CHEES O CHESS

எங்க  நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை வாங்கி கொள்ளும் வெளி நாட்டை சேர்ந்தஇறக்குமதி யாளர்களில் ஒருவரான கமிலா எனக்கு சீஸ் பாக்கெட்கள் பரிசளித்தார் ;சரி ஏதாவது செய்து பார்ப்போமே என்று  பாஸ்தா செய்து பார்த்தேன் சுவை சரியாக இல்லை ; மாம்ஸ் சாப்பிட்டு ஏதோ டேஸ்ட் குறைகிறதே என்று ஒரு வளரும் சமையல் கலை வல்லுனியியை குறை சொன்னார் .,

சரி என்ன குறை ?

 மசாலா குற்றமா

சீஸ் குற்றமா

இல்லை

உப்பின் அளவில் ஏதாவது எச்சு கம்மியா என்று கேட்க நினைத்து அவரின் முகம் போன போக்கினை பார்த்து பேசாமல் விட்டு விட்டேன் 🙂

இது பற்றி துப்பு துலக்கலாம் என்று யோசித்து ஒருவழியா கண்டு பிடித்து விட்டேன் !

அது என்ன வென்றால்  சீஸ் பாக்கட்டின் உட்புறம் டபுள் லேயரில் முதல் லேயரை பிரித்த நான் இரண்டாவது லேயர் சீஸ்  கலரில் இருந்ததை  பிரிக்காமல் அப்படியே போட்டு விட்டேன் என்பது தான் காரணம்:))

 சரி இன்று பர்கர் செய்வோம் என்று முடிவு செய்து நீல்கிரிஸ் சென்று பர்கர் பன்கள் மற்றும் ரெடி கட்லெட் வாங்கி வந்தேன் இப்போது செய் முறையை பார்க்கலாமா

முதலில் தோசை கல்லை சூடு செய்து அதில் இரண்டாக அரிந்த  பர்கர் பன்னை பட்டர் தடவி சற்று வாட்டி எடுத்து ஒரு பன்னை எடுத்து அதில் வாங்கி வந்த கட்லெட் ஐ வைத்து தக்காளி சாஸ் ,சற்று துருவிய கேரட் ,முட்டை கோஸ் ,தேங்காய் துருவலை போட்டு இன்னொரு பன்னால் மூடினால் பர்கர் ரெடி!

 என்ன இரெண்டே வரிகளில் ஒரு சிறந்த சமையல் குறிப்பை கொடுத்த  முதல் இல்லத்தரசி நானா :)) 

 நீங்கள் குறை சொல்வதற்கு முன்னால் எப்படி முழுவதும் செய்வது என்று நான் தெரிந்து கொண்டதை சொல்லி விடுகிறேன் 🙂

 தேவையானவை:

கட்லெட் செய்ய:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்

வேக வைத்த காய்கறி கலவை – 1/2 கப்

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன்

மைதா (அ) கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்

துருவிய சீஸ்- 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

பர்கர் செய்ய:

பன் – 1 (அ) பிரெட் – 2 ஸ்லைஸ்

வெண்ணெய் – சிறிதளவு

துருவிய கேரட் – சிறிதளவு

மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – சிறிதளவு

தக்காளி சாஸ் – சிறிதளவு

 செய்முறை: எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும். (குறிப்பு: கடைகளில் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய பர்கரை, வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதில் பனீரை சேர்த்து செய்து கொடுக்கலாம். துருவிய காய்கறிகளை பச்சையாக பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள அத்தனை சத்துக்களும் நேரடியாகக் கிடைத்து விடும்.)-

நன்றி :ரேவதி
Advertisements

8 Responses to CHEES O CHESS

 1. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

  //பன்னை பட்டர் தடவி சற்று வாட்டி எடுத்து//
  மாம்ஸ் மைண்ட்வாய்ஸ் – நீ பன்னை வாட்டுனியோ என்னை வாட்டுனியோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்…:)

  சூப்பர் ரெசிபி.. ஆன எனக்கு யூஸ் இல்ல… ஏன்னா எனக்கு “சீஸ்”ஐ பாத்தாலே புடிக்காது… அப்புறம் எங்க சாப்பிடறது…:)

 2. priya.r சொல்கிறார்:

  வாங்கோ அப்பாவி !

  மாம்ஸ் உன்னை மாதிரி எல்லாம் இல்லையாக்கும் 🙂

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ :))

 3. குந்தவை சொல்கிறார்:

  //நான் இரண்டாவது லேயர் சீஸ் கலரில் இருந்ததை பிரிக்காமல் அப்படியே போட்டு விட்டேன் என்பது தான் காரணம்:))

  ஒண்ணும் சொல்றதுக்கில்ல….

  //CHEES O CHESS
  ஆமா… இதென்ன பிரியா?/

  ரெசிப்பிய பாத்தா நல்லதான் இருக்கு செய்துபார்க்கிறேன்.

 4. priya.r சொல்கிறார்:

  வாங்க குந்தவை

  சிரிப்போ சிரிப்பு என்று சொல்வது போல தான்

  சீஸோ சீஸ் என்று பெயரிட பட்டு உள்ளது 🙂

  மேடம் இத்தனை நாள் வராமல் இருந்ததன் காரணத்தை திருவாய் மலர்ந்து அருளவும் 🙂

 5. Geetha Sambasivam சொல்கிறார்:

  haahaa bombay யோட வடா பாவுக்கு ஈடு இணை உண்டா? :))))))

 6. priya.r சொல்கிறார்:

  வாங்க கீதாம்மா !
  ரொம்ப நாளைக்கு பிற்கு வந்து இருக்கீங்க 🙂
  இனிமே அடிக்கடி வரணும் 🙂 இல்லைன்னா அப்பாவி கிட்டே சொல்லி இட்லி பார்சல் தான் 🙂

  பாவ் பாஜி யை யும் அந்த லிஸ்ட் லில் சேர்த்து கொள்ளுங்க 🙂
  வருகைக்கு நன்றி

 7. வியபதி சொல்கிறார்:

  ரெசிபியை சரியாக எழுதியிருக்கிறீர்கள். அதற்கு முன் ஏதோ தெரியாதது போல நன்றாக நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்களே !

 8. priya.r சொல்கிறார்:

  வாங்க சார் .,முதல் வருகைக்கு நன்றி
  முதல் தடவை சரியாக சுவை வரவில்லை
  அடுத்த தடவை தான் சுவையாக தயாரிக்க முடிந்தது
  அதை தான் குறிப்பிட்டு இருக்கிறேன் ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: