிவு எடுத்து விட்டேன்.

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசகன் சார்
   ஹி ஹீ ஆமாம் .,அந்த பாச மலரும் தான் !
   உங்கள் வீட்டிலும் செல்ல பிராணிக்கு பின்னால் ஒரு சோக கதை இருக்கும் போல
   நாங்களும் அல்சேசன் வைத்து வளர்த்ததை நியாபக படுத்தியதர்க்கும் நன்றி

 6. Ana சொல்கிறார்:

  எனக்கும் பூனைக்கும் ஆகாது. ஏனோ அது எல்லா இடத்திலேயும் ஏறுவதால் எனக்கு கொஞ்சம் அருவருப்பு. மத்தபடி மிருக காட்சி சாலை கணக்கில் எங்கள் வீட்டில் மிருகங்கள் இருக்கின்றன. அம்மாவுக்கு அவை அலேர்ஜி. பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும், எங்களுக்காக பாத்துக்கறாங்க.

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனா
   அது பூனையார் கூட எனக்கும் அணாவுக்கும் ஆகாது என்று சொல்லுவதாக கேள்வி .,ஹ ஹா

   வீட்டில் மினி மிருக காட்சி சாலையா! சூப்பர் ஆ இருக்குமே ! அதிலே உன்னுடைய பங்கு என்ன ?!

 7. Geetha Sambasivam சொல்கிறார்:

  அது என்ன நீங்க பின்னூட்டங்களுக்குக் கொடுக்கிற பதிலெல்லாம் எனக்கு வரதே இல்லை?? 😦 ஏதோ தொழில் நுட்பப் பிரச்னைனு நினைக்கிறேன். நான் இங்கே எல்லாத்துக்கும் ஓகே கொடுக்கிறேன். ஆனாலும் வரதில்லை! என்னனு பார்க்கணும்! 🙂

  • priya.r சொல்கிறார்:

   அடடா ! எனக்கும் இது பற்றி தெரியவில்லை கீதாம்மா
   இப்படி எல்லாம் நடப்பதற்கு எனக்கும் கேசரி கட்சி காரி மேல எந்த சநதேகமும் இல்லை கீதாம்மா 🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: