ஒரு நாள் பதிவர் தொடர்ச்சி 1

ஜூன் 30, 2011

 

 

 

டீல் ஐ ஏற்பதா வேண்டாமா என்று நிருபர் யோசிக்கிறார்….

 

அப்போது பிரபல  பதிவரின்  மனதில் தான் முதல் முதலாக

ஒரு மொக்கை கதையை எழுதிய நிகழ்வு மனக்கண் முன்

வருகிறது ., ….

 

 

அந்த நாள்

சுருள் சுருளாக அந்த நிகழ்ச்சி ஓடி  கொண்டு இருக்கிறது …………

 

 

அந்த கதையை எழுதிய போது நடந்த சரித்திர பிரசித்தி பெற்ற

நிகழ்வு இதோ

 

 

ஏண்டி இங்கே கொஞ்சம் வரயா

வந்தேன் நானே வந்தேனே ; என்ன விஷயம் சொல்லுங்க  அக்கா 

ஏண்டி உன்கிட்டே என்ன சொன்னேன்

கதை எழுத சொன்னீங்க 

என்ன கதை எழுத சொன்னேன்

மொக்கை கதை எழுத சொன்னீங்க

எத்தனை கதை எழுத சொன்னேன்

ரெண்டு கதை எழுத சொன்னீங்க

எழுதினாயா

எழுதினேன் அக்கா

எத்தனை கதை எழுதினே

ரெண்டு கதை எழுதினேன்

ஒன்னு இங்கே இருக்கு

இன்னொன்னு எங்கேடி

அது தான் க்கா இது :))))

 

 

யேஏஏஏஐ ………..அக்காவை நோகடிக்காதே

என்ர பொறுமையும் சோதிக்காதே …………

சரிக்கா கோவபடாதீங்க உங்க உடம்புக்கு ஆகாது

இந்த கரிசனத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே

 

 

இப்போ என்ன நடந்துடுச்சு ! பொறுமையா தான் கேளுங்களேன்

 

அக்கா ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து குடித்து தன்னை ஆசுவாசபடுத்தி கொள்கிறாள் !

 

 

சரி சரி கண்ணு அக்கா ஒரு ப்ளாக் நடத்தி கிட்டு இருக்கேன் தானே

ஆமா இருக்கீங்க

அதுக்கு உன்கிட்டே கதை எழுதி தர சொல்லி கேட்டேன் இல்லையா

ஆமா கேட்டீங்க

என்ன கதை எழுத சொல்லி கேட்டேன்

நல்லா சிரிக்கிற மாதிரி மொக்கை மொக்கையா கதை எழுத சொல்லி கேட்டீங்க

எத்தனை கதை கேட்டேன்

ரெண்டு கதை கேட்டீங்க

எழுதினியா

எழுதினேன்க்கா

அம்மா ராஜாத்தி ஒரு கதை இங்கே இருக்கு

இன்னொரு கதை எங்கேன்னு சொல்லும்மா

அதான் க்கா இது ………………………

ஏய் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்று தங்கையை அடிக்க அக்கா துரத்துகிறாள்

அப்போது சீதா மாமி வருகிறார்

(பாக்கியம் ராமசாமி கதையில் வரும் சீதா இல்லே இவங்க!

இவங்க பேசினா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளோ இனிய குரல்)

என்ன என்ன இங்கே பிரச்சனை

அடைகலம் தேடி தங்கை

மாமியிடம்  

தஞ்சம் அடைகிறாள்

ஏண்டி திலகா எப்போ பார்த்தாலும் கோபிகா கிட்டே என்னடி பிரச்னை

இல்லே மாமி ;அவ என்னை ரெம்ப டென்ஷன் பண்ணறா

அதுக்கு ஏண்டி அவளை இப்படி தொரத்தரே

பாரு குழந்தைக்கு எப்படி மூச்சு  வாங்குதுன்னு

வேண்டாம் மாமி அவளை சப்போர்ட் ரெம்ப பண்ணாதிங்க 

இப்படி எனக்குன்னு தங்கையா வந்து வாச்சி இருக்கே குட்டி பிசாசு 

பாருங்க ஒண்ணுமே தெரியாத அப்பாவி யாட்டம் முழிக்கறதை  

அவ்வளவும் நடிப்பு …………………..

பாருங்க மாமி அக்காவை ,எப்படி கரிச்சு கொட்றாங்கன்னு

அய்யோடா ! உலகமாக நடிப்புடி ;சினேகா உன்கிட்டே பிச்சை வாங்கணும்

ஹய் அப்போ சினிமா ல நானும் நடிக்க போறேனா

என்னோட என் பாவோரைட் நடிகையும் நடிக்க போறாளா

வேண்டாண்டீ ;சினிமா பொழை  ச்சுட்டு   போகட்டும் பாவம்  விட்டுடு

சரிக்கா ;நீ எது சொல்லி நான் மறுத்து பேசி இருக்கேன்

உக்கும் என்று முகவாயை  இடித்து கொண்டு அப்போ அந்த இன்னொரு கதை எங்கேடி

அவள் அமைதியாகிறாள் ………………………………

அடியேய் .,உன்னை அப்படியே நாலு சாத்து சாத்தோணும்  என்று அடிக்க வருகிறாள்

 

 

மாமி குறுக்கே வந்து தடுகிறார்

தொ பாரு திலகா ;பொண்ணுன்ன அமைதியா இருக்கணும்

இப்படி எதற்கு எடுத்தாலும் கையை தூக்கினா உனக்கு தான் கேட்ட பேரு என்று அவளை

சமாதன படுத்தி கனிவோடு கோபிகாவை பார்க்கிறார்

கோபி என் கண்ணே ! குழந்தை முகத்திலே தெரிய்யறது

என்ன ஒரு தேசஸ் ! எனக்கு வாரிசா இவ தான் வர போறா

உலகமே இவளை ஒரு நாள் அண்ணாந்து பார்க்க போகுது என்று உச்சி முகர்ந்தார்

சரி ;அவ உங்க செல்லமாகவே  இருக்கட்டும்

நான் அந்த கடன்காரி கிட்டே ரெண்டு கதையை கேட்டு இருந்தேன் ;ஒரு கதை இங்கே இருக்கு

நீங்களே அவ கிட்டே கேட்டு  அந்த இன்னொரு கதையை வாங்கி கொடுங்கோ என்றாள் (முகம் சிவந்து கோபமாக )

அக்கா .

 

 

இவ்வளோ தானே ;இரு நானே  கேட்டு வாங்கி கொடுக்கிறேன் இதுக்கு போயி குழந்தையை திட்டிட்டு

வாம்மா குழந்தே ;அக்கா என்ன சொன்னா

அது வந்து மாமி அவ ப்ளாக் நடத்திட்டு இருக்காளோ இல்லையோ

ஆமா

அதுக்கு கதை வேணும் எழுதிட்டு வர சொன்னா

சரி

அது என்ன கதை

மொக்கை கதை

நீ எழுதிட்டு வந்தியோ

எஸ் மாமி

எத்தனை கதை செல்லம்

ரெண்டு கதை மாமி

சமத்து எங்க கோபி  

தேங்க்ஸ் மாமி

கண்ணு ,தங்கம் சூப்பர் ஆ இங்கே ஒரு கதை சிரிக்க

சிரிக்க எழுதி இருக்கே இல்லையா

ஆமாம் மாமி

இப்போது வெற்றி  பெருமிதத்துடன் அக்காவை பார்க்கிறார்

இதே மாதிரி அழகா இன்னொரு கதை எழுதி  இருக்கே தானே

ஆமாம் ஆமாம்

வெரி குட் ;அந்த இன்னொரு கதை கொடு கண்ணு

அது தான் மாமி இது !

ஆஆஆஅ

 மாமி யும் அக்காவும் மயக்கமாகிறார்கள்

தங்கை அந்த இடத்தை விட்டு எஸ் ஆகிறாள்..  

 

இப்போது பேட்டி நிருபரின் இந்த டீல் ஆல் நாட்டுக்கு என்ன

பிரயோஜனம் என்ற கேள்வி

அவர் முன் நினைவை (Flash back) கலைக்கிறது ………

 

தொடரும் :))

 

 

Advertisements

ஒரு நாள் பதிவர்

ஜூன் 27, 2011
 
 
 
 
 

 

 
இது ஒரு கற்பனை பதிவு !
 
யாராவது அவங்களை பத்தி தான் எழுதினேன்னு  சொன்னீங்க   அதுக்கு ரீல் டிவி பொறுப்பு ஏற்காதுங்க 🙂
 
 
இப்போது உங்களுக்காக ரீல் டிவி  நிலையத்தில் இருந்து நமது நிருபர் தீபிகா ….
 
கேமரா வுமன் ஹேமா தனது கை விரலை காண்பித்து 5 ,4 ,3 ,2 ,1  
ரெடி ஸ்டார்ட்

மேடம் உங்களை எங்க  ரீல்  டிவி க்காக பேட்டி காண வந்து இருக்கிறோம் 

மேடம் முகத்தில் புன்னகை

நேயர்களே இப்போது பிரபல பதிவர் பெயரிலி யுடன் நேர் காணல்!

வணக்கம்  மேடம்

வாங்கம்மா வணக்கம்!

 மேடம் எத்தனை வருசமா பதிவு எழுதி கிட்டு வரீங்க 

அது கடக்கிறது கழுதை ஒரு பத்து வருசமா !

உங்களோட பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது

சூடா ஒரு சமோசா!

 அது பேட்டி முடிச்சவுடனே தரோம் மேடம்

இல்லேமா அது தான் எனக்கு பிடிச்ச பதிவு !

 சரி மேடம் கவித கவித ன்னு எழுதறீங்களே அத பத்தி

சுட்ட கவிதையா சுடாத கவிதையா !

மேடம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்

மேடம் கிர்ர்ரர்ர்ர்ர் கோவத்துடன் தண்ணீரை எடுத்து குடித்து பின்னர் பாஸ் என்றார்!

ஏன் மேடம் தொடர்ந்து  மொக்கை பதிவுகளா எழுதி கிட்டு வரீங்க  

இல்லையே !

அப்போ அப்போ ஆன்மிகம் ,கதை ,கவிதை ,கட்டுரை எல்லாம் போட்டு கிட்டு தான் இருக்கேன்

 அதென்ன மொக்கை பதிவு என்ன அவ்வளோ ஈஸியா ;

எவ்வளோ கேலிகள் , கண்டனங்கள் ,விமர்சனங்கள் etc …………………….. 

ஆமாம் என்னோட மொக்கை பதிவுகளை படிப்பவர்களின் தொகை 15  விழுக்காடு அதிகமாகி இருப்பது தெரியுமா உங்களுக்கு !

அதை படிக்காதவர்கள் தொகை 80  விழுக்காடு என்பது தெரியுமா உங்களுக்கு

சரி என்னோட பதிவை ரசித்தவர்கள் 10001பேரு!

என்ன மேடம் மொய் எழுதற மாதிரி சொல்றீங்க ;மீதி இருக்கிற கோடானு கோடி பேர்கள் ரசிக்கலைன்னு  தானே அர்த்தம்

என்னோட பதிவை படிச்சவங்க  32  பேரு வாய்விட்டு சிரிச்சாங்கன்னு  பின்னூட்டங்கள்  சொல்லுது!

1652  பேரு மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள்ன்னு தