குட்டிஸ் பக்கம்

பிப்ரவரி 13, 2012

 சென்ற வெள்ளி கிழமை நடந்தது.,

 வழக்கம் போல் பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு வந்த கார்த்திக் விளையாட போறேன் மா என்று பாட்மிட்டன் பாட்டை எடுத்து கொண்டு சென்றவன் விரைவில் வீடு திருப்பி விட்டான் ., எப்படியும் ஒரு மணி நேரம் கழித்து தான் வருவான் ;சீக்கிரம் வந்து விட்டானே என்று சற்று ஆட்சிரியத்தோடு அவனை பார்த்த போது நான் ஒரு விஷயம் சொல்றேன் ;என்னை நீங்க திட்ட கூடாது என்று சற்று பதட்டத்தோடு சொன்னான் சரி சொல்லு என்றேன் இல்லை என் மேலே எந்த தப்பும் இல்லை மம்மி என்றான் அதற்குள் அஜித் வந்து கூப்பிட திரும்பவும் விளையாட சென்று விட்டான் என்னவாக இருக்கும் என்று யோசித்து சரி அப்புறம் கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்

 பின்னர் ஒரு வழியாக அவன் சுற்றி வளைத்து மழலை குரலில் சொல்லிய விஷயம் இது தான் அவன் பேட்டை எடுத்து கொண்டு சுபாஷ் வீட்டிற்கு சென்று இருக்கிறான் எதோ விளையாட்டு விசயமாக இரண்டு பேருக்கும் வாய் சண்டை வந்து இருக்கிறது ரெண்டு பேரும் வெவ்வேறு ஸ்கூலில் போர்த் படித்து கொண்டு இருக்கிறார்கள் இதை கண்ட சுபாசின் பாட்டி ( காரைக் குடியில் இருந்து வந்து இருக்கிறார்) ஏண்டா சுபாஷ் ,கார்த்தி கிட்டே போய் இப்படி பேசி கிட்டு இருக்கிறே என்ன இருந்தாலும் உனக்கு தங்கச்சி ஸ்வேதா இருக்கா ; நீ தணிஞ்சு போனா தானே கார்த்திக் நம்ம ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்குவான் நம்ம வீட்டு மாப்பிள்ளையை நீ நல்லா நடத்தாம இப்படி பேசிகிட்டு இருக்கியே என்று சொல்லி இருவரையும் சமாதான படுத்தி இருக்கிறார் :)) அவனின் வெட்கத்தை கண்டு எனக்கு ஒரே சிரிப்பு!

நேற்று அந்த பாட்டி ஊருக்கு போகிறேன் என்று சொல்லி கொள்ள வந்தார் ., நீங்க வேற உங்க பேத்தியை கல்யாணம் செய்து வைக்க போறீங்க ன்னு சொல்லிடீங்கன்னு எங்க கார்த்திக் வேற உங்க வீட்டு பக்கமே திரும்ப மாட்டேன் என்கிறான் என்று சொன்னதற்கு அடடா ;கார்த்திக் ,சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று அவனிடம் சொல்லி விட்டு என்னிடம் நீங்க எல்லாம் நூறு பௌனோடு நல்லா செவப்பு கலரா இருக்கிற பொண்ணு தானே பார்ப்பீங்க என்று என்னையும் அதிர வைத்தார் :)) குறும்பு பாட்டி தான் என்று சொல்லி சிரித்து கொண்டேன்.

Advertisements

HAPPY BIRTH DAY TO YOU

ஜனவரி 7, 2011
 
 
 
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

ராம ராம ஹரே ஹரே

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

 
 
 
 
 
 
 
எங்கள் கடை குட்டி கண்ணன் கார்த்திக்கின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன 
அவருடைய,என்னுடைய , பெற்றோர்களுக்கும் ,அக்கா தங்கைகளுக்கும்  அண்ணன் தம்பிகளுக்கும்
மற்றும்   எனது தோழிகளுக்கும் எங்களது மனபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
 
அவன் பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு அவன் சொன்ன நிபந்தனைகள்
 
1 பிறந்த நாள் அன்று  என்ன குறும்பு செய்தாலும் திட்டவோ அடிக்கவோ கூடாது
 
2 .எத்தனை சாக்லேட் வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்வானாம்
 
3 .கிண்டர் ஜாய் இரண்டு தனியாக வாங்கி தந்து விட வேண்டும்
 
4 .ஸ்கூல் பஸ்ல போனால் நிறைய சாக்லேட் பஸ்ஸில் வருகிறவர்கள்  வாங்கி கொள்வார்கள் ஆகவே நீங்க ஆபீஸ் போகறதுக்கு முன்னாடி  கார்ல டிராப் செய்யணும் ( இந்த கண்டிஷன் மட்டும் அவங்க அப்பா அவனை பேசி சமாளித்து விட்டார் )
 
5 .இன்னில் இருந்து அவனை கண்ணா என்று தான் கூப்பிட வேண்டுமாம் .,முழு பெயர் கார்த்திக் கண்ணா வாம் !
 
இதோ எளிய பிறந்த நாள் விழா போட்டோ
 
 
 
 
 
 
 
 

குட்டிஸ் டாக்

திசெம்பர் 18, 2010

 

 

 

 

 

 

இங்கே தற்போது அரை ஆண்டு தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது

பக்கத்து வீட்டு தோழியின் மகன் முதல் வகுப்பில் படித்து கொண்டு இருக்கிறான்

அவன் படிப்பில் விளையாட்டில்  படு சுட்டி .,இ ன்று என்னவோ  தெரியவில்லை

சரியாக படிக்காமல் அவன் அம்மாவிடம் போக்கு கட்டி கொண்டு இருந்தான் 

அவன் சேஷ்டை பொறுக்க முடியாமல் எனது தோழி அவனை நன்கு  அடித்து விட்டாள்

அவன் அழுது கொண்டே ,” ஏம்மா .,நீ நல்லா அடிக்கிறயே ! 

பேசாம போலீஸ் வேலைக்கு சேர்ந்து இருக்கலாமே!!” என்றான்  .,

அவளும் கோபத்தை மறந்து சிரித்து விட்டாள்.  

                               —————————————–

எனது  மகன்  மூன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறான்

பாடத்தில் சந்தேகம் கேட்க ,மகா மிஸ் க்கு  போன் செய்து கேட்கலாமா என்றதற்கு

பரபரப்பாக  வேண்டாம்மா வேண்டாம்மா என்றான் .,ஏன்பா  என்றதற்கு

அந்த மிஸ் டி சி வாங்கிட்டு போய்டாங்க என்றான் ;எனக்கு புரியவில்லை

எங்கேப்பா போய்டாங்க என்றதற்கு பிப்த்க்கு கிளாஸ் மிஸ் ஆகிட்டாங்க என்றான்!