துப்பறியும் கதை .1

 

 

பாச தலைவிக்கு வணக்கம்.

இது ஒரு (நையாண்டி) துப்பறியும் கதை !

அனைத்துலக பெண் பதிவர்களின் முதல் மாநாடு

பெசன்ட் நகர் அருகில் உள்ள புகழ் பெற்ற ரெசார்ட் வளாகத்தில்

வெள்ளி கிழமை  இனிதே  தொடங்கியது ;அது ஒரு நவீன வசதி கொண்ட

 உணவு அருந்த மற்றும் தங்கும் அறைகளை கொண்டது .,வெளியூர் மற்றும் வெளிநாட்டு

பதிவர்கள் பெரும்பாலனோர் அங்கேயே தங்கி கொண்டனர்

சனி கிழமை நடந்த வழக்காடு மன்றத்தில்

கல்வியா
செல்வமா
வீரமா

என்ற தலைப்புகளில் பேசிய

புவனி ,ப்ரியா ,அனாமிகா  தமக்காக

ஒதுக்க பட்ட அறைகளில் தங்க சென்றார்கள்

அனாமிகா அடுத்த நாள் லீவ் என்பதால் சொந்த வேலையாக
 
கொழும்பு போய் விட்டு நாளை இரவு வந்து விடுகிறேன் என்று சொல்லி

 

விட்டு சென்று விட்டார்

ஞாயிறு காலை சுமார்  7 . 30 மணி முதல் கோவை கோமள வள்ளியையும்

திருப்பூர் திலகவதியையும் (உண்மை பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன!)

 

காணவில்லை

இது தெரிந்த விழா அமைப்பாளிகள் செய்த உரையாடல்கள் இதோ:-

ஏம்மா;அவங்க செல் நம்பர் க்கு பேசி பார்த்தீங்களா
 
இல்லைங்கா !அவங்க ரெண்டு பேரும் டம்மி பீஸ் அவங்களை போய் யாரு

 

கடத்தி இருக்க போறாங்க”

 “ரெண்டு பேருடைய செல்லும் நீங்கள் தொடர்பு கொண்ட நபர் தொலைத்

 

தொடர்புக்கு வெளியே இருக்கிறார் என்று வருதுங்க மேடம்

 

எதுக்கும் அனாமி க்கு  போன் போட்டு கேட்போமா “

 

அனாமி .,இங்கே மாநாட்டில  இருந்து பேசறோம்
திடீர்ன்னு புவனியையும் ப்ரியாவையும் காணலே”

 


அனாமி : இதுக்கு தான் ப்ரியக்கா கிட்டே  தலை தலையாய் அடிச்சுக்கிட்டேன் 
அடபாவி கூட சேராதேன்னு ………………. எங்கே கேட்டாங்க !

இதோ பாருங்க அப்பாவியை எல்லாம் யார்னாலும் கடத்தி கிட்டு எல்லாம் போய் இருக்க முடியாது
அப்படி போய் இருந்தாலும் இன்னைக்கு சாயந்திரத்திர்க்குள்ளே அவங்களே அழுது கிட்டு  கொண்டு வந்து விட்டுடுவாங்க”
 .
என்ன எல்லோரும் அனாமி சொல்றதை கேட்டீங்களா
அடுத்து என்ன செய்யலாம்

ஒருவேளை அப்பாவியிடம்  அறிவு கொஞ்சம்  அதிகமாக இருக்கு என்றோ
திலகவதியிடம் பணம் கொஞ்சம் அதிகமாக இருக்கு என்றோ யாராவது
கடத்தி இருக்கலாம் இல்லையா”

அல்லது அவர்களே விருப்பட்டு தொலைந்து விட்டார்களோ
இதனால் அவர்களுக்கு என்ன லாபம்
பப்ளிசிட்டி கிடைக்கும் இல்லையா
 
ஆளாளுக்கு ஒன்னு சொல்லி சொல்லி குழப்ப வேண்டாம் .,
எனக்கு வாய்ஸ் இருக்கு பேசாம சிபிஐ கிட்டே விட்டுடலாமா “

அவ்வளோ தூரம் வேண்டாம்

அப்போ பேசாம கனிஷ்கா,வசந்தா கிட்டே சொல்லி வர சொல்லலாம் “

அவங்களை டெல்லி யில் இருந்து வர சொல்லணும்

ஏன் நம்ம பொற்கொடி கிட்டே சொல்லி பார்க்க சொன்னா என்னா?

 

சரி அது கூட சரி தான்

 

யாராவது கொடியை வர சொல்லுங்க 

 

கொடி வருகிறார் .

 

கொன்னுட்டீங்க போங்க” ,என்று அலை பேசியில் பேசி கொண்டு
வரும் கொடி எல்லோருக்கும் பரிச்சியமானவர் தான்;

 

கொடியிடம் விவரம் சொல்ல படுகிறது.

 

அவர் இந்த கேசை எடுத்து கொண்டு இருவரையும் கண்டு பிடித்து தர ஒப்பு கொண்டாரா இல்லையா ?!

தொடரும்

 
Advertisements

35 Responses to துப்பறியும் கதை .1

 1. Karthik சொல்கிறார்:

  ஹஹஅஹா. சூப்பர் தொடக்கம். அப்பாவியை கடத்திகிட்டு போனவங்க அவங்க சொல்ற கதையே கேட்டே அழுதுகிட்டு கொண்டுவந்து விட்டுருவாங்க

 2. Karthik சொல்கிறார்:

  //ஒருவேளை அப்பாவியிடம் அறிவு கொஞ்சம் அதிகமாக இருக்கு என்றோ
  //

  என்னது இது ?? ஓ சரி சரி கதைதானே. கதைல பெரும்பாலும் உண்மைக்கு நேரேதிராதான சொல்லுவாங்க

 3. Ana சொல்கிறார்:

  Wow. Priyakka. you are amazing. உங்களுக்கு நிறைய நகைச்சுவை வரும். நீங்க மட்டும் தொடர்ந்து எழுதினீங்கன்னு வையுங்க, எல்லோருமே க்ளீன் போல்ட். கொஞ்ச அதிகமாகத் தான் எழுதறது. அது என்ன அப்பாவிக்கு போடற பின்னூட்டத்தில் பாதி கூட இங்க இல்ல. கொஞ்சம் அதிகமா எழுதுங்க. இந்த மூணு பெண்களில் பெரிய சோடாப்புட்டி கண்ணாடியோட நிக்கறது வில்லங்க சிகாமணி ப்ரொம் கனடா. அப்புறம், ரொம்ப பின்னுக்கு அப்பாவி கணக்கா நிக்கறது நீங்க. அந்த சந்தன/மஞ்சள் சட்டை போட்டுக் கொண்டு சீரியசாக வேலை செய்வது நானாம்.

  கார்த்தி சார் சொன்னதை எல்லாம் நூறு வாட்டி வழிமொழிகிறேன்.

  • priya.r சொல்கிறார்:

   வாப்பா அனாமி !

   ரெம்ப தேங்க்ஸ் 🙂

   அதுக்கென்ன எழுதிட்டா போச்சு ;சரி சரி

   ஆமாமாம் ;போட்டோ இருப்பது நீயும் தான் !அப்போ போட்டோ வில தான் வேலை செய்வேன்னு சொல்லு 🙂

   இப்போ தான் உன்னிடம் இருந்து அதிக அளவு பின்னூட்டம் வந்து இருக்குன்னு நினைக்கிறேன்

   அதற்கு ஒரு சிறப்பு நன்றி

   அப்பாவி பற்றிய உனது மென்மையான மேன்மையான கருத்துகளுக்கு

   அவரே வந்து பதில் சொல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன் 🙂

 4. Karthik சொல்கிறார்:

  //இந்த மூணு பெண்களில் பெரிய சோடாப்புட்டி கண்ணாடியோட நிக்கறது வில்லங்க சிகாமணி ப்ரொம் கனடா./

  heheheh super anamika

 5. Geetha Sambasivam சொல்கிறார்:

  என்னத்தைத் துப்பினீங்க?? இப்போ அதை அறியச் சொல்லி இருக்கீங்க?? ஒண்ணுமே புரியலையே உலகத்திலே! 😛

  • priya.r சொல்கிறார்:

   எவ்வளோ குரு பக்தியோட பாச தலைவலிக்கு மன்னிக்கவும் தலைவிக்கு வணக்கம் என்று எல்லாம் போட்டு முதல் தடவையா ஒரு கதை எழுத வந்திருக்கும் உங்கள் கொ ப செ வை இப்படியா கேள்வி கேட்பது 🙂 கண்டு பிடியுங்கோ கீதாம்மா !

 6. chandrasekaran T R சொல்கிறார்:

  அப்பாவியையும் பிரியாவையும் யார் கடத்திண்டு போனாலும், எதுக்காக கடத்திண்டு போனாலும் எங்களது மனமார நன்றிகள். போலீஸ் என்ன கூர்க்ககிட்ட கூட நாங்கள் கம்பெளயன்ட் கூடுக்கமாட்டோம் என்பது சத்தியம். எவ்வளவு நாளைக்கு அப்பறம் நாங்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் நீங்களா பணம் எதுவும் கேக்கலைன்னா கூட பரவாயில்லை நாங்களே எவ்வளவு கேட்டாலும் பரவயில்லை கொண்டு வந்து நீங்கள் சொன்ன இடத்தில் கொடுக்கிறோம். ஆனால் எக்காரணம் கொண்டும் தொல்லை தாங்காமல் திருப்பி மாத்திரம் கொண்டு வந்து விட்டு விடாதீர்கள் என்று மன்றாடி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
  இப்படிக்கு
  வதை (உதைஎன்று வாசித்தாலும் பொருந்தும்) பட்டு நொந்து நூலாகிப் போன
  உங்கள்
  கோவிந்து–ரவி

  • priya.r சொல்கிறார்:

   ROFL !

   ஏன் சார் ஏன் இந்த கொலை வெறி !

   இப்படியா உண்மையை புட்டு புட்டு வைக்கிறது 🙂

   அப்பாவி யோட ரங்க்ஸ் அழுது கிட்டே இருந்தாராம் !

   (அப்பாவியோட மைன்ட் வாய்ஸ் :அது ஆனந்த கண்ணீரா இருக்கும் ! )

 7. அப்பாவிதங்கமணி சொல்கிறார்:

  //இது ஒரு (நையாண்டி) துப்பறியும் கதை//

  துப்பறிவோம் துப்பறிவோம்…..:))

  //அனாமிகா அடுத்த நாள் லீவ் என்பதால் சொந்த வேலையாக கொழும்பு போய் விட்டு நாளை இரவு வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்//

  இது தான் முதல் க்ளு… அப்படிக்கா போற மாதிரி போயிட்டு இப்படிக்கா வந்து கடத்திட்டா… இதுல சந்தேகமே இல்ல

  • priya.r சொல்கிறார்:

   வாங்க புவனா ! ஆமாம் அறியலாம் அறியலாம் இந்த குளு கூட நல்லா தான் இருக்கு ;அதற்கு ஒரு மோடிவ் வேணுமே ?!

 8. அப்பாவிதங்கமணி சொல்கிறார்:

  //ஞாயிறு காலை சுமார் 7 . 30 மணி முதல் கோவை கோமள வள்ளியையும் திருப்பூர் திலகவதியையும் (உண்மை பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன!)//

  இதெல்லாம் அநியாயம் ப்ரியா… உங்களுக்கு மட்டும் மாடர்ன்ஆ திலகவதினு பேரு, எனக்கு கோமளவள்ளியா? நோ நோ… நெவெர் நெவெர்… ரைமிங்காக சொன்னேன்னு சாக்கு எல்லாம் வேண்டாம்… ரைமிங்குன்னா “கோவை கோஹினூர் வைரம்” னு சொல்லி இருந்தா என்னவாம்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..:)))

  //அவங்க ரெண்டு பேரும் டம்மி பீஸ் அவங்களை போய் யாரு கடத்தி இருக்க போறாங்க//

  இதை சொன்னது யாரு? அந்த ரிப்போர்ட் இன்னும் ஒரு மணி நேரத்துல என் டேபிள்க்கு வரணும்… இல்லைனா நான் எல்.கேவை கடத்த ஏற்பாடு பண்ண வேண்டி வரும்…:))

  • chandrasekaran T R சொல்கிறார்:

   இதெல்லாம் அநியாயம் ப்ரியா… உங்களுக்கு மட்டும் மாடர்ன்ஆ திலகவதினு பேரு, எனக்கு கோமளவள்ளியா? நோ நோ… நெவெர் நெவெர்… ரைமிங்காக சொன்னேன்னு சாக்கு எல்லாம் வேண்டாம்… ரைமிங்குன்னா “கோவை கோஹினூர் வைரம்” னு சொல்லி இருந்தா என்னவாம்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..:)))
   அதானே…. அப்பாவி சொன்னது கரெக்ட். அப்பிடியே ரைம்மிங்கத்தான் சொல்லனும்ன கோ க்கு கோ தான் போடனும்ன எவ்வளோ நல்ல பேர் இருக்கு “கோவை கோமாளி” இல்லே கோவை கோவே…….. ஏடிம் கவலை வேண்டாம் நான் பாத்துக்கிறேன் அவுங்களை நீங்க டென்ஷன் ஆகாதீங்க!

