பள்ளி பாளையம் பெரியம்மா

 

இன்று ஒரு வித்தியாசமான நிகழ்வு

 அதற்கு முன்னாடி ஒரு ப்ளாஷ் பேக்!

எங்க அப்பா அம்மா திருமணதிற்கு சிலபல வருடங்களுக்கு

 முன்பு எங்க அப்பாவின் அண்ணா, எனக்கு பெரிய பெரியப்பா விற்கு

 மனைவியாக வந்தவர் எனது பாட்டிம்மாவின் சுடு சொல்

பொறுக்க முடியாமல் அவங்க அம்மா வீடிற்கு போய் விட்டாராம் ;

அவரே போய் விட்டாரா அல்லது இவர்கள் அவரை அவங்க

பிறந்த வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டார்களா

என்பதும் சரியாக தெரியவில்லை.

 அதற்கு அப்புறம் சில மாதங்கள் கழித்து பெரிய பெரியப்பாவும்

 இறைவனடி சேர்த்து விட்டாராம் அப்புறம் இவங்க யாரும்

அந்த அம்மாவை (பெயர் அலமேலு ) பற்றி விசாரிக்கவே இல்லை போல தெரிகிறது.

 நிறைய வருடங்கள் கழித்து எங்க பெரியப்பா மகன் எனது சின்ன அண்ணா

 இத விசயத்தை தெரிந்து கொண்டு சில வாரம் முன்பு எங்க அப்பாவுடனும்

 கலந்து அவங்களுக்கு எதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து

அவங்க இருப்பிடம் ஒரு வழியாக தெரிந்து,

ஈரோடு அருகே பள்ளி பாளையம் என்ற ஊர்,

அவரை கண்டு பிடித்து

 (அவரின் சகோதரர் மகள் வீட்டில் இருந்து இருக்கிறார் ) பார்த்து பேசி

 வீடிற்கு முன்பு போல வந்து போக வர சொல்லி பேசி விட்டு வந்து இருக்கின்றனர்

 அவருக்கு சில நாட்கள் முன்பு சேலத்தில் கோவிலில் வைத்து

எங்க அப்பாவும் அண்ணாக்களும் நகைகள் எடுத்து கொடுத்து

 எங்க அத்தைகள் அக்காக்கள் எல்லோரும் சேலைகளை எடுத்து கொடுத்து

 அவரை கௌரவித்து இருக்கின்றனர் என்னால் அந்த சமயம் போக முடியவில்லை

இன்று காலையில் எங்க அம்மா வீட்டிற்கு வந்து இருந்தார்!

காலையில் டிபன் சாப்பிட்டு பேசி கொண்டு இருந்தோம்

எங்களை பார்த்து பேசி சந்தோஷ பட்டார்.

நான் அவருக்கு புது  சாரீஸ் கொடுத்து,  எனது அருகில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம்

எங்க சின்ன அண்ணா ,”பெரியம்மா உங்க பக்கத்தில் இருப்பது யாரு தெரியுமா” 

என்று கேட்க அவர் அது தான் சொன்னாங்களே பாலு வோட பொண்ணு  பிரியா  என்று சொல்ல

அவங்க உங்க மாமியாராக்கும்   ! முழு பேரு பர்வத பிரியா என்று சொல்ல !( எங்க பாட்டிம்மாவின் பெயர் பர்வதம் )

அவர் என் கைகளை பிடித்து கொண்டு பருவதம்மா ! என்னை மிரட்ட மாட்டீங்களே !

என்னை திட்ட மாட்டீங்களே என்று என்னென்னவோ பேசினார்

சற்று நேரம் அவரின் மாமியாராகவே என்னை நினைத்து கொண்டு பேசினார் எனலாம்

அவரின் அப்பாவி பேச்சுகளை கேட்டு அவர் மேல் ரொம்ப இரக்கம் தோன்றியது .

எங்களை ஆசிர்வதித்து விட்டு விடை பெற்றார் !!

நீதி : பாட்டிம்மாவின் பெயர் சந்தோசத்தையும் ஏற்படுத்தும்;

சில சமயம் சங்கடத்தையும் ஏற்படுத்தும்!

Advertisements

15 Responses to பள்ளி பாளையம் பெரியம்மா

 1. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  vadai enakke… poi padichuttu varen…:)))

  • priya.r சொல்கிறார்:

   வாங்க வாங்க .,போகும் போது ஒரு பார்சல் எடுத்துட்டு போங்க !
   வந்ததே நீ ஒருத்தி தான் ;இதிலே வடை எனக்கு என்று கிண்டல் வேறு

 2. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  ஆஹா… நெஜமாவே ப்ரியாவுக்கு மூணு மருமகள்’கள் வரும் போது என்ன ஆகும்… ஐயோ பாவம் Future மருமகள்கள்… But, ரவி மாமாவுக்கு கொஞ்சம் ரிலீப் கிடைக்கும்… ஹா ஹா… :))

