CHEES O CHESS

திசெம்பர் 1, 2011

எங்க  நிறுவனத்தில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை வாங்கி கொள்ளும் வெளி நாட்டை சேர்ந்தஇறக்குமதி யாளர்களில் ஒருவரான கமிலா எனக்கு சீஸ் பாக்கெட்கள் பரிசளித்தார் ;சரி ஏதாவது செய்து பார்ப்போமே என்று  பாஸ்தா செய்து பார்த்தேன் சுவை சரியாக இல்லை ; மாம்ஸ் சாப்பிட்டு ஏதோ டேஸ்ட் குறைகிறதே என்று ஒரு வளரும் சமையல் கலை வல்லுனியியை குறை சொன்னார் .,

சரி என்ன குறை ?

 மசாலா குற்றமா

சீஸ் குற்றமா

இல்லை

உப்பின் அளவில் ஏதாவது எச்சு கம்மியா என்று கேட்க நினைத்து அவரின் முகம் போன போக்கினை பார்த்து பேசாமல் விட்டு விட்டேன் 🙂

இது பற்றி துப்பு துலக்கலாம் என்று யோசித்து ஒருவழியா கண்டு பிடித்து விட்டேன் !

அது என்ன வென்றால்  சீஸ் பாக்கட்டின் உட்புறம் டபுள் லேயரில் முதல் லேயரை பிரித்த நான் இரண்டாவது லேயர் சீஸ்  கலரில் இருந்ததை  பிரிக்காமல் அப்படியே போட்டு விட்டேன் என்பது தான் காரணம்:))

 சரி இன்று பர்கர் செய்வோம் என்று முடிவு செய்து நீல்கிரிஸ் சென்று பர்கர் பன்கள் மற்றும் ரெடி கட்லெட் வாங்கி வந்தேன் இப்போது செய் முறையை பார்க்கலாமா

முதலில் தோசை கல்லை சூடு செய்து அதில் இரண்டாக அரிந்த  பர்கர் பன்னை பட்டர் தடவி சற்று வாட்டி எடுத்து ஒரு பன்னை எடுத்து அதில் வாங்கி வந்த கட்லெட் ஐ வைத்து தக்காளி சாஸ் ,சற்று துருவிய கேரட் ,முட்டை கோஸ் ,தேங்காய் துருவலை போட்டு இன்னொரு பன்னால் மூடினால் பர்கர் ரெடி!

 என்ன இரெண்டே வரிகளில் ஒரு சிறந்த சமையல் குறிப்பை கொடுத்த  முதல் இல்லத்தரசி நானா :)) 

 நீங்கள் குறை சொல்வதற்கு முன்னால் எப்படி முழுவதும் செய்வது என்று நான் தெரிந்து கொண்டதை சொல்லி விடுகிறேன் 🙂

 தேவையானவை:

கட்லெட் செய்ய:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்

வேக வைத்த காய்கறி கலவை – 1/2 கப்

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன்

மைதா (அ) கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்

துருவிய சீஸ்- 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

பர்கர் செய்ய:

பன் – 1 (அ) பிரெட் – 2 ஸ்லைஸ்

வெண்ணெய் – சிறிதளவு

துருவிய கேரட் – சிறிதளவு

மிகவும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – சிறிதளவு

தக்காளி சாஸ் – சிறிதளவு

 செய்முறை: எண்ணெய் நீங்கலாக கட்லெட்டுக்கு கொடுத்துள்ள பொருட்களை பிசைந்து கொள்ளவும். அதை சிறு கட்லெட்டுகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பன்-ஐ குறுக்கு வாக்கில் இரண்டாக வெட்டி, இரண்டு துண்டிலும் வெண்ணெயைத் தடவவும். இதனை தோசைக்கல்லில் போட்டு லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் துருவிய கேரட், முட்டைகோஸை தூவவும். அதன் மேல் ஒரு கட்லெட்டை வைத்து, சிறிதளவு சாஸ் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மற்றொரு துண்டு பன்னால் மூடி பரிமாறவும். (குறிப்பு: கடைகளில் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய பர்கரை, வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதில் பனீரை சேர்த்து செய்து கொடுக்கலாம். துருவிய காய்கறிகளை பச்சையாக பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள அத்தனை சத்துக்களும் நேரடியாகக் கிடைத்து விடும்.)-

நன்றி :ரேவதி
Advertisements

இயற்கை உணவு ;விவசாய சாகுபடி

மே 21, 2010

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: நம் நாட்டு மக்களுக்கு உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு இல்லை.

சூரிய ஒளியால் வேக வைக்கப்பட்டு விளையும் காய்கறிகளை மீண்டும் வேகவைத்து அவற்றின் சத்துகளை வீணடிக்கின்றனர். வேகவைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே உணவு என்னும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள விளைநிலங்களில் பல்வேறு ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி நுண்ணுயிர்களை கொன்று உப்புக்கண்டங்களாக மாற்றியுள்ளோம்.

மூன்று மாதம் மட்டும் கோடை காலமாக இருக்கும் வெளிநாடுகளின் விவசாய தொழில்நுட்பங்களை ஆண்டு முழுவதும் வெயில் அடிக்கும் நம்நாட்டில் புகுத்தியது, விவசாய சாகுபடியில் ஏற்பட்ட முதல் பிரச்னை. 3,000 ஆண்டு பாரம்பரியம் மிக்க நமது விவசாய சாகுபடி முறைகள் முற்றிலுமாக மறைந்து விட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயிர்களில் நிலக்கடலை மட்டுமே நம் நாட்டு விவசாயிகளுக்கு பலன் அளிப்பதாக உள்ளது.

 இந்த பயிர் நைட்ரஜனை காற்றில் இருந்து இழுக்கும். நாம் விடும் மூச்சுக்காற்றில், 78 சதவீத நைட்ரஜன் உள்ளது. ஆனால், ரசாயன உர மூட்டைகளில் 40 சதவீத நைட்ரஜன் மட்டுமே உள்ளது. ஊடுபயிராக பாசிப்பயறு, தட்டை, உளுந்து போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம், விளைச்சலை அதிகரிக்கலாம். 12 ஆயிரம் வகையான பயிர்கள் நைட்ரஜன் சத்தை காற்றிலிருந்து இழுக்கும் தன்மையுடையது.

மனிதன் தான் விளைவிக்கும் பயிர்களின் கழிவுகளை மாடுகளுக்கு அளிப்பதும், மாடுகளின் கழிவுகள் வண்டு போன்ற உயிர்களுக்கும், வண்டுகள் புழுக்களுக்கும், புழுக்கள் கோழிக்கும், கோழிக்கழிவுகள் பூஞ்சையாகவும், பூஞ்சை மண்புழு உற்பத்திக்கும் உதவியாக இருந்தன.

 இந்த பாரம்பரிய உணவு சங்கிலி முறையில், மாடுகள் காணாமல் போனது போன்ற மாற்றங்களே தற்போது விவசாய சாகுபடியிலும், உணவு உற்பத்தியிலும் நிலவும் பிரச்னைகளுக்கு காரணம். உணவு சங்கிலி மாற்றப்படும் முறை நெல் ரகங்களை மறைமுகமாக மாற்றியதில் துவங்கியது. இந்த முறையை மீண்டும் செயல்படுத்தினால் சாகுபடி செழிக்கும். இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார்.

செய்தி தாளில் படித்தது 

அய்யா ! தாங்கள் விவசாய குடி மக்களின் பேரிலும் இந்த  சமுகத்தின் பேரிலும் கொண்டு இருக்கும் அக்கறை போற்றுதலுக்கு உரியதாகும் ., தங்கள் பணி சிறக்க எங்களின் பணிவான வாழ்த்துக்கள் !!