  • priya.r சொல்கிறார்:

   சரி சரி இது போய் ஏன்டி கண்டிக்கிறேன் தண்டிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இந்த பெயர் ஓகே வா *கோவை கோபிகா ….*….. இந்த மாடர்ன் பெயர் போதுமா இன்னும் வேற வேணுமா 🙂

   ஏன் உனக்கு கீதா மாமி ,கெக்கே பிக்குனி சொல்லி இருப்பாங்கன்னு தோணலே 🙂 LK இந்த கதையில் ஒரு பார்வையாளர் மட்டுமே 🙂

 9. அப்பாவிதங்கமணி சொல்கிறார்:

  //இதுக்கு தான் ப்ரியக்கா கிட்டேதலை தலையாய் அடிச்சுக்கிட்டேன் அடபாவி கூட சேராதேன்னு//

  அப்ப கால் காலா அடிச்சுட்டு இருந்திருந்தா அக்கா கேட்டு இருப்பாங்களோ… (அது சரி, இப்படி தலை தலையா அடிச்சு தான் பாவம் இந்த பொண்ணு இப்படி ஆய்டுச்சுனு சொல்றாங்களே, அது உண்மையா?…:)))

  //அல்லது அவர்களே விருப்பட்டு தொலைந்து விட்டார்களோ, இதனால் அவர்களுக்கு என்ன லாபம், பப்ளிசிட்டி கிடைக்கும் இல்லையா//

  ஹா ஹா ஹா… இது நல்ல ஐடியாவா இருக்கே… ஆனா எனக்கு விளம்பரம் புடிக்காது யு சி…..:)))

  • priya.r சொல்கிறார்:

   ஏன்டி எப்போ பார்த்தாலும் அனாமியை லூசுன்னு சொல்லி கிட்டே இருக்கிறே 🙂 கால்ன்னு சொன்ன வுடனே நியாபகம் வருது அவ காலை படம் எடுத்து அவ ப்ரோபைல் ல்லில் போட்டு இருந்ததை பார்த்தாயா நீ கையை மெகந்தி எடுத்து போட்டதற்கு பதிலுக்கு பதிலாம் ! ஹ ஹா

  • priya.r சொல்கிறார்:

   இப்படி விளம்பரம் பிடிக்காதுன்னு சொல்லி சொல்லியே ஒரு அப்பாவி செமையா விளம்பரம் பன்னறாலாமே! அது நீ இல்லையா 🙂

   2011/5/2 priya ravi

   > ஏன்டி எப்போ பார்த்தாலும் அனாமியை லூசுன்னு சொல்லி கிட்டே இருக்கிறே 🙂 > கால்ன்னு சொன்ன வுடனே நியாபகம் வருது > அவ காலை படம் எடுத்து அவ ப்ரோபைல் ல்லில் போட்டு இருந்ததை பார்த்தாயா > நீ கையை மெகந்தி எடுத்து போட்டதற்கு பதிலுக்கு பதிலாம் ! ஹ ஹா > > >

 10. அப்பாவிதங்கமணி சொல்கிறார்:

  //”கொன்னுட்டீங்க போங்க” ,என்று அலை பேசியில் பேசி கொண்டு வரும் கொடி//

  வாட் அ டைமிங் வாட் அ டைமிங்… சூப்பர் ப்ரியா அக்கா… கொன்னுட்டீங்க போங்க…:)))

  //அவர் இந்த கேசை எடுத்து கொண்டு இருவரையும் கண்டு பிடித்து தர ஒப்பு கொண்டாரா இல்லையா //

  ஒப்புக்கொண்டு அவரும் காணாமல் போனாரா இல்லையா? அதையும் பாப்போம்…:)))

  • priya.r சொல்கிறார்:

   ஹி ஹீ நன்றி கோபிகா ஆமா ! இதென்ன ஒரு டர்னிங் பாயிண்ட் ! கண்டு பிடிக்க ஒப்பு கொண்டால் கொடியும் காணாமல் போய் விடுவார் என்பது எல்லாம் ரெம்ப ஓவர் தெரியுமா

 11. அப்பாவிதங்கமணி சொல்கிறார்:

  //அப்பாவியை கடத்திகிட்டு போனவங்க அவங்க சொல்ற கதையே கேட்டே அழுதுகிட்டு கொண்டுவந்து விட்டுருவாங்க//

  அடப்பாவி Karthi… என்னா ஒரு வில்லத்தனம்…. grrrrrrrrrrrr…..

  //என்னது இது ?? ஓ சரி சரி கதைதானே. கதைல பெரும்பாலும் உண்மைக்கு நேரேதிராதான சொல்லுவாங்க//

  வேற வழியே இல்ல… கார்த்திய தூக்கிற வேண்டியது தான்…:))

  //அந்த சந்தன/மஞ்சள் சட்டை போட்டுக் கொண்டு சீரியசாக வேலை செய்வது நானாம்//

  நிஜத்துல வேலை செய்யாதவங்க கதைலயாச்சும்…ச்சே… சும்மா பிக்சர்லாச்சும் வேலை செய்யட்டும்னு ப்ரியா அக்கா அப்படி போட்டு இருக்காங்க போல ……:))

  //heheheh super அனாமிகா//
  இரு இரு… வெக்கறேன் வேட்டு உங்களுக்கெல்லாம்…:))

  //வதை (உதைஎன்று வாசித்தாலும் பொருந்தும்) பட்டு நொந்து நூலாகிப் போன உங்கள் கோவிந்து–ரவி//

  You too TRC அங்கிள்… அவ்வ்வ்வவ்வ்வ்….. உங்களையும் விலைக்கு வாங்கிட்டாங்களா? இருங்க இருங்க பேசிக்கறேன்…:)))

  • priya.r சொல்கிறார்:

   இவர்கள் எல்லாம் காசுக்காக வந்து கூட்டம் இல்லை அப்பாவி காணாமல் போய் விட்டாரே என்று (ஆனந்த) கண்ணீரோடு வந்த கூட்டம் !

 12. Sankar Narasimhan சொல்கிறார்:

  அக்கா தங்கை இரண்டு பேரையும் கடத்தி போனவங்களுக்கு
  நன்றி நன்றி
  இப்படிக்கு
  ரவி & கோவிந்த்.

 13. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்… நேரம் உள்ள போது பாருங்கள்… நன்றி… சுட்டி இதோ… http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

  • priya.r சொல்கிறார்:

   குறிப்பிட்டுள்ளதற்கு நன்றி புவனா 🙂
   விருந்தினர் வருகை ;வேலை அதிகம்;
   பதிவுக்கு சரியாக வர முடியவில்லை 😦

 14. Porkodi சொல்கிறார்:

  !!!! என்ன்ன்ன்னது, என்ன காமெடி நடந்துட்டு இருக்கு இங்கே!!! இதெல்லாம் டூ மச், நீங்க ஏன் வர்ட்ப்ரெஸ்லே இருக்கீங்க, ப்ளீஸ் ப்லாக்ஸ்பாட்டுக்கு மாத்துங்களேன்.. :(((( எனக்கு நோட்டிஃபிகேஷன் ஈமெயிலுக்கு தான் போகும், அதை பார்க்கலேன்னா நினைவு வரவே வராது!!! ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்ரியாக்கா! அப்பாவியை கடத்தற அளவு சமர்த்து இருக்கு, இது முடியாதா??

  • priya.r சொல்கிறார்:

   கருத்துக்கு நன்றி கொடி ;நீங்க தான் நேற்று subcribe செய்து விட்டீர்களே ; அவசியம் ப்ளாக் ச்பாட்லில் ஆரம்பிக்க தான் வேண்டுமா ?!

   என்ன்ன்னாது !நான் அப்பாவியை கடத்தினேனா ;அதுவும் அப்பாவியை ! முடியுமா என்னால் (ஜூனுன் தமிழ் மாதிரி இருக்கோ !)

 15. Porkodi சொல்கிறார்:

  இதென்னடா வம்பா போச்சு நான் கேசை எடுத்துக்கிட்டேனா இல்லியா, எனக்காவது சொல்லுங்க!

 16. kunthavai சொல்கிறார்:

  ha..ha.. priya superb. (came toooo late)

  இந்த மாதிரி கதையெல்லாம் எழுதியிருக்கிறேன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாம்
  tooo bad.

 17. priya.r சொல்கிறார்:

  வருகைக்கு நன்றி குந்தவை
  எதுக்கு உங்களுக்கு தொந்தரவு என்ற நல்ல எண்ணமும் தான் 🙂 ஹ ஹா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: