துப்பறியும் கதை .1 தொடர்ச்சி 1

இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் ;இவ்வளோ சின்ன மேட்டரை
கொடுக்கறீங்களே என்று சற்று பிகுவுடன் ஒப்பு கொண்டார்
துப்புறியும் நிபுணி கொடி (கீதாம்மா என்ன சொல்ல போறாங்களோ !)

நேரம் 10 .00
கொடிமனதிற்க்குள் தனது மானசீக  குருநாதர் சுஜாதா அவர்களை வணங்கி,  ரிசப்சன் சென்று கோபிகா(கோமள வள்ளி என்ற பெயர் அப்பாவிக்கு பிடிக்கலையாம்)  திலகா இருந்த அறையை பற்றி விசாரித்தார் ;

சாவி திரும்ப கொடுக்க வில்லை
அவர்களே எடுத்து சென்று விட்டார்களாம்
அவர்கள் யாரிடம்  அதிகமாக பேசினார்கள் என்ற தகவலை டெலி போன்ஆப்ப ரேடர் ரிடம்  கேட்டு
பெற்று கொண்டார்
ஒரே எண்ணுக்கு அதிகமாக பேசப்பட்டு இருக்கு !
அந்த நெம்பர் அம்பத்தூர் கீதாமாமி உடையது .,அவர் முகத்தில் சிறு புன்னகை
இவர்கள் இருவருக்கும் கீதா மாமி என்றால் பிடிக்குமே
சோ ஒன் பிளஸ் ஒன் இஸ் = டூ
கீதா மாமிக்கு போன் செய்து பேசபடுகிறது
பாட்ஸ் ! நான் கொடி பேசறேன்
ஏண்டி கடன்காரி ! எதனை தடவை சொல்லி இருக்கேன்
இப்படி பாட்ஸ் ன்னு கூப்பிடாதேன்னு ;நோக்கு அறிவே இல்லையா………..

சரி மாமி ;விடுங்கோ நம்ம  விசயத்தை  அப்புறம் பேசிக்கலாம்
உங்களை தேடிட்டு ரெண்டு அக்காக்களும் வந்தாங்களா
யாரை சொல்றே
கொடி: அது தான் உங்க ஜால்ரா திலகாவும் கோபிகாவும் !

காலயில எட்டு மணிக்கு  வந்தாங்க
அவசரமா டிபன் சாப்பிட்டு 8 .30  கிளம்பிட்டாங்க
கொடி: எங்கே போறேன்னு ஏதாவது சொன்னாங்களா
மதியம் சாப்பாட்டுக்கு வர சொன்னேன்
நாங்க ரெண்டு பேரும் நான் வெஜ் தான் சண்டே சாப்பிடுவோம்
வெளியே பார்த்துக்குறோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க
எதுக்கு கேட்கறே
கொடி:இங்கே மாநாடு  வளாகமே ஒன்பது மணியில் இருந்து அவர்களை காணலேன்னு
அல்லோகல படுது;நீங்க சாவகாசமா கேட்கறேள்!
அப்படியா அவங்க புறப்படும் பொது எங்கே போறீங்க ன்னு கேட்டா நல்லா இருக்காது
பாருங்கோ ;அதனாலே கேட்கலே
பயப்படும் படியா ஒன்னும் இருக்காதுன்னு நேக்கு தோன்றது
நோக்கு ?
கொடி: எதையும் இப்போ சொல்ல முடியாது மாமி!
சரி சரி ;அவங்க ஆத்து காரங்க நெம்பர் மாமா கிட்டே இருக்கு ;பேசி பார்த்துட்டு
நோக்கு சொல்றேன்
கொடி:சரி மாமி ;உங்கள திரும்பவும் காண்டாக்ட் பன்றேன் ;பை பை
பை பை

கீதா மாமி 😦 தனக்குள் )இந்த கொடி சும்மாவே கத்தி,கொலை,விபத்துன்னு  எழுதுவாளே………..
நான்னா வே அவளுக்கு பயம் ! (இளக்காரம் ன்னு வெளியே சொல்றதா காதில் விழுந்துட்டு தான் இருக்கு)
என்ன திமிர் இருந்தா ஜால்ரா ன்னு சொல்லுவா !

எனக்கு வேண்ட ப்பட்டவங்க ன்னு இந்த கொடியே அவங்களை ஏதாவது பண்ணிடுவாளோ…………………
இவளை போய் கண்டுபிடிக்க சொல்லி இருக்காங்களே 😦
ஈஸ்வரா ! கொடிக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்களை கண்டு  பிடிக்க
நீ தான் மனசு வைக்கனும் !

ப்ரியாவுக்கு இங்கேயே மதியம் வரை இருக்கணும்னு தான் ஆசை
இந்த ATM  தான் அடம் பண்ணி ப்ரியாவையும் சேர்த்து அவசரமா எங்கேயோ
கூட்டிட்டு போய் இருக்காங்க !
இந்த ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் விஷயம் இருக்கோ
எப்போ பார்த்தாலும் சிரிப்பு பேச்சு தான் ……………
என்னமோ நல்லது நடந்தா சரி

மணி 11 .00
கோபிகாவின் ரசிகைகள் காயத்ரி ;லதா ,சீதா ,அனு ,மாதங்கி ,சுசி ,ப்ரியா ,சித்ரா இன்னும் பிறர்
கண் கலங்கி அழுது  கொண்டே கொடியிடம் விபரத்தை கேட்க ஆரம்பித்தனர்
போங்க போங்க ;இப்போ என்ன – – – நடந்துடுச்சுன்னு எல்லோரும் ஒப்பாரி வைக்கறீங்க என்று
சொல்லி அனைவரையும் திடுக்கிட வைத்தார் !

மாற்று சாவி வாங்கி அவர்கள் இருந்த அறையை திறந்து பார்த்தார் ;
மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தார்
இருவரின் பிரிப் கேஸ் கள் இருந்தது ;  ஹான்ட் பேக்  இல்லை ;
நியூ பேப்பர் டிரே   மேல் கிடந்தது
வேறு ஒன்றும் தடயம் கிடைக்க வில்லை !

காலை 7 மணிக்கு அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த ஆஷா(இயற் பெயர் :முத்தம்மா! )
விடம் விசாரித்த போது அம்பத்தூர் எப்படி போவது என்று கேட்டதாகவும் அவள் போகும் வழி சொல்லி
ஆட்டோ அல்லது கால் டாக்சி யில்   போங்கள் என்று  சொன்னதை குறித்து கொண்டு
மேற் கொண்டு விசாரித்தார்
பக்கத்தில் உள்ள தியேட்டர் லில் என்ன படம் ஓடுகிறது ;மதியம் காட்சி எப்போ ஆரம்பிக்கும் என்று அவர்கள்
கேட்டார்கள் என்று ஆஷா கொடி இடம் சொன்னாள்

கொடியின் முகத்தில் சிந்தனை ஓட்டம் !

மணி 12 .00 மதியம்

மீண்டும் விழா அமைப்பாளிகள்  கூட்டம்
தொடங்கியது
என்னப்பா ஏதாவது தகவல் கிடைத்ததா
ஒன்னும் இல்லைங்கா
ஏண்டி ! திரும்பவும் உன்னை செல் ல்லிளில்
அவர்களை தொடர்பு கொள்ள சொல்லி இருந்தேனே
ஆமாம் மேடம் ;இப்போது நீங்கள் தொடர்பு கொண்ட எண்
சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது என்று வருகிறது ங்க மேடம்
என்னடாப்பா  இது ;வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனை
அப்பா குருவாயுரப்பா ;அவங்க பத்திரமா திரும்ப கிடைக்க வைப்பா :இது சந்தியா(ரொம்ப பேர் அவங்களை மறந்துடீங்க:( )
ஓ ஜீசஸ் ப்ரியா,அப்பாவி  எனக்கு வேணும் இது பெட்ரிசியா,சாதனா
யா அல்லா அப்பாவி ,ப்ரியா எங்களுக்கு கிடைக்கணும் இது மகி , ஹுசைனம்மா.

சரி சரி ;நாம் ஒரு ஒன்றை  மணிக்கு கூட்டு பிராத்தனைக்கு ஏற்பாடு செய்வோம்
அது முடிந்ததும் கொடி நம் எல்லோரிடமும் பேச வேண்டுமாம் !
சீய்கிறம் மதியம் உணவு சாப்பிட்டு வந்து சேருங்க !
கூட்டம் கலைகிறது
ரீசப்சன்  இருந்து அழைப்பு ;போனில் அழைப்பது யார் ?!

தொடரும் ……………
அடுத்த அடுத்த பதிவில் நிறைவு பெறலாம் 🙂

Advertisements

45 Responses to துப்பறியும் கதை .1 தொடர்ச்சி 1

 1. கார்த்திக் சொல்கிறார்:

  எங்கள் தானைத் தலைவி கீதாம்மாவை கிண்டல் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது

  • priya.r சொல்கிறார்:

   கருத்துக்கு நன்றி கார்த்திக்
   அட்சோ ;நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்
   என்றும் எங்கள் பாச தலைவி தான் எங்களுக்கு நிரந்தர தலைவி 🙂
   எங்கேயும் அவரை கிண்டல் செய்ய வில்லை LK.
   கொடியும் அவரும் பேசும் பொழுது இப்படி தான் இருக்கும் என்பது எனது யூகம் மட்டும் தான் 🙂

 2. Sankar narasimhan சொல்கிறார்:

  கொடி
  தயவு செய்து அவங்களை கண்டுபுடிசுடதே கொஞ்சநாள் நிம்மதியா இருக்கலாம். நான் வேனும்னா மாப்பிளைகளிடம் சொல்லி உனக்கு சிலை வைக்க சொல்லுறேன்.

  • priya.r சொல்கிறார்:

   கருத்துக்கு நன்றி சார்
   ஹ ஹா கொடி ஏற்கனவே உடனே கண்டு பிடித்து கொடுப்பது என்று முடிவு எடுத்துட்டாங்களாமே!
   உண்மையா ;இருங்க , கேட்டு சொல்றேன் !
   அப்பாவியை பற்றியும் அவரை சுற்றியும் உள்ள நிகழ்வுகளை வேறு ஒரு பதிவாக போட வேண்டுமே 🙂

 3. Sankar narasimhan சொல்கிறார்:

  \உள்ள தியேட்டர் லில் என்ன படம் ஓடுகிறது ;மதியம் காட்சி எப்போ ஆரம்பிக்கும் என்று அவர்கள்
  கேட்டார்கள்\

  அடபாவிகளா உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா. கடைசியில் தியேட்டர்இல் படம் பார்க்க போனது எல்லாம் கடத்தலா.

  • priya.r சொல்கிறார்:

   ஹ ஹா !
   இதுக்கே இப்படி சாக் ஆனால் எப்படி சார்
   இன்னும் இருக்கே!!
   அப்பாவியின் மனதை யார் அறிவார் 🙂

 4. Sankar narasimhan சொல்கிறார்:

  கீதா மாமி & போர்கொடி டயலாக் அருமை.

  • priya.r சொல்கிறார்:

   தேங்க்ஸ் சார் 🙂
   LK வின் கமெண்ட்ஸ் பார்த்து அந்த பகுதியை எடிட் செய்யலாமா
   என்று கூட நினைத்தேன் 😦

 5. Sankar narasimhan சொல்கிறார்:

  \இந்த ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் விஷயம் இருக்கோ
  எப்போ பார்த்தாலும் சிரிப்பு பேச்சு தான் ……………\
  கீதா மாமி
  ப்ளாக் லே இரண்டு பேரும் வரி வரிக்கு கமெண்ட் எழுதுவார்கள் நேரில் பார்த்தா சும்மா வா இருப்பார்கள்.

 6. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  மொதல்ல சொல்ல வேண்டியது… எழுதின விதம் நிஜமாவே கொடி கதய படிக்கற மாதிரி இருந்து flow (நோ அபன்ஸ் கொடி…:)))

  //ஏண்டி கடன்காரி//
  இந்த டயலாக் தப்பு…ஏன்னா மாமி அஞ்சு வயசு கொழந்தைய கூட வாங்க போங்கனு தானே பேசுவாங்க… not that I’m supporting maami… I’m trying to correct the principle errors…ha ha ha…

  //அது தான் உங்க ஜால்ரா திலகாவும் கோபிகாவும்//
  ஹலோ… நான் கேசரி கட்சியாக்கும்… :))

  • priya.r சொல்கிறார்:

   தேங்க்ஸ் அப்பாவி ! ஆமா;கொடி ஒன்னும் கோவிச்சுக்க மாட்டாங்க தானே ஏம்பா நீ வேற கடன்காரி மேட்டரை இவ்வளோ பெரிது படுத்தறே இதோ பாருப்பா ;நீ கீதாம்மா கட்சிக்கு வந்தா துணை முதல்வர் பதவி உனக்கு தான் நல்ல யோசனை பண்ணிக்கோ வேற கட்சியிலே சேர்ந்தா சாப்பிட கூட கேசரி கிடைக்காதாம் 🙂

 7. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //மதியம் சாப்பாட்டுக்கு வர சொன்னேன்//
  அதுவும் எப்படியும் பக்கத்து டீ கடைல இருந்து தான் வரும்னு பயந்துட்டு தான் எஸ்கேப் ஆயட்டோம் என்ற உண்மையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்…:)))

  //நான்னா வே அவளுக்கு பயம்//
  சொல்லவே இல்ல…:))

  //இந்த ATM தான் அடம் பண்ணி ப்ரியாவையும் சேர்த்து அவசரமா எங்கேயோ கூட்டிட்டு போய் இருக்காங்க//
  என்ன செய்ய? மாமி வேற கேசரி செய்யறேன் லஞ்ச்’க்குனு சொல்லிட்டு இருந்தாங்க… ப்ரியா உயிரை காப்பாத்தும் பொறுப்பை ரவி மாம்ஸ் எனக்கு குடுத்து இருந்தார்… அதான் கூட்டிட்டு வந்துட்டேன்…:))

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கு நன்றி அப்பாவி

   இந்த கமெண்ட் க்கு மட்டும் கீதாம்மாவே பதில் தருவது தான் சால சிறந்தது

   கீதாம்மா ;கொஞ்சம் வாங்க !

 8. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //ஆஷா(இயற் பெயர் :முத்தம்மா)//
  ஹா ஹா ஹா… இது செம..:))

  //கொடியின் முகத்தில் சிந்தனை ஓட்டம்//
  ஓடட்டும் ஓடட்டும்…:))

  //ரீசப்சன் இருந்து அழைப்பு ;போனில் அழைப்பது யார்//
  இந்த மொக்கைல சஸ்பென்ஸ் வேறயா? அப்ப என் கதைல சஸ்பென்ஸ் வெக்கறதுல தப்பே இல்ல ஜென்டில்-வுமன்…:)))))

  • priya.r சொல்கிறார்:

   சின்ன சின்ன விஷயங்களை கூட கவனித்து கமெண்ட்ஸ் எழுதும் அப்பாவிக்கு பாராட்டுக்கள்!

   ஹலோ ஹலோ

   சஸ்பென்ஸ் துப்பறியும் கதையிலே வைப்பாங்களா இல்லே காதல் கதையிலே வைப்பாங்களா

   இது என்ன புது கதைங்கறேன் 🙂

 9. Ana சொல்கிறார்:

  எனக்கு இந்த கதை ஈமெயில் அப்டேட்டிலும் வரல. புளொக்கர் டாஸ்போர்ட்டிலும் வரல. இப்ப நீங்க ப்ளொக்ஸ்பொட்டுக்கு மாத்த போறீங்களா இல்லையா. இந்த வேர்ட்பிரஸ் ஒரு சில்லெடுத்த பிரஸ். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 10. Ana சொல்கிறார்:

  //கொடி
  தயவு செய்து அவங்களை கண்டுபுடிசுடதே கொஞ்சநாள் நிம்மதியா இருக்கலாம். நான் வேனும்னா மாப்பிளைகளிடம் சொல்லி உனக்கு சிலை வைக்க சொல்லுறேன்.//

  ஹா ஹா ஹா ஹா. அசத்திட்டீங்க மாம்ஸ்.

 11. Ana சொல்கிறார்:

  ஹா ஹா ஹா ஹா. அசத்திட்டீங்க மாம்ஸ்.

 12. Ana சொல்கிறார்:

  கீதா மாமி & போர்கொடி டயலொக் அருமை.

  //இந்த மொக்கைல சஸ்பென்ஸ் வேறயா? அப்ப என் கதைல சஸ்பென்ஸ் வெக்கறதுல தப்பே இல்ல ஜென்டில்-வுமன்…:)))))//

  ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய் யாரு எங்க தலைவலி, சாரி தலைவி கதையை மொக்கைன்னு சொல்லறது. லூசு மீரா லூசு சதீசுன்னு லூசுகளாலேயே பிணையப்பட்ட கதைய எழுதிட்டு எங்க அக்காவை கொறை சொல்லுற அப்பாவி டவுன் டவுன்

  • priya.r சொல்கிறார்:

   வெல் செட் அனாமி!தேங்க்ஸ் டீ செல்லம்

   பார்த்தியா அப்பாவி ;எனக்கும் சப்போர்ட் இருக்கு தெரிஞ்சுக்கோ !ஹ ஹா

 13. Ana சொல்கிறார்:

  ////ஏண்டி கடன்காரி//
  இந்த டயலாக் தப்பு…ஏன்னா மாமி அஞ்சு வயசு கொழந்தைய கூட வாங்க போங்கனு தானே பேசுவாங்க…//

  ஐய்யா, கடங்காரின்னா என்னா ப்லோ வருது தெரியுமா. கீதா மாமி கண்டுக்கமாட்டாங்க.

  • priya.r சொல்கிறார்:

   நீயே அந்த அப்பாவி கடன்காரி கிட்டே சொல்லிடு சுனாமி ;

   ஆமா ஏண்டி கடன்காரி ! நீ தேர்வுக்கு படிக்காமே என்ன கும்மி வேண்டி கிடக்கு

   பின்னி புடுவேன் பின்னி 🙂

 14. Ana சொல்கிறார்:

  //தொடரும் ……………
  அடுத்த அடுத்த பதிவில் நிறைவு பெறலாம்//

  இது என்ன புது கதை. ஒரு 50 எபிசோட் ஆவது போடுக்கா. சிலபேர் ஜில்லுன்னு ஒரு ரவ்வை எல்லாம் போடறப்போ, நீங்க தாராளமாகவே 50 என்ன 100 எபிசோட்டே போடலாம். நீங்க போடுங்க. எல்லாத்துக்கும் 10 கமன்ட் இன்ஸ்டென்ட்டா வரும்.

  • priya.r சொல்கிறார்:

   ஹ ஹா

   அப்போ மூணு பேரோட என்ட்ரி ,அடித்த கொட்டம் ,செய்த நையாண்டி எல்லாம் பதிவா போடலாம்ன்னு சொல்றே

   எதுக்கும் நல்ல யோசிச்சு சொல்லு 🙂

 15. Ana சொல்கிறார்:

  //சரி சரி ;நாம் ஒரு ஒன்றை மணிக்கு கூட்டு பிராத்தனைக்கு ஏற்பாடு செய்வோம்//
  இதுங்க இரண்டும் நாலு நாளைக்கு கூட்டம் நடக்கிற பக்கம் வரக்கூடாதுன்னு தானே? ஹா ஹா ஹா.

 16. Porkodi சொல்கிறார்:

  அலோ எச்சூஸ்மீ மேய்டம் என்ன வச்சு நீங்க ஒண்ணும் காமடி கீமடி பண்ணலியே?!

  • Porkodi சொல்கிறார்:

   ஒரு அட‌ப்பாவி காணா போனதுக்கு பெரிய மத நல்லிணக்க வழிபாடே நடக்குது?! ம்ம்ம்ம் சீக்கிரம் எல்லாம் லைன்ல வந்து நில்லுங்க, விசாரிக்கணும்! முதல்ல ப்ரியாக்கா, எத்தனை நாளா இப்படி கீதா பாட்டியும் நானும் பேசிக்கறதை நோட்டம் விட்டுட்டு இருக்கீங்க? பாசப்பிணைப்புல இருக்க 2 பேர் பேசுறதை அவங்களுக்கு தெரியாம கேக்கறது எத்தனை பெரிய குற்றம் தெரியுமா? ம்ம்ம்ம்??

   • Porkodi சொல்கிறார்:

    நான் வேறே parvathapriya.blogspot.comனு அடிச்சு என்னடா இது துப்பறியும் கதை போய் பீர்பால் கதை இருக்கேன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன்!!!

   • priya.r சொல்கிறார்:

    அது சின்ன குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆரம்பித்த ப்ளாக்

    இந்த ப்லோகை கண்டு பிடித்த உங்கள் துப்பறியும் திறமை வியக்க வைக்கிறது !

    வந்தது தான் வந்தீங்க ;அதுக்கும் கமெண்ட்ஸ் போட்டு வந்தால் தான் என்னவாம் 🙂

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கொடி..

   • priya.r சொல்கிறார்:

    பாச பிணைப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதாம்மா சித்தே வரேளா !

    இதுக்கு நீங்க வந்து பதில் கொடுத்தா தான் சிறப்பா இருக்கும்னு நேக்கு தோன்றது

    கொடி ! தலைவி வந்துடுண்டே இருக்காங்க

    அப்புறம் மத நல்லிணக்கம் பிராத்தனைக்கு காரணம் அப்பாவி உலக புகழ் பெற்ற வளர்ந்து வரும் பதிவர் அல்லவா 🙂

    அப்புறம் நீங்க ஏன் அப்பாவியை முதலில் விசாரிக்க கூடாது 🙂

  • priya.r சொல்கிறார்:

   வருகைக்கு நன்றி கொடி ஹி ஹீ 🙂

  • priya.r சொல்கிறார்:

   சேச்சே !நீங்க எழுதின பதிவு பிடிச்சு இருந்துதா

   அதனாலே உங்களை வைத்து ஒரு துப்பறியும் (!) கதை எழுத ஆரம்பித்துட்டேன் கொடி 🙂

   2011/5/14 priya ravi

   > வருகைக்கு நன்றி கொடி > ஹி ஹீ 🙂 > >

 17. Ana சொல்கிறார்:

  பசங்களுக்குத் தானேக்கா லீவு. உங்களுக்குமா? ஓடிப்போய் மிச்ச கதையை எழுதி எனக்கு அனுப்புங்க. இல்லேன்னா அடப்பாவி கூட கூட்டு சேந்திடுவேன். ஆமா.

  • priya.r சொல்கிறார்:

   சரிடி! அப்பாவியை கூட சமாளிச்சுடலாம் ;உன்னையே சமாளிக்க முடியாது இதேலே அவளோடு கூட்டு ன்னு நீ வேற பய படுத்தாதே 🙂 நாளைக்கு போடறேன் போதுமா இன்னும் எத்தனை அத்தியாயம் எழுதட்டும் ! அதையும் சொல்லி போடு கண்ணு 🙂

 18. Porkodi சொல்கிறார்:

  oh, andha parvathapriyavum neenga thaanaa? oru parvathapriya paduthalaiye samalikka mudiyalai, innonu verayanu thalai therika odi vandhuten sorry! 🙂

 19. Sankar Narasimhan சொல்கிறார்:

  innum cinema poittu vantha kathaiyai elluthatha Priyamma down down down…
  Nannum Anavum Bhuvani katchi il sernthu viduvom

 20. Sankar narasimhan சொல்கிறார்:

  \Paarunga virunthu vaikkarennu sonna udane katsi maarideengaleeeee! \

  nee oru virunthu kodu un katchikku vanthuraen. un veedu endral nanka 4 paerum varuvom. athulaium un marumakkan rommba choosy. Avanai satisfy pannuna nee periya allthaan.

 21. aruna சொல்கிறார்:

  அட இப்ப்படி ஒரு கதை ஓடிட்டு இருக்கா!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: