துப்பறியும் கதை .1 தொடர்ச்சி 1

மே 9, 2011

இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் ;இவ்வளோ சின்ன மேட்டரை
கொடுக்கறீங்களே என்று சற்று பிகுவுடன் ஒப்பு கொண்டார்
துப்புறியும் நிபுணி கொடி (கீதாம்மா என்ன சொல்ல போறாங்களோ !)

நேரம் 10 .00
கொடிமனதிற்க்குள் தனது மானசீக  குருநாதர் சுஜாதா அவர்களை வணங்கி,  ரிசப்சன் சென்று கோபிகா(கோமள வள்ளி என்ற பெயர் அப்பாவிக்கு பிடிக்கலையாம்)  திலகா இருந்த அறையை பற்றி விசாரித்தார் ;

சாவி திரும்ப கொடுக்க வில்லை
அவர்களே எடுத்து சென்று விட்டார்களாம்
அவர்கள் யாரிடம்  அதிகமாக பேசினார்கள் என்ற தகவலை டெலி போன்ஆப்ப ரேடர் ரிடம்  கேட்டு
பெற்று கொண்டார்
ஒரே எண்ணுக்கு அதிகமாக பேசப்பட்டு இருக்கு !
அந்த நெம்பர் அம்பத்தூர் கீதாமாமி உடையது .,அவர் முகத்தில் சிறு புன்னகை
இவர்கள் இருவருக்கும் கீதா மாமி என்றால் பிடிக்குமே
சோ ஒன் பிளஸ் ஒன் இஸ் = டூ
கீதா மாமிக்கு போன் செய்து பேசபடுகிறது
பாட்ஸ் ! நான் கொடி பேசறேன்
ஏண்டி கடன்காரி ! எதனை தடவை சொல்லி இருக்கேன்
இப்படி பாட்ஸ் ன்னு கூப்பிடாதேன்னு ;நோக்கு அறிவே இல்லையா………..

சரி மாமி ;விடுங்கோ நம்ம  விசயத்தை  அப்புறம் பேசிக்கலாம்
உங்களை தேடிட்டு ரெண்டு அக்காக்களும் வந்தாங்களா
யாரை சொல்றே
கொடி: அது தான் உங்க ஜால்ரா திலகாவும் கோபிகாவும் !

காலயில எட்டு மணிக்கு  வந்தாங்க
அவசரமா டிபன் சாப்பிட்டு 8 .30  கிளம்பிட்டாங்க
கொடி: எங்கே போறேன்னு ஏதாவது சொன்னாங்களா
மதியம் சாப்பாட்டுக்கு வர சொன்னேன்
நாங்க ரெண்டு பேரும் நான் வெஜ் தான் சண்டே சாப்பிடுவோம்
வெளியே பார்த்துக்குறோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க
எதுக்கு கேட்கறே
கொடி:இங்கே மாநாடு  வளாகமே ஒன்பது மணியில் இருந்து அவர்களை காணலேன்னு
அல்லோகல படுது;நீங்க சாவகாசமா கேட்கறேள்!
அப்படியா அவங்க புறப்படும் பொது எங்கே போறீங்க ன்னு கேட்டா நல்லா இருக்காது
பாருங்கோ ;அதனாலே கேட்கலே
பயப்படும் படியா ஒன்னும் இருக்காதுன்னு நேக்கு தோன்றது
நோக்கு ?
கொடி: எதையும் இப்போ சொல்ல முடியாது மாமி!
சரி சரி ;அவங்க ஆத்து காரங்க நெம்பர் மாமா கிட்டே இருக்கு ;பேசி பார்த்துட்டு
நோக்கு சொல்றேன்
கொடி:சரி மாமி ;உங்கள திரும்பவும் காண்டாக்ட் பன்றேன் ;பை பை
பை பை

கீதா மாமி 😦 தனக்குள் )இந்த கொடி சும்மாவே கத்தி,கொலை,விபத்துன்னு  எழுதுவாளே………..
நான்னா வே அவளுக்கு பயம் ! (இளக்காரம் ன்னு வெளியே சொல்றதா காதில் விழுந்துட்டு தான் இருக்கு)
என்ன திமிர் இருந்தா ஜால்ரா ன்னு சொல்லுவா !

எனக்கு வேண்ட ப்பட்டவங்க ன்னு இந்த கொடியே அவங்களை ஏதாவது பண்ணிடுவாளோ…………………
இவளை போய் கண்டுபிடிக்க சொல்லி இருக்காங்களே 😦
ஈஸ்வரா ! கொடிக்கு நல்ல புத்தியை கொடுத்து அவங்களை கண்டு  பிடிக்க
நீ தான் மனசு வைக்கனும் !

ப்ரியாவுக்கு இங்கேயே மதியம் வரை இருக்கணும்னு தான் ஆசை
இந்த ATM  தான் அடம் பண்ணி ப்ரியாவையும் சேர்த்து அவசரமா எங்கேயோ
கூட்டிட்டு போய் இருக்காங்க !
இந்த ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் விஷயம் இருக்கோ
எப்போ பார்த்தாலும் சிரிப்பு பேச்சு தான் ……………
என்னமோ நல்லது நடந்தா சரி

மணி 11 .00
கோபிகாவின் ரசிகைகள் காயத்ரி ;லதா ,சீதா ,அனு ,மாதங்கி ,சுசி ,ப்ரியா ,சித்ரா இன்னும் பிறர்
கண் கலங்கி அழுது  கொண்டே கொடியிடம் விபரத்தை கேட்க ஆரம்பித்தனர்
போங்க போங்க ;இப்போ என்ன – – – நடந்துடுச்சுன்னு எல்லோரும் ஒப்பாரி வைக்கறீங்க என்று
சொல்லி அனைவரையும் திடுக்கிட வைத்தார் !

மாற்று சாவி வாங்கி அவர்கள் இருந்த அறையை திறந்து பார்த்தார் ;
மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தார்
இருவரின் பிரிப் கேஸ் கள் இருந்தது ;  ஹான்ட் பேக்  இல்லை ;
நியூ பேப்பர் டிரே   மேல் கிடந்தது
வேறு ஒன்றும் தடயம் கிடைக்க வில்லை !

காலை 7 மணிக்கு அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த ஆஷா(இயற் பெயர் :முத்தம்மா! )
விடம் விசாரித்த போது அம்பத்தூர் எப்படி போவது என்று கேட்டதாகவும் அவள் போகும் வழி சொல்லி
ஆட்டோ அல்லது கால் டாக்சி யில்   போங்கள் என்று  சொன்னதை குறித்து கொண்டு
மேற் கொண்டு விசாரித்தார்
பக்கத்தில் உள்ள தியேட்டர் லில் என்ன படம் ஓடுகிறது ;மதியம் காட்சி எப்போ ஆரம்பிக்கும் என்று அவர்கள்
கேட்டார்கள் என்று ஆஷா கொடி இடம் சொன்னாள்

கொடியின் முகத்தில் சிந்தனை ஓட்டம் !

மணி 12 .00 மதியம்

மீண்டும் விழா அமைப்பாளிகள்  கூட்டம்
தொடங்கியது
என்னப்பா ஏதாவது தகவல் கிடைத்ததா
ஒன்னும் இல்லைங்கா
ஏண்டி ! திரும்பவும் உன்னை செல் ல்லிளில்
அவர்களை தொடர்பு கொள்ள சொல்லி இருந்தேனே
ஆமாம் மேடம் ;இப்போது நீங்கள் தொடர்பு கொண்ட எண்
சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது என்று வருகிறது ங்க மேடம்
என்னடாப்பா  இது ;வந்த இடத்தில் இப்படி ஒரு சோதனை
அப்பா குருவாயுரப்பா ;அவங்க பத்திரமா திரும்ப கிடைக்க வைப்பா :இது சந்தியா(ரொம்ப பேர் அவங்களை மறந்துடீங்க:( )
ஓ ஜீசஸ் ப்ரியா,அப்பாவி  எனக்கு வேணும் இது பெட்ரிசியா,சாதனா
யா அல்லா அப்பாவி ,ப்ரியா எங்களுக்கு கிடைக்கணும் இது மகி , ஹுசைனம்மா.

சரி சரி ;நாம் ஒரு ஒன்றை  மணிக்கு கூட்டு பிராத்தனைக்கு ஏற்பாடு செய்வோம்
அது முடிந்ததும் கொடி நம் எல்லோரிடமும் பேச வேண்டுமாம் !
சீய்கிறம் மதியம் உணவு சாப்பிட்டு வந்து சேருங்க !
கூட்டம் கலைகிறது
ரீசப்சன்  இருந்து அழைப்பு ;போனில் அழைப்பது யார் ?!

தொடரும் ……………
அடுத்த அடுத்த பதிவில் நிறைவு பெறலாம் 🙂

Advertisements

துப்பறியும் கதை .1

ஏப்ரல் 30, 2011

 

 

பாச தலைவிக்கு வணக்கம்.

இது ஒரு (நையாண்டி) துப்பறியும் கதை !

அனைத்துலக பெண் பதிவர்களின் முதல் மாநாடு

பெசன்ட் நகர் அருகில் உள்ள புகழ் பெற்ற ரெசார்ட் வளாகத்தில்

வெள்ளி கிழமை  இனிதே  தொடங்கியது ;அது ஒரு நவீன வசதி கொண்ட

 உணவு அருந்த மற்றும் தங்கும் அறைகளை கொண்டது .,வெளியூர் மற்றும் வெளிநாட்டு

பதிவர்கள் பெரும்பாலனோர் அங்கேயே தங்கி கொண்டனர்

சனி கிழமை நடந்த வழக்காடு மன்றத்தில்

கல்வியா
செல்வமா
வீரமா

என்ற தலைப்புகளில் பேசிய

புவனி ,ப்ரியா ,அனாமிகா  தமக்காக

ஒதுக்க பட்ட அறைகளில் தங்க சென்றார்கள்

அனாமிகா அடுத்த நாள் லீவ் என்பதால் சொந்த வேலையாக
 
கொழும்பு போய் விட்டு நாளை இரவு வந்து விடுகிறேன் என்று சொல்லி

 

விட்டு சென்று விட்டார்

ஞாயிறு காலை சுமார்  7 . 30 மணி முதல் கோவை கோமள வள்ளியையும்

திருப்பூர் திலகவதியையும் (உண்மை பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன!)

 

காணவில்லை

இது தெரிந்த விழா அமைப்பாளிகள் செய்த உரையாடல்கள் இதோ:-

ஏம்மா;அவங்க செல் நம்பர் க்கு பேசி பார்த்தீங்களா
 
இல்லைங்கா !அவங்க ரெண்டு பேரும் டம்மி பீஸ் அவங்களை போய் யாரு

 

கடத்தி இருக்க போறாங்க”

 “ரெண்டு பேருடைய செல்லும் நீங்கள் தொடர்பு கொண்ட நபர் தொலைத்

 

தொடர்புக்கு வெளியே இருக்கிறார் என்று வருதுங்க மேடம்

 

எதுக்கும் அனாமி க்கு  போன் போட்டு கேட்போமா “

 

அனாமி .,இங்கே மாநாட்டில  இருந்து பேசறோம்
திடீர்ன்னு புவனியையும் ப்ரியாவையும் காணலே”

 


அனாமி : இதுக்கு தான் ப்ரியக்கா கிட்டே  தலை தலையாய் அடிச்சுக்கிட்டேன் 
அடபாவி கூட சேராதேன்னு ………………. எங்கே கேட்டாங்க !

இதோ பாருங்க அப்பாவியை எல்லாம் யார்னாலும் கடத்தி கிட்டு எல்லாம் போய் இருக்க முடியாது
அப்படி போய் இருந்தாலும் இன்னைக்கு சாயந்திரத்திர்க்குள்ளே அவங்களே அழுது கிட்டு  கொண்டு வந்து விட்டுடுவாங்க”
 .
என்ன எல்லோரும் அனாமி சொல்றதை கேட்டீங்களா
அடுத்து என்ன செய்யலாம்

ஒருவேளை அப்பாவியிடம்  அறிவு கொஞ்சம்  அதிகமாக இருக்கு என்றோ
திலகவதியிடம் பணம் கொஞ்சம் அதிகமாக இருக்கு என்றோ யாராவது
கடத்தி இருக்கலாம் இல்லையா”

அல்லது அவர்களே விருப்பட்டு தொலைந்து விட்டார்களோ
இதனால் அவர்களுக்கு என்ன லாபம்
பப்ளிசிட்டி கிடைக்கும் இல்லையா
 
ஆளாளுக்கு ஒன்னு சொல்லி சொல்லி குழப்ப வேண்டாம் .,
எனக்கு வாய்ஸ் இருக்கு பேசாம சிபிஐ கிட்டே விட்டுடலாமா “

அவ்வளோ தூரம் வேண்டாம்

அப்போ பேசாம கனிஷ்கா,வசந்தா கிட்டே சொல்லி வர சொல்லலாம் “

அவங்களை டெல்லி யில் இருந்து வர சொல்லணும்

ஏன் நம்ம பொற்கொடி கிட்டே சொல்லி பார்க்க சொன்னா என்னா?

 

சரி அது கூட சரி தான்

 

யாராவது கொடியை வர சொல்லுங்க 

 

கொடி வருகிறார் .

 

கொன்னுட்டீங்க போங்க” ,என்று அலை பேசியில் பேசி கொண்டு
வரும் கொடி எல்லோருக்கும் பரிச்சியமானவர் தான்;

 

கொடியிடம் விவரம் சொல்ல படுகிறது.

 

அவர் இந்த கேசை எடுத்து கொண்டு இருவரையும் கண்டு பிடித்து தர ஒப்பு கொண்டாரா இல்லையா ?!

தொடரும்