  சும்மா கலாய்க்கனும்னு அப்படி சொன்னேன் ப்ரியா அக்கா… நீங்க சொன்ன விதம் நேர்ல பார்த்த உணர்வை கொடுத்தது… உறவுகளின் உன்னதத்தை உரைக்கும் ஒரு பதிவு…

  உங்கள் பெரியப்பா மகனுக்கு ஒரு வாழ்த்துப்பா பாடினாலும் தகும்… இந்த தலைமுறையில் இருந்து கொண்டு, போன தலைமுறையை சேர்ந்து ஒருவரை… அதுவும் நேரடி ரத்த சம்மந்தம் இல்லாத உறவை தேடி பிடித்து கௌரவிக்கணும்னு தோணினது பெரிய விஷயம்… பெத்தவங்களையே சுமையா நினைக்கற சிலர் மத்தில கிரேட்னு சொல்லணும்…

  அதே போல் அந்த உறவை ஏற்று கொண்ட உங்கள் எல்லாருக்கும் கூட ஒரு hats off …:))

  • priya.r சொல்கிறார்:

   ஹ ஹா !
   எனக்கு புவனா ,அனாமி ,தேனு மாதிரி மருமகள்கள் கிடைக்காமலா போய்டுவாங்க 🙂

   ரவிமாம்சுக்கு தம்பி கோவிந்தை நினைத்தா தான் கவலையாம் 🙂

 3. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //நீதி : பாட்டிம்மாவின் பெயர் சந்தோசத்தையும் ஏற்படுத்தும்; சில சமயம் சங்கடத்தையும் ஏற்படுத்தும் //

  No one can be perfect சொல்றதில்லையா… வாழ்வில் சங்கடங்கள் இல்லைனா சந்தோசங்கள் புரியாம போய்டுமே… அந்த நாளில் அந்த சந்தர்ப்பத்தில் நாவினால் சுட்ட வடு பெரியது தான் என்றாலும்… இன்னிக்கி நீங்க எல்லாம் தேடி பிடிச்சு கொண்டாடுற பாக்கியம் கிடைச்சு இருக்கே உங்க பெரியம்மாவுக்கு… கரெக்டா?

  • priya.r சொல்கிறார்:

   மிக சரியாக சொன்னாய் புவனா

   ஆம்மாம்;அந்த பெரியம்மா என்னை அவர் மாமியாராகவே நினைத்து பேசியது

   இன்னும் மனதை விட்டு அகல வில்லை.,

   நீ சொன்னது போல அவர் முகத்திலும் அந்த பெருமிதம் ,மகிழ்ச்சி ,நிறைவு

   தெரிந்தது புவனா .

   என்னமா சிந்தித்து சொல்றேப்பா

   எதிலும் பொசிடிவ் பார்க்கும் உனக்கு

   இன்று முதல் பாசிடிவ் புவனா என்றும் வழங்கபடுவாயாக!

 4. priya.r சொல்கிறார்:

  இதற்கு பின்னால் ஒரு தனி கதை இருக்கு புவனா

  கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் எனது சின்ன அண்ணா ஜாதகம் ஜோதிடரிடம் பார்த்து இருக்கிறார்

  அப்போது அந்த ஜோதிடர் தான் சொல்லி இருக்கிறார் .,பழைய சொந்தகளில் ஏதோ ஒரு பரிகாரம் செய்ய வேண்டியது இருக்கிறது என்று

  பின்னர் தான் எனது அப்பாவிடம் கலந்து பேசி முடிவுக்கு வந்து இதெல்லாம் நடந்து இருக்கிறது

  ஆமாம் உண்மையில் எனது சின்ன அண்ணா பாராட்டப்பட்ட வேண்டியவர் தான் புவனா

  ,எல்லோரையும் ஒருங்கிணைத்து சந்தித்து பேசி சுமுகமாக நடக்க வேண்டி அவர் எடுத்து கொண்ட முயற்சி

  சிறப்பானது ;போற்ற தக்கது புவனா

 5. chandrasekaran T R சொல்கிறார்:

  ஒருவேளை நீங்க உங்க பாட்டி அதாவது அவுங்க மமியார் மாதிரி இருபீங்களோ? இல்லை ரங்கமணியை பாத்து அவுங்களும் நம்மளை மாதிரி கஷ்டபடுறாங்களே என்ற ஒரு அநுதாப அலையாக கூட இருக்கலாம். எப்படியோ அவுங்களை கூட்டி வந்து மறுபடியும் குடும்பதோடு ஒட்ட வெச்சது மிக நல்ல வேலைதான் பாராட்டுக்கள்

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் ஹி ஹீ கொஞ்சம் எங்க பாட்டிம்மா சாயல் எனக்கு இருக்கு என்று எங்க அப்பா சொல்லுவார் ., உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சார்

 6. கெக்கே பிக்குணி சொல்கிறார்:

  பாவமா இருந்தது அந்த பெரியம்மா கதையைக் கேட்டுட்டு. வாழ்க்கையில என்ன சுகத்தைக் கண்டிருப்பாங்க இல்ல? 😦 She must’ve felt uncomfortable அது தான் கையப் பிடிச்சிட்டுப் பேசி இருந்திருக்காங்க. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நானும் நம்ம கெக்கே-பிக்கேவை எடுத்து விட்டுடுவேன்… 😦

  ஆனாலும் பாவம், மாமியார் பேரை வச்சு அவங்களை நீங்க இப்படி பயமுறுத்தி இருக்க வேண்டாம். Come to think of it, மாமியார் பேரா, இல்ல உங்க பார்வையா அவங்களை பயமுறுத்தினது…. யோசனையா இருக்கே…

  • priya.r சொல்கிறார்:

   வாங்க தானை தலைவி !
   உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   ஆமாம் அந்த பெரியம்மா ரொம்ப பாவம் தான்
   ஒரு 40 ,45 வருட வாழ்க்கையை இழந்தது ஒரு ஈடு செய்ய முடியாத
   இழப்பு தான் .
   அவர்கள் கையை பிடித்து கொண்டு பேசும் பொழுது எனது கண்களிலும் கண்ணீர் வந்தது
   அப்புறம் எங்களை வாழ்த்தி விட்டு சென்ற அவர் முகத்திலும் திருப்தி தெரிந்தது !

   ஆஹா! இது என்ன புது கதை !
   உங்களுக்கு அப்பாவியே பரவா இல்லே என்று சொல்ல வைத்து விடுவீர்கள் போல இருக்கே !
   என்னோட பார்வைக்கு என்ற பையன்களே பயப்படுவது இல்லே ; மீ ஆல்சோ அப்பாவி
   எங்க பாட்டிம்மா பெயரை வைத்து யாரும் என்னை கூப்பிடுவது இல்லை
   எங்க தாத்தா கூட குட்டிம்மா என்று தான் கூப்பிடுவார் 🙂

 7. Sankar narasimhan சொல்கிறார்:

  \அவர் என் கைகளை பிடித்து கொண்டு பருவதம்மா ! என்னை மிரட்ட மாட்டீங்களே !

  என்னை திட்ட மாட்டீங்களே என்று என்னென்னவோ பேசினார்

  சற்று நேரம் அவரின் மாமியாராகவே என்னை நினைத்து கொண்டு பேசினார் எனலாம்\

  நம்ம பெரியவங்க முக்கியமாக பெண்கள், ரொம்ப அப்பாவியாகத்தான் இருந்திருகிறார்கள், முதல் காரணம் படிப்பு இல்லாதது, இரண்டாவது காரணம் சமூகத்தில் அவர்கள் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறைகள்.
  முதலில் உங்கள் பாட்டி அவர்கள் மாமியாரால் பாதிக்கபட்டு இருப்பார்கள், அடுத்த பாதிப்பு உன் பெரியம்மா, இது தொடரும் முன்
  Thank God Second world war , post second world war necessity for women in work ( intha revolution நம்ம நாட்டுக்கு வர கொஞ்ச வருடங்கள் ஆகி விட்டது ) இப்போது இருக்கும் நிலைமையை அடைவதற்கே நெறைய போராட வேண்டி இருந்தது, இன்னும் சில இடங்களில் போராட வேண்டும்.

  • priya.r சொல்கிறார்:

   ஆமாம் சார் ! இன்னும் கிராம புறங்களில் பெண்கள் படிப்புக்கு ஆண்களை ஒப்பிடும் பொது குறைவாக தான் இருக்கிறது தொலை காட்சி சில நேரங்களில் நல்ல நிகழ்சிகள் மூலமாக சற்று பெண்களிடத்தில் விழிப்புணர்ச்சி கொண்டு வருவதையும் அறிய முடிகிறது பெண்களுக்கு பெண்களால் இழைக்கப்படும் கொடுமைகளின் சதவிகிதம் இப்போது குறைந்து கொண்டே வருகிறது என்பதும் பாராட்டப்பட்ட வேண்டிய செய்தி

 8. அமைதிச்சாரல் சொல்கிறார்:

  பாவமா இருந்துச்சுங்க உங்க பெரியம்மா கதையைக்கேட்டு.. மறுபடியும் அவங்களை தேடிக்கண்டுபிடிச்சுக்கொண்டாந்த உங்க அண்ணனுக்கு பாராட்டுகள்..

  நீங்க பார்வையாலயே மிரட்டவேண்டிய தேவையிருந்திருக்காது. உங்க பேரச்சொன்னதுமே அதிர்ந்துருப்பாங்களாயிருக்கும் 🙂

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கா ; ஹ ஹா ! சரியா சொன்னீங்க ;ரஜினி யோட பஞ்ச் நினைவு படுத்தியதற்கு கூடுதல் நன்றி.

   என்னோட பேரை கேட்டா கூட ஒருத்தர் அதிர்வதை பார்ப்பது இதுவே முதல் தடவை ………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: