எரிச்சல் வரும் நேரத்தில் அறிவிற்கு வேலை கொடுங்கள்.

மே 25, 2010

அக்கா வீட்டில் விசேஷம் …,          

                           

இதற்கு எந்த வகையிலாவது உதவ  நினைக்கிறார் தங்கை . முதலில் தம் கணவரிடம் சற்றுப் பணஉதவி செய்யச் சொல்கிறார். கிடைக்கிறது. பிறகு விசேஷம் குறித்த சில பொருள்களை வாங்க ‘‘வாகனத்துடன் வாங்க’’ என்கிறார்.

பல்லை கடித்துக் கொண்டு உடன் வருகிறார் , அந்த   நேரப் பற்றாக்குறை  கணவர். ஒரு குறிப்பிட்ட பொருளை தேடி அலையோ அலை   என்று அலைகிறார்கள். நேரமோ  பறக்கிறது. கணவருக்கு அலுவலகத்திலிருந்து ஏதோ    நெருக்கடி அழைப்பு. எரிச்சலின் விகிதாசாரம் எகிறுகிறது. எல்லாம் முடிந்த பின் மனைவியை  வீட்டில் இறக்கி விட்ட நேரத்தில், ‘‘இன்னைக்கு உன்னால் மூணு மணிநேரம் வேஸ்ட் ’’ என்கிறார். அவ்வளவுதான். இவ்வளவு நேரம் ஒதுக்கி, உதவிய அத்தைனயும் வீணாகும்படி இந்த நான்கு வார்த்தைகள் வேட்டு வைத்துவிட்டன.

எரிச்சல் வரும்    நேரத்தில் .,

இவ்வளவு நேரம் பொறுமையாக  இருந்த நாம் எந்த ஒன்றையும்  எதிர்மறையாக  பேசிவிடக்கூடாது. பேசினால், இதுவரை எடுத்த நல்ல பெ யர் அனைத்தும் வீண் என்று ஒரே  ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால்  போதும்! ஆம்! அந்த ஒரு நிமிடம் உங்களை   அடக்குங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி அறிவிற்கு வேலை கொடுங்கள்.

மனைவிக்காகச் சில மணிநேரம் அலைந்துவிட்டு,

இதனால் கிடைக்க இருந்த நற்பெயரை ஒரே நிமிடத்தில் கெடுத்துக் கொண்ட  அறியாமைக் கணவரை  விடுங்கள். எத்துணையோ  ஆண்டுத் தொழில் தொடர்பை; பல்லாண்டுக் கால நட்பை ; இரத்த உறவை ; அருமையான பெருமைக்குரிய பழக்கத்தை  ஒரே  நிமிடத்தில் தொடர்பை கெடுத்து கொள் வது எவ்வளவு வேதனையான விஷயம்!

 

நம்மை  சுற்றியிருப்பவர்களின் குறைகளை  சுட்டிக்காட்ட

அவர்கள் மீது கோபப்பட நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உணர்த்துவதுதான் நம்  நோக்கம் என்றால், காயப்படுத்த நமக்கு உரிமை  இல்லை . காயப்படுத்தாமல் உணர்த்த என்ன வழி என்று சிந்திக்க ஒரு நிமிடம் மட்டும் செலவழியுங்கள் போதும். உங்கள் நோக்கமும் நிறைவேறி  விட்டது. பலனும் பிரமாதமாக இருக்கும்.
 
இது எங்கள் வீட்டிலும் நடந்து இருக்கிறது.புத்தகத்தின் மூலமாக   புரிய வைத்த திரு .லேனா தமிழ் வாணன் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.
Advertisements

வருஷம் 2030 அல்லது மாத்தி யோசி !!

மே 23, 2010
 ஹரி அப்பேரல் டெக்னாலஜி முடித்து சொந்தமாக சிறிய அளவில் தொழில் நடத்தி கொண்டு இருப்பவன்., தான் உண்டு தன் வேலை உண்டு என்று ரொம்ப அடக்கமானவன் என்று பேர் எடுத்தவன் !
ஆறு மணிக்கு  வேலை  முடித்து அபார்ட் மேன்ட்லில் உள்ள வீட்டை திறந்து உள்ளே வருகிறான் ;துணி மணிகளை ஒழுங்கு படுத்தி வீட்டை சுத்தம் செய்து , நைட்டுக்கு டிபன் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு காபி போட்டு ஒரு தம்ளரில்   ஊட்றி    கொண்டு ,மீதி யை பிளாஸ்கில் கனிக்காக  சேமித்து வைத்தான்.
கனி .,பெண்களால் பெண்களுக்காக நடத்த படும் ஒரு கார்மென்ட் பாக்டரியை  ஒரு அயல் நாட்டு பெண்மணியுடன் சேர்ந்து நடத்தி  வளரும் இளம் தொழில் அதிபராக புகழ் பெற்று கொண்டு வருபவள் .,8 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு காரில் வர 8 .30 ஆகி விடும்.
 
இன்று வேலை முடிந்து வரும் பொழுது ஹரியை பற்றி யோசித்து கொண்டே

 வருகிறாள்
 
“ஹரி சரியாய் முகம் கொடுத்து பேசி இரண்டு வாரம் ஆகி விட்டது; கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் ;திருமணம் ஆகி இந்த ஒரு வருடத்தில் இப்போது தான் சற்று நல்லா சமையல் செய்ய றான்.ஒரே பையன் என்று அவர்கள் வீடில் செல்லம் கொடுத்து கெடுத்து விட்டு இருக்கிறார்கள் .,ரொம்ப ஈகோ பார்க்கிறான் ;போக போக நிதானமாக சொல்லி சரி செய்ய வேண்டும் ”

வண்டியை  பார்க் செய்து விட்டு ,புது பாடலை ஹம்மிங் செய்து கொண்டே வீட்டிற்குள்  வருகிறாள் .
 
கனி: என்ன பப்லு என்ன பண்றே !
ஹரி எதுவும் பேசாமல் காபி கொண்டு வந்து அவள் எதிர் புறம் உள்ள டீபாயில் வைத்து விட்டு டிவி பார்க்கிறான்
 
 கனி :என்னடா  தங்கம் ! உன் பிரிச்சனை என்னன்னு நீ சொன்ன தானே தெரியும் ! சரி டயர்டா இருந்ததுன்ன சொல்லுபா ;வெளியல போய் சாப்பிட்டுகலாமா!
 
 
ஹரி :க்கும் ! இந்த கரிசனத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை !
 
கனி : நான் கரிசன படாம வேற யாரு படுவா! இத பாரு புஜ்ஜி ! உன்னய கண் கலங்காம வைச்சு காப்பாத்துவேன்னு நான் உங்கப்பாகிட்ட
சொல்லி இருக்கேன் ;அதனால தான் உனக்கு ஆனியன் கூட நான் தான் உளிச்சு தரேன் !! நீ  என் செல்லமில்ல சொல்லுடி !
ஹரி : நீ இப்படி பேசி பேசியே  நீ பண்ணறதே எல்லாம் மறைத்து என்னைய நல்லா ஏமாத்திகிட்டு இருக்கே
 
கனி : நானா ஏமாத்தறனா! எனக்கு இப்போ கோவம் வருது ;எதா இருந்தாலும் முகத்தை பாத்து நேரா சொல்லு ஹரி
ஹரி : ……………………(மௌனம்) ………….
 
கனி : சொல்லும்மா ! சொன்னா தானே தெரியும் !!

(ஹரி மௌனம் கலைந்து)

.
.
.
ஹரி : நீ பீர் எல்லாம் குடிகிறதா கேட்க்கும் பொழுது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குது தெரியுமா !
 
கனி :ச்  சே  ! இவ்ளோ தான .அது  Non alcoholic பீர் ப்பா. மீடிங்க்ள கர்டசி க்காக சிப் பண்ணறது ! உனக்கு பிடிகல்லன்னா சொல்லு ;இந்த நிமிஷத்தில் இருந்து விட்டுடுறேன் ;போதுமா டார்லிங் !!
 
என்று சொன்னவளை ஹரி ஓடி வந்து அணைத்து கொண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டான்!!