நேர நிர்வாக குறிப்புகள்

மார்ச் 9, 2011

 

பொதுவாக ஒன்று சொல்வதுண்ட்டு!

நமது ஜனாதிபதி திருமதி பிரதிபா பாட்டிலுக்கும் அதே 24 மணி நேரம் தான் ;தெரு கோடியில் இருக்கும் பிட்சை காரிக்கும் 24 மணி நேரம் தான் .,என்னடா இப்படி சொல்கிறேனே என்று நீங்களும் சற்று திகைக்க கூடும்

ரொம்ப நாட்களாக இதை பற்றி எழுத நினைத்தது உண்டு

நானும் இந்த நேர நிர்வாக விசயங்களில் சற்று சொதப்பியும் இருந்து கொண்டு தான் இருக்கிறேன்

அதில் இருந்து எப்படி மீண்டு வந்து கொண்டு இருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்

இன்றைக்குப் பெரும்பாலானவர்கள், 24 மணி நேரம் போதாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒன்றை முடிக்கவில்லையா என்று கேட்டால், ‘நேரமில்லை’ என்று எளிதாகக் கூறிவிடு வோர் அதிகம். ஆனால் நம்மை விட அதிக வேலைகளை, அதிகத் திறனோடு செய்பவர்கள் இருக்கிறார்கள், முக்கிய நபர்கள் பலர் ஒரேநேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்கிறார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் ஒரு நிமிடம் யோசித்தால் இது உண்மை என்பதை உணர முடியும்.நேரத்தைத் திறமையாகக் கையாளு பவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.இன்றைய வெற்றியாளர்கள் பலரும் நேரத்தைத் திறமையாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

நேர நிர்வாகம் என்பது நேரந்தவறாமல் இருப்பது மட்டுமல்ல. பல்வேறு வேலைகளைக் கையாளுவது, எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்துவது.சரியான நேர நிர்வாகம் என்பது எதற்கு. முதலில் முக்கியத்துவம் அளிப்பது என்று அறிந்திருப்பது.பட்டியல் போடலாம்

பிரபல காலணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான  மேத்தா கூறுகிறார்:“உங்களின் இலக்கை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அடுத்த நான்காண்டுகளுக்கான இலக்குகளையும் முடிவு செய்துவிடுங்கள். வருடாந்திர இலக்குகளின் அடிப்படையில் உங்களின் அன்றாடப் பணிகளையும், வாரப் பணிகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்.”வெறுமனே சொல்வதோடு நின்றுவிடா மல் தனது வருடாந்திர இலக்கை எட்டுவதில் தினசரி கவனம் செலுத்துகிறார் மேத்தா.

 இரவில் எந்த நேரத்துக்குப் படுக்கப் போனாலும் அதிகாலையில் தவறாது 5 மணிக்கு எழுந்துவிடுகிறார். கண் விழித்ததுமே சுறுசுறு சிந்தனையில் ஈடுபடுகிறார்.அன்றைக்கு முடிக்கவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். அதன்பிறகுதான் செய்தித்தாளைப் புரட்டு கிறார்.

இவரைப் போன்ற முறையையே பின்பற்றுகிறார், தனியார் வங்கியொன்றின் துணைத் தலைவர்:-“அலுவலகப் பணி தொடர்பாக அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும், சொந்த விஷயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலையும் தயாரித்துக் கொள்கிறேன். தினசரி பட்டியலை அன்றன்று நிறைவேற்றுவதால் எனக்குப் பணியில் திருப்தியையும், மாதாந்திரப் பட்டியலை நிறைவேற்றுவதால் தனிப்பட்ட மகிழ்ச்சியையும் என்னால் அடைய முடிகிறது” என்கிறார் இவர்.

கஷ்டமானதை முதலில் முடிக்கலாம்எளிதானதை அல்லது தமக்கு மிகவும் விருப்பமானதை முதலில் முடிக்க நினைப்பது பலரின் பழக்கம். அது சரியல்ல என்கிறார்கள் சாதனையாளர்கள். முன்னணி பின்னலாடை  நிறுவனம் ஒன்றின் இயக்குநரான ரவி , தான் செய்ய வேண்டிய பணிகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்வதாகக் கூறுகிறார்.

அவை,

‘முக்கியமானவை – அவசரமானவை’,

‘முக்கியமானவை – அவசரமற்றவை’,

‘அவசரமானவை – முக்கியமற்றவை’,

‘முக்கியமற்றவை – அவசரமற்றவை’,‘

முதல் மூன்றை முடித்ததும் தான் நான் நான்காவதில் கவனம் செலுத்துகிறேன். எளிதான வேலையை முதலில் முடிக்க நினைப்பதில்லை’ என்கிறார் . அவர் தனது வழிகாட்டுதலாக திரு ராம் என்ற துணி ஏற்றுமதி நிறுவன இயக்குனரையும்  சண்முக வேல் என்ற மேலான்மை வகுப்புகள் எடுப்பவரையும் குறிப்பிடுகிறார்

இன்னொரு விசயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும் அது ஆட்சிரியம் ஆனால் உண்மை !உங்களுக்கு நீங்களே விருந்தளியுங்கள் !அவசரமான, முக்கியமான வேலைகளை முடித்துவிட்டால் அன்றைய தினத்தின் முடி வில் உங்களுக்கு நீங்களே ‘விருந்தளித்து’க் கொள்ளுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த ‘விருந்து நேரத்தின்’ மகிழ்ச்சியானது மேலும் அதைப் போல பல விருந்துகளை ‘ உங்களுக்கு நீங்களே ஈட்டிக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள்.

சில வேலைகள் போரடிப்பதாகவும், திரும்பத் திரும்பச் செய்வதால் அலுப்பூட்டுவதாகவும் இருக்கக் கூடும். அவற்றைத் தவிர்க்கவே நினைப்பீர்கள். ஆனால் அதற்கு மாறாக நீங்களே உங்களை ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.பல அசாதாரண விஷயங்கள் வெறும் புத்திசாலித்தனம் அல்லது படைப்புத் திறனால் மட்டும் சாதிக்கப்பட்டவை அல்ல; மாறாக நல்ல வேலைப் பழக்கத்தினால் நிறைவேற்றப்பட்டவை என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

இதை படிக்கும் அனைவரும் தாங்கள் எவ்வாறு நேர நிர்வாக விசயத்தில் எந்த மாதிரி வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள் என்பதை தெரியபடுத்தினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் !

Advertisements

எக்ஸாம் சீஸன் ஸ்டார்ட்ஸ்…

மார்ச் 9, 2011

 

வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும், தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்… மகிழலாம்! ஆனால்… குழப்பம், பதற்றம், கவலை, பயம் என்று அனைத்தும் சேர்ந்து மாணவர்களை சுழற்றியடிப்பதும் இந்த நாட்களில்தான்.

“நன்றாகப் படிப்பவர், சுமாராகப் படிப்பவர், இத்தனை நாளாக நத்தையாக இருந்துவிட்டு, இனிமேல்தான் வேகம் கூட்டப் போகிறவர்… என மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… குழப்பம், பதற்றம் போக்கும் வழிகளையும், தேர்வுக்கான சரியான பிரிபரேஷன் முறைகளையும் தெரிந்து கொண்டால், நிச்சயம் கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம். போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தங்கமாச்சே!” என்று சொல்லும் சமயபுரம், எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் , அந்த ‘தங்க’ சேமிப்புக்கான பத்து வழிமுறைகளை, தனது அனுபவ வீச்சிலிருந்து இங்கு பகிர்கிறார்!

1. Day’s Schedule:  உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ… அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.

2. Time Management:  நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்… அமைதியையும், நிதானத்தையும் தரும்.

3. Material Collection:   முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.
4. Blue Print:  அரசே தயாரித்து வழங்கும் இந்த முதனிலை திட்டப்படிவம், அதிக மதிப்பெண் எடுக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது. எந்தப் பாடத்திலிருந்து… எந்த மார்க் கேள்வி எத்தனை வரும் என்ற தெளிவை இந்த ‘  Blue Print’ தரும். 

5. Model Paper:  வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் ‘டாப்பரி’ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.

6. Self Test:  வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.

7. Presentation:   உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது… போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது… போன்றவை (Physical Presentation). இரண்டாவது… விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)

8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த ‘பேப்பர் அனாலிஸிஸ்’ உதவும்.

9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.

இறுதியாக, ஆசிரியர், பெற்றோர் இவர்களுக் காகவோ… வேலை, சம்பாத்தியம் இவற்றுக்காகவோ வெற்று இயந்திரமாக படிக்க முயற்சிக்காமல்… தனக்காக, தன் மேம்பாட்டுக்காக என்ற அர்ப்பணிப்புடன் முழுமையாக மனம் இசைந்து படித்தால்… பரீட்சை சுலபமாகும், சுகமாகும்!

* நன்றி :அவள் விகடன் 28-ஜனவரி-2011


சமச்சீர் கல்வி திட்டம் -ஒரு பார்வை தொடர்ச்சி

திசெம்பர் 15, 2010

என் பையன்களுக்கு இந்த வருடத்தில் இருந்து சமச்சீர்கல்வி திட்டம் ;ஆசிரிய ஆசிரியைகளுக்கே சிலபஸ் பற்றியும் சொல்லி கொடுப்பது பற்றியும் குழப்பம் .,கல்வி துறை சரியாக ட்ரைனிங் கொடுக்காமல் அறிமுக படுத்தி விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.,

பெற்றோர் சந்திப்பு (parents meeting )சமயங்களில் முறையிட்ட போது இந்த வருடத்தில் தான் தொடங்க பட்டது .,அடுத்த வருடத்தில் முழு பயிற்சி பெற்று தயாராகி விடுவோம் என்று எங்களுக்கு சமாதானம் சொல்கின்றனர் எப்பொழுது அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் வாங்க வேண்டும் என்று அரசாணை வந்ததோ அதில் இருந்து தனியார் பள்ளிகளில் உற்சாகமே குறைந்து விட்டது .,பிறகு போன வருடத்தில் வசூலித்த கட்டணமே இந்த வருடமும் வசூலித்து கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.,சரிவர விளக்கம் கிடைக்கவில்லை கல்வி கட்டணமும் அரசு அறிவித்ததை விட பல மடங்கு ;அரசு அறிவித்த தொகைக்கு மட்டும் ரசீது .,மீதி தொகைக்கு துண்டு சீட்டு மட்டும் தான் .,

இந்த லட்சணத்தில் அடுத்த வருடத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும்(ஸ்டேட்,சென்ட்ரல்,மெட்ரிக் ,cbsc ) அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் அறிமுக படுத்த இருக்கிறார்கள்.,இனி வரும் வருடங்களிலாவது நிலைமை சீராக அரசு ஆவண செய்யும் என்று நம்புவோம்

—————————————

துணை செய்திகள்

 

   இந்த  திட்டத்தை எதிர்த்து மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டம் சரியானதே என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் அனைத்து கல்வி முறைகளும் ஒரே சீராக, ஒரே பாடத்திட்டத்தில் செயல்படும் வகையில் சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது சரியானது தான் என்று பாராட்டு தெரிவித்து உள்ளது 
 
—————————————–
 . 

சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

 

   திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

பெண்கள் முன்னேற்றம் -ஒரு பார்வை

ஜூன் 17, 2010

இந்திய கலாசாரத்தில் பெண்கள் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். ஆனால் நிஜவாழ்க்கையில் இங்குள்ள பெண்களின் நிலைமை மிகமோசமாக உள்ளது;ஏன் சில சமயம் மிதிக்க படுகின்றனர் என்று கூட சொல்லலாம் !

மிதிக்கவும் வேண்டாம்;மதிக்கவும் வேண்டாம் எப்போது சமமாக நினைக்க போகிறார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.,
 
 
இதற்கு  எல்லாம் விடிவு காலம் அனைத்து பெண்களும் கல்வி கற்று தேர்வது ஒன்று தான் .போதிய கல்வி பெறாதது, பெண் சிசுக் கொலை ஆகியவற்றின் காரணமாக பெண்களின் விகிதம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்போதுதான் இந்த நிலை மாறும். பொருளாதார ரீதியில் ஆண்-பெண் இடையிலான ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வது 25.7 சதவீதமாக உள்ளது. ஆண்களின் விகிதம் 51 சதவீதமாக உள்ளது.
 
பெண்கள் வேலைக்கு செல்வதால் ஆண்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது என்ற ஒரு சிலரின் வாதம் ஏற்புடையது அல்ல. .
நான் வெளிநாடுகளில் பார்த்து தெரிந்து கொண்டது எல்லாம் ,குடும்பத்தில் உள்ள இருவருமே வேலைக்கு செல்கிறார்கள் ;சம்பாதித்து குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் .
 
சட்டம் படித்த முதல் பெண் சபாநாயகர் மீரா குமார் இந்தியாவின் நிலையை பற்றி கூறி உள்ளது கவனிக்க பட வேண்டிய ஒன்று .
அவர் கூறியதையும் உங்கள் பார்வைக்கு பதிவில் இடுகிறேன் !

சமூகவிடுதலை மற்றும்பொருளாதாரசுதந்திரத்துக்கானதொடர் போராட்டத்திற்கு தேவையான தைரியத்தை தமிழகம் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது,” என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூறினார்.

பாபு ஜெகஜீவன்ராம் அனைத்திந்திய சமத்துவ இயக்கத்தின் தமிழக கிளையின் சார்பில், லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு, ஒரிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

விழாவில், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் பேசியதாவது:

தமிழகத்துக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இரண்டு தலைமுறை பந்தம் உள்ளது. எனது தந்தை, தமிழக மக்களின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.நீண்ட பாரம்பரியம் தமிழகத்துக்கு உண்டு. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமன்றி, சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறீர்கள். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றும் சமூக விடுதலை,பொருளாதார சுதந்திரம் நமக்கு கிடைப்பது சவாலாக உள்ளது. இவைகளுக்கு நாம் போராட வேண்டியுள்ளது. சமூக விடுதலைக்கும், பொருளாதார விடுதலைக்கும் நான் நடத்தும் போராட்டத்திற்கு தமிழகம் உந்து சக்தியாக இருக்கிறது. தொடர் போராட்டத்திற்குதேவையான தைரியத்தை தமிழகம் எனக்கு கொடுத்துள்ளது.

இந்தியாவில் எல்லா வளமும் இருக்கிறது. சாதிய வேறுபாட்டால் துண்டு துண்டாக பிரிந்து நிற்பதால், வளர்ச்சியடைந்த நாடாக உருவாக சிரமப்பட வேண்டியுள்ளது. பார்லிமென்டில் இடஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கல்வி முன்னேற்றத்திற்கு சட்டம் இயற்றப்படுகிறது. இந்த சட்டத்தை அமல்படுத்துவோரது மனோபாவம் சரியாக இருந்தால், சரியான வகையில் முறைப்படுத்தப்படும். இல்லையேல் சட்டம் அர்த்தமற்றதாகிவிடும்.இவ்வாறு மீரா குமார் கூறினார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே பேசும் போது, “”லோக்சபாவை நடத்துவது எளிதான விஷயமில்லை. மீரா குமார் முதல் பெண் சபாநாயகர் என்பதால் கவனமாக அவையை நடத்த வேண்டியுள்ளது. சட்டம் படித்தவர் என்பதால் அவையை எளிதாகவும், சிறப்பாகவும் நடத்த முடிகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கு இவர் மூலம் நல்லது நடக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. பெண்களுக்கான மசோதாக்களை நிறைவேற்ற இவர் உறுதுணை புரிவார் என்று, பெண்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்,” என்றார்.


சமச்சீர் கல்வி

மே 18, 2010

சமச்சீர் கல்வி -தற்பொழுது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் விசயங்களில் ஒன்றாகும் .

இனி அரசு பள்ளிகள் ,தனியார் பள்ளிகள் ,மெட்ரிக் பள்ளிகள் எல்லாவற்றிலும் தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் மாதங்களில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்ப்புகளுக்கு அமல் படுத்த படும் என்று அரசு உத்தரவு வெளி இட்டு இருக்கிறது .
எனது பசங்களுக்கு ஆறாவது வகுப்பில் சேர்க்க சென்ற பொழுது ஆசிரிய ஆசிரியைகள் சொன்னவைகள்
இனி அதிக பாடங்கள் இருக்காது ;மொத்தம் 5 பாடங்கள் தான் .இது எட்டாவது வகுப்பு வரை தொடரும்
9 ,10 வகுப்புகள்ளுக்கு தமிழ் இரண்டாம் தாள் ஆங்கிலம் இரண்டாம் தாள் இருக்கும் .,
முக்கியமாக கணிதம் எளிமையாக்க பட்டிருக்கும்.
(முக்கியமாக கணிதத்தை சொல்லி கொடுக்கும் பொழுது நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன்.உஷ் !அப்பாடி!!இனி அந்த கஷ்டம் இருக்காது !! )
அறிவியல் தியரி 75 மதிப்பெண்களும் பிரக்டிகல் 25 மதிப்பெண்களும் வழங்க படும்.
சின்ன குறை என்னவென்றால் இன்னும் புத்தகங்கள் தரப்பட வில்லை ;பயிற்சிக்கு சென்று வந்திருக்கும் ஆசிரிய ஆசிரியைகள் ஸ்டென்சில் காபிகள் தான் வைத்து உள்ளார்கள் .தெளிவாகவே இல்லையாம்.,
ஆனால் பாடங்கள் குழந்தைகள் புரிந்து பயன் பெரும் வகையெல் இருக்குமாம் .
 
ஆக மொத்தத்தில் சொல்வது என்னவென்றால்
ஒரே பாட திட்டம்!! ஓஹோன்னு முன்னேற்றம் !!

அன்புள்ள 
பிரியா .r