இரண்டு வார்த்தை கதை -தொடர்ச்சி – 1

ஜூன் 4, 2010
 சுஜாதா அவர்களால அறிவிக்கப்பட்டு குமுதம் இதழால் சன்மானம் வழங்கி கௌரவிக்க பட்ட இரண்டு பேர்களின்
இரண்டு வார்த்தை கதை பின் வருமாறு :
 
தலைப்பு : விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் அவரின் நண்பர்களும்
 
கதை         : ட்ரிங்க்ஸ் கொண்டாந்திருக்கியா
 
 
தலைப்பு  : சுவரில் ஆணி அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்
 
 கதை         : கண்சீல்ட் வயரிங்ப்பா
 
என்னுடைய சொந்த கற்பனையில் இதோ!
 
தலைப்பு : ஊழல் செய்து மாட்டி கொண்ட அரசியல் வாதி யின் முதல் இரு வார்த்தைகள்
கதை         :  ஹார்ட் பெயின்!
 
தலைப்பு  : சமையலில் காரம் அதிகமாக இருந்ததால் கணவரின் கதறல் !!
 கதை         : அய்யோ!  கொல்றாளே !!
 
 நாளை  ஒரு வார்த்தையில்  கதை பற்றி ஒரு பதிவு !
 
தொடரும்!!
 
 
 
 
 
 
 
 
 
Advertisements

இரண்டே வார்த்தைகளில் கதை

ஜூன் 3, 2010
அன்றும் இன்றும் ஏன் என்றுமே என்னுடைய favourite எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.
 
ஒவ்வொரு தடவை படிக்கும் பொழுதும் வியப்பு தான் வருகிறது ;இப்படி இவரால் மட்டும் இவ்வளவு தலைப்புகளில் இவ்வளவு அழகாக எழுத முடிந்தது என்று .உதாரணத்திற்கு சில
இரண்டே வார்த்தைகளில்  கதை எழுதுவது பற்றி சொன்னவர் ;
 
இரண்டா என்று நீங்கள் ஆச்சிரியப்படலாம் !
 
உதாரணமாக ஒரு இரண்டு வார்த்தை  கதை  
தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்                        
கதை          :ஐயோ சுட்டுடாதே !
அவர் சொல்லி அவர் சிறப்பாக இருந்தது என்று பாராட்டு பெற்ற சில !
தலைப்பு : வரதட்சனை மாப்பிள்ளை யின் ஜான வாச ஊர்வலம்
கதை         : ஏறுங்க ஜீப்பிலே!
தலைப்பு : 2050  ல் குழந்தை
கதை         : தங்கச்சின்னா என்னம்மா?
 
நானும் எழுதி பார்த்ததில் ஒன்று இதோ!
தலைப்பு : ஹோம் வொர்க் எழுதியாச்சா 
கதை         : வயிறு வலிக்குதும்மா !
 
தொடரும் !!

இனி காய்கறி கடை வச்சி பொழப்பு நடத்த வேண்டியது தான்!

மே 21, 2010
நல்லா வெட்டு !ஒரே போட்ல உயிர் உடனே போயிடனும் என்ன
சரி  பாஸ்
 
 இரத்தம் அதிகமா வெளிய வர கூடாது என்ன
சரி  பாஸ்
 
 நல்லா  தொங்க விட்டுடு என்ன
சரி பாஸ்
 
தலைய தனியா பார்சல் பண்ணிடு என்ன
 சரி  பாஸ்
 
காலைல போயி அந்த பாய் சொன்ன வேலைய முடிச்சுட்டு தானே இங்க வந்திங்க
ஆமா     பாஸ்
 
முழு பணத்தையும் கொடுத்துட்டானா
 
இல்ல பாஸ்
வர வர போலீஸ் கேடு புடி ஜாஸ்தியா இருக்கு பாஸ்
 
என்ன தொழில் நடத்தி என்ன பிரோஜனம்
 
கறி கடை பாஸ் என்கிற பாஸ்கரன்  அலுத்து கொண்டான்!!
ஹி ஹி  கொஞ்சம் சஸ்பென்ஸ்  கலந்து அரை பக்க கதை எழுதி  பார்க்க நினைத்ததன் விளைவு !!

 யாரும் பயந்துகிட்டு என்னை திட்டாதீங்கபா (திரும்பவும் ஹி ஹி)