மரியாதை :கொடுக்கலும் வாங்கலும் !

 

எண்ணங்கள் கீதாம்மா வை பார்த்து இனிமேல் நாமும்

எல்லோரையும் மரியாதையோடு எழுதி ,கூப்பிட்டு ,

பேச வேண்டும் என்று செயல் பட முடிவெடுத்தேன்.

அதற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை !

இது யார் யார் சொல்லி இருப்பாங்க என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

 முதலில் வந்த மெயில் இது தான் எச்சூஸ்மீ … என்ன புதுசா வாங்க போங்கனு மரியாதை எல்லாம் வருது கமெண்ட்ல… பிச்சுபுடுவேன் பிச்சு… :))))))

சரி அடுத்த மெயில் ஏக்கா! லூசாக்கா நீங்க ! சின்ன(!) குழந்தையை போய் வாங்க போங்க எல்லாம் சொல்லி கிட்டு

 அலை பேசியில் ஒரு தோழி ஏம்பா ! என் மேல கோவமா

 ரெண்டு மூணு நாளா அலைச்சல் தெரியுமா அதுக்காக

மூணாம் மனுசி மாதிரி பேசறது நல்லாவா இருக்கு!

பக்கத்து வீட்டு தோழி

ஏன் கார்த்திம்மா ! நல்லா தானே இருந்தீங்க ;உங்களுக்கு ஒன்னும் ஆகலையே

ஒரு மனுஷி சக மனுஷிக்கு மரியாதை கொடுப்பது தப்பா

 ஏன் என்னை யாரும் புரிந்து கொள்ள வில்லை ?

எங்க ரங்க்ஸ் பொண்ணு பார்த்துட்டு முதல் முதலாக என் கிட்டே பேசிய வார்த்தைகள்

 “உங்களை எனக்கு பிடிச்சு இருக்கு ;உங்களுக்கு என்னை பிடித்து இருக்கா…..

இல்லே ! நான் தான் உங்களை பார்த்தேன் ;நீங்க என்னை சரியா

 பார்க்கவே இல்லையே அதுக்கு தான் கேட்டேன்” என்றார்.

நான் தலை குனித்து மெல்ல தலையாட்டி எனது சம்மதத்தை தெரிவித்தது

 அவரின் மனதில் பசு மரத்து ஆணி போல ஆழமாக பதிவு விட்டதாம் என்பது கூடுதல் தகவல் !

அந்த சமயத்தில் நடந்த இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வு !

தொடரும் !

Advertisements

53 Responses to மரியாதை :கொடுக்கலும் வாங்கலும் !

 1. chandrasekaran T R சொல்கிறார்:

  இதென்ன புதுசா இப்படி மரியாதை கொடுத்து என்னை வயசானவளா காட்ட சதி திட்டமா? நான் ஒத்துக்கமாட்டேன் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இது யாரோட பதிலாக இருக்கும்.

 2. chandrasekaran T R சொல்கிறார்:

  hai naanthaan first vadai parcel pl.

 3. chandrasekaran T R சொல்கிறார்:

  அந்த சமயத்தில் நடந்த இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வு !

  சீக்கிரம் உடனே போடுங்க சஸ்பென்ஸ் தாங்க முடியாது

 4. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //எண்ணங்கள் கீதாம்மா வை பார்த்து இனிமேல் நாமும் எல்லோரையும் மரியாதையோடு எழுதி ,கூப்பிட்டு,பேச வேண்டும் என்று செயல் பட முடிவெடுத்தேன்//

  ஓ… இதானா இந்த கதையின் பின்னணி…. ஹா ஹா ஹா…:))

  // எச்சூஸ்மீ … என்ன புதுசா வாங்க போங்கனு மரியாதை எல்லாம் வருது கமெண்ட்ல… பிச்சுபுடுவேன் பிச்சு//

  எத்தனை தைரியம் இருந்தா எங்க ப்ரியா அக்காவை பிச்சுபுடுவேன் பிச்சுனு சொல்லி இருப்பாங்க… யார்னு சொல்லுங்க போட்டு தள்ளிரலாம்… :))))
  (இதை சொன்னவங்க ரெம்ப நல்லவங்கனு நியூஸ் வந்ததே… அப்படியா ப்ரியா அக்கா…:)))

  //ஏக்கா! லூசாக்கா நீங்க ! சின்ன(!) குழந்தையை போய் வாங்க போங்க எல்லாம் சொல்லி கிட்டு//

  இது யார்னு தெரிஞ்சு போச்சு… “லூசாக்கா நீ” அடிக்கடி ஒரு லூசு உங்களை பாத்து கேக்கும்…அதே லூசு தானே…:))

  • priya.r சொல்கிறார்:

   வாங்க அப்பாவி !
   கதையில்லை கண்ணம்மா ! உண்மை சம்பவம்

   வேண்டாம் வேண்டாம் போட்டு தள்ள வேண்டாம்
   அவள் என் செல்லமாக்கும் ;குட்டி தங்கமாக்கும் !

   ஹ ஹா ஒரு லூசு வோட மனசு இன்னொரு லூசு க்கு தான் தெரியும் சொன்னா
   என்னக்கு தான் திட்டு விழும் ;நான் ஏதும் சொல்லலைப்பா !

 5. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //எங்க ரங்க்ஸ் பொண்ணு பார்த்துட்டு முதல் முதலாக என் கிட்டே பேசிய வார்த்தைகள்//

  அதோட சரி… அதுக்கு அப்புறம் நீங்க தான் பேசிட்டே இருக்கீங்களாம்…அவர் “ம்” போடறதோட சரினு பொலம்பினாராம்… ஐயோ பாவம் மாம்ஸ்…:)))

  //அவரின் மனதில் பசு மரத்து ஆணி போல ஆழமாக பதிவு விட்டதாம் என்பது கூடுதல் தகவல்//

  அந்த ஆணி ஏற்படுத்தின காயம் இன்னும் ஆறலயாம்…:)))

  //தொடரும் !//

  அடப்பாவி… இதுக்கு தொடருமா? திஸ் இஸ் டூ மச் ஐ சே… அவ்வ்வ்வவ்…….

  • priya.r சொல்கிறார்:

   ஹி ஹீ ! அவரும் அது தான் சொன்னார்
   அப்போ எல்லாம் அவர் பத்து வார்த்தை சொன்னா
   நான் ரெண்டு வார்த்தை தான் பேசுவேனாம்
   இப்போ எல்லாம் அப்படியே ரெவேர்ச்ஸ் ஆம்

   அப்பாவீஈஈ ! புருடச்ச்சச்ச்ச்ஸ் ……..
   அது ஒன்னும் காயம் எல்லாம் இல்லையாம்
   வரவர மாம்ஸ் க்கு சப்போர்ட் ஜாஸ்தி ஆகிறீ வருதே 😦

   ஹ ஹா நோ நோ டென்ஷன் அப்பாவி !

   • chandrasekaran t r சொல்கிறார்:

    இங்கே கூட அப்படித்தான் நடக்குது. இப்போதெல்லாம்10 வார்த்தை சொல்லி உமாபதி (உமாவின் கணவர்)வாயிலிருந்து ஒரு வார்த்தை பிடுங்க வேண்டியது அப்பறம் அந்த ஒரு வாத்தையை வைத்து பத்து வார்த்தைகளால் கும்ம வேண்டியது

   • priya.r சொல்கிறார்:

    மீள் வருகைக்கு நன்றி சார்
    ஹி ஹீ அதெல்லாம் தாய் வீட்டு சீதனம் என்று கூட வைத்து கொள்ளலாம்
    நான் இனிமேல் எங்க ரங்க்ஸ் கிட்டே ஒரு அக்ரீமென்ட் போடலாம்னு இருக்கேன்
    ஆளுக்கு ஐந்து வார்த்தை !

 6. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //இதோ அடுத்த பதிவு ஒரு சில நிமிடங்களில் சார்//

  எக்ஸ்பிரஸ் வேகம் எக்ஸ்பிரஸ் வேகம்னு கேள்விப்பட்டு இருக்கேன்… இன்னைக்கி தான் நேர்ல பாக்கறேன்…:))))

 7. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இது யாரோட பதிலாக இருக்கும்//

  TRC Uncle – “கிர்ர்ர்ர்”லையே தெரிஞ்சு போச்சே… நம்ம தானை தலைவி தான்னு…ஹா ஹா…:))

 8. Ana சொல்கிறார்:

  இதன்ன பிரமாதம். பாதி நாளுக்கு மேல நீ லூசான்னு தான் என்னைப் பாக்கறவங்க லுக்கு விடுவாங்க. கண்டுக்காதீங்க. ஹி ஹி. நீங்க வெக்கப்பட்டீங்களா? ஏங்க்கா. அடப்பாவியோட சேராதன்னா கேக்கறியா? பொய் எல்லாம் சொல்லறீங்க. ஹி ஹி. நாங்களும் பதிவு போட்டுட்டோம்ல. ஹிஹி.

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கு நன்றி அனாமி

   இல்லே அனாமி ;உன்னை லூசுனா அதேலே நிறைய அர்த்தம் இருக்கும் கண்ணு

   ஆனா என்னை சொல்ல ஒரு அர்த்தம் வேண்டாமா ! நானா அப்பாவியோட சேர்ந்தேனா;நாம மொக்கை பிளேடு மேல அப்பாவிக்கு எதிரா சத்யா பிரமாணம் எடுத்ததை மறந்து போய்டாயா !

   இதோ ஜோதியில் வந்து கலந்து கொள்கிறேன் !

 9. Geetha Sambasivam சொல்கிறார்:

  இதென்ன புதுசா இப்படி மரியாதை கொடுத்து என்னை வயசானவளா காட்ட சதி திட்டமா? நான் ஒத்துக்கமாட்டேன் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  இது யாரோட பதிலாக இருக்கும்.//

  TRC Sir, என்னோட பதிவுக்கு வராம என்னைப் பத்தி மட்டும் இப்படிக் கமெண்ட் அடிக்கும் உங்களை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். 😛

  வராட்டிப் போங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  • priya.r சொல்கிறார்:

   கீதாம்மாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   கீதாம்மா எழுதும் மாதிரியே கமெண்ட்ஸ் எழுதி

   அவர்களை இந்த பதிவுக்கு கொண்டு வந்து கமெண்ட்ஸ்

   போட வாய்த்த TRC சார்க்கும் நன்றி

 10. Geetha Sambasivam சொல்கிறார்:

  ப்ரியா, எனக்கு வட மாநிலங்களில் இருந்துவந்த பழக்கம் இது. அதுக்கு முன்னாலே நானும் உங்களை மாதிரித் தான் கூப்பிடுவேன். அங்கே அம்மா, அப்பாக்கள் தங்கள் குழந்தைகளையே மரியாதையோடு “ஆப்” போட்டுப் பேசுவாங்க. எங்க குழந்தைகளையும் மிக மரியாதையோடு கூப்பிடுவாங்க. பல வருடங்கள் அங்கே வாசம் செய்ததில் இப்படி வந்திருக்கு. ஆனாலும் நேரில் பார்க்கையில் சிலரை ஒருமையில் கூப்பிடுகிறேன். அவங்க வேண்டுகோளின் காரணமாய்.

  • priya.r சொல்கிறார்:

   வாங்க கீதாம்மா ! முதலில் வா போ என்றுஎழுதி பேசி கொண்டு இருந்து விட்டு திடீர் என்று வாங்க போங்க என்றால் தான் சங்கடமா இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

   கல்யாணம் ஆனதற்கு பின் திருப்பூர் வந்த போது ஏன் என்ற வார்த்தையை கூட ஏனுங்க என்று கேட்கும் போது சிரிப்பாகவும் ஆட்சிரியமாகவும் இருந்தது இப்போது ஏன் குழந்தைகளும் அக்கம் பக்க வீட்டு குழந்தைகளும் மரியாதை கொடுத்து பேசுவதும் கேட்க நன்றாக தான் இருக்கிறது 🙂

 11. Geetha Sambasivam சொல்கிறார்:

  “சிக்”னு சுருக்கமா உங்க கல்யாண நிகழ்வுகளைக் கொடுக்கறீங்க. என்னை மாதிரி நீட்டி முழக்கலை. :))))))

  • priya.r சொல்கிறார்:

   வாங்க கீதாம்மா ! நன்றி ;நான் சிறுக சிறுக இந்த நிகழ்வுகளை எழுதலாம் என்று இருக்கிறேன் ஒரு சில விஷயம் எல்லாம் மறந்து விட்டது 😦 சரி அதுக்காக உங்களுடன் என்னை கம்பேர் செய்வது சரியில்லை நீங்க யானை நான் பூனை கீதாம்மா

 12. Geetha Sambasivam சொல்கிறார்:

  ஆனால் நான் நீட்டி முழக்குவதற்கும் காரணம் இருக்கே

 13. Geetha Sambasivam சொல்கிறார்:

  சரி அதுக்காக உங்களுடன் என்னை கம்பேர் செய்வது சரியில்லை நீங்க யானை நான் பூனை கீதாம்மா//

  grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrகவுத்துட்டீங்களே! 😛 ஏடிஎம், எங்கே உங்க வாய்?? ஒரு கிலோ சர்க்கரையைப் ப்ரியா செலவில் வாங்கிக் கொட்டிக்குங்க!

  ஹும், எனக்கு எதிரி வெளியே இல்லை,, இல்லைனு சொல்லிட்டே இருந்தீங்களே ஏடிஎம், இப்போ சமத்தா இருந்த ப்ரியாவையும் உங்க பக்கம் இழுத்துட்டீங்களே, இது நியாயமா??

  • priya.r சொல்கிறார்:

   கீதாம்மா மாஆஆஆஆஆ ! என்னை போய் என்னை போய் எப்படி கீதாம்மா உங்களால் இப்படி சொல்ல முடிந்தது ! ஐயகோ ! தாங்க முடியவில்லையே இது என்ன வானம் எனக்காக அழுகிறதே ! ஓ இதன் பெயர் தான் மழையா! அப்பாவி ! எனக்கு வைசுடாய் நீ ஆப்பு கீதாம்மா இன்னுமா நீங்க அப்பாவியை நம்பறீங்க !!!!!!!!!! யானை என்று உயர்வாக சொன்னது மதுரை மகாராணிக்கு ஏன் புரியவில்லை ?!

 14. Geetha Sambasivam சொல்கிறார்:

  ப்ரியா, நீங்க சொன்னாப்போல் ஏடிஎம்மையும் இழுத்துவிட்டாச்சு! சரியா?? :))))))))))))))))))))))))))))))))))))

 15. அனாமதேய சொல்கிறார்:

  @:( சரி அதுக்காக உங்களுடன் என்னை கம்பேர் செய்வது சரியில்லை நீங்க யானை நான் பூனை கீதாம்மா
  Total damage geetha madam
  பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் கீதா மேடம்

  • priya.r சொல்கிறார்:

   வாங்க பெயரிலி ;
   கீதாம்மா என் மேல வைத்து இருக்கும் பாசம் வானத்தை விட உயர்ந்தது ;கடலை விட ஆழமானது
   எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது 🙂
   நான் பொங்கி எழுவதற்கு முன்ன உங்க பெயரை கொஞ்சம் சொல்லறீங்களா !

 16. chandrasekaran t r சொல்கிறார்:

  sorry name omitted unintesionally
  கீதாம்மா என் மேல வைத்து இருக்கும் பாசம் வானத்தை விட உயர்ந்தது ;கடலை விட ஆழமானது

  அது என்ன கீதா மேடம்ன்ன யானை,கடல் ஆகாயம்னு பெரிய பெரிய உருவமாத்தான் உபமானம் சொல்லறீங்க.இதுக்கு நேராவே திட்டிடலாம்.மேடத்துக்கு ரோம்ப பெரிய மனசு எப்படி உங்களை சும்மா விட்டு வெச்சி இருக்காங்க. ஐயோ உங்களோட சேர்ந்த தோஷத்துக்கு எனக்கும் பெரிய வார்த்தை வந்துடுத்து.

  • priya.r சொல்கிறார்:

   வாங்க சார் ;மீண்டும் வருகைக்கு நன்றி
   நீங்க போட்ட கமெண்ட்ஸ் தான் பெயரிலி என்ற பேரில் வந்து இருக்கு
   என்று தெரிந்து கொண்டேன்
   கீதாம்மா ரொம்ப நல்லவங்க சார்
   என்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்களே !

 17. chandrasekaran t r சொல்கிறார்:

  அடிப்பாவின்னு ஒரு பெரிய சக்தி இருக்கு ஞயபகம் இருக்கட்டும்

 18. chandrasekaran t r சொல்கிறார்:

  அடிப்பாவின்னு ஒரு பெரிய சக்தி இருக்கு ஞயாபகம் பயம் எல்லாம் இருக்கட்டும்

  • priya.r சொல்கிறார்:

   சார் ! நான் பயந்து கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்
   அவங்க ரங்க்ஸ் பற்றி கொஞ்சம் நினைத்து பாருங்க சார் !

   • chandrasekaran T R சொல்கிறார்:

    அப்பவிக்குகாக பயந்து சிலை மாதிரி வாயடைச்சு நிற்கின்றாய் கோவிந்தா
    சிலயாகி நின்றாலும் குறை ஒன்றும் இல்லாதவர்

   • priya.r சொல்கிறார்:

    ஹ ஹா ! ஏனோ குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா பாடல் நினைவுக்கு வந்தது

   • priya.r சொல்கிறார்:

    வாங்க சார் ;உங்க ப்ரொபசர் வேலையை கரெக்ட் ஆ செய்துடீங்க !

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    2011/4/22 priya ravi

    > ஹ ஹா ! ஏனோ குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா > பாடல் நினைவுக்கு வந்தது > >

 19. chandrasekaran T R சொல்கிறார்:

  @ பர்வதபிரியா பாருங்க நான் வந்து ஆரம்பிச்சா எதனை பேர் வராங்க சரி எதாவது பாத்து போட்டு கொடுங்க. வடை போச்சு இட்லிஎங்கேன்னே தெரியலை

 20. priya.r சொல்கிறார்:

  ஹ ஹா ! ஆமாம் சார்
  உங்க கமெண்ட்ஸ் ராசி தான்
  உங்க ஊரில் உள்ள ஹோட்டல் லில்
  வேண்டியதை சாப்பிட்டு பில்லை எங்களுக்கு அனுப்பி வைத்து விடுங்கள் !

  • chandrasekaran t r சொல்கிறார்:

   சரி இங்கே தி நகர்லே ஆபீஸ் பக்கம் அடயார் கிராண்ட் ஸனாக்ஸ் அமிர்தம்ன்னு ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சி இருக்காங்க அங்கஏ சாப்பிட்டுவிட்டு பில்லை அனுப்பரேன்

   • priya.r சொல்கிறார்:

    அடடே ! இந்த தடவை பரவா இல்லை
    அடுத்த தடவை ஸ்டார் ஹோட்டல் லில் சாப்பிடுமாறு கேட்டு கொள்கிறேன் 🙂
    ஹலோ டோர் டெலிவரி செக்சன் ;TRC சார் வீட்டுக்கும் , கீதா மாமி வீட்டுக்கும் ஸ்வீட் பாக்ஸ் வோடு ஒவ்வொரு பார்சல் !
    ஆமாமா ! பில் எங்களுக்கு அனுப்பிடுங்க ! நாங்க பார்த்துக்குறோம் !

 21. T R CHANDRASEKARAN சொல்கிறார்:

  என்னது பில்லை நீங்க பாத்துகிறீங்களா! யார் பே பண்ணபோரது? வேண்டாம்மா எனக்கு மே 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஹதராபத் டாஜ்பேலஸ்லே ரூம் போட்டாச்சு நான் அங்கேயெ உன் பேரைச் சொல்லி சாப்பிட்டுகிறேன். பார்சலை ரவிக்கு அனுப்பச் சொல்லிடறேன்

 22. Sankar Narasimhan சொல்கிறார்:

  வணக்கம் பிரியா அவர்களே நன்றாக உளீர்களா
  உங்கள் பதிவு கண்டு மகிழ்தேன் நன்றி வணக்கம்.

 23. Sankar Narasimhan சொல்கிறார்:

  ப்ரியம்மா நல்ல இருக்கியா,
  பதிவுல நல்ல விசயம் எல்லாம் சொல்லி இருக்க வாழ்த்துக்கள்.

 24. Sankar Narasimhan சொல்கிறார்:

  மேல உள்ள கமெண்ட் இரண்டுல இருந்து உனக்கு வித்தியாசம் புரிஞ்சுரிக்கும். நான் என்னுடயை studentai நீங்க வாங்க னு சொன்ன, சார்
  நான் செய்தது தப்பு சார் இனிமேல இப்படி செய்ய மாட்டேன் னு நான் அவன் /அவள் என்ன செய்தார்கள் னு சொல்லாமலே மன்னிப்பு கேட்டு விடுவர்கள். என்னா நான் நீ/ டேய் , வாம்மா/ போம்மா னு சொன்னா students feel intimacy and never hesitate to discuss any problem even they can’t discuss with their parents.

 25. Sankar Narasimhan சொல்கிறார்:

  \// எச்சூஸ்மீ … என்ன புதுசா வாங்க போங்கனு மரியாதை எல்லாம் வருது கமெண்ட்ல… பிச்சுபுடுவேன் பிச்சு//

  எத்தனை தைரியம் இருந்தா எங்க ப்ரியா அக்காவை பிச்சுபுடுவேன் பிச்சுனு சொல்லி இருப்பாங்க… யார்னு சொல்லுங்க போட்டு தள்ளிரலாம்… 🙂 )))
  ஆமாம் அப்பாவி இது யாரு நீ இல்லை னு தெரியுது ஏன்னா
  இதை சொன்னவங்க ரெம்ப நல்லவங்கனு நியூஸ் வந்ததே…
  //ஏக்கா! லூசாக்கா நீங்க ! சின்ன(!) குழந்தையை போய் வாங்க போங்க எல்லாம் சொல்லி கிட்டு//
  இது யார்னு தெரிஞ்சு போச்சு… “லூசாக்கா நீ” அடிக்கடி ஒரு லூசு உங்களை பாத்து கேக்கும்…அதே லூசு தானே…:))\

  அக்கா தங்கைகள் என்னா ஒரு ஒற்றுமை

  • priya.r சொல்கிறார்:

   வாங்க சார்

   எனக்கு வாய்ந்த அருமையான தோழிகள் மற்றும் தங்கைகள் ரெம்பா திறமைசாலிகள்

   என்ன ! வாய் மட்டும் தான் – – — ஹ ஹா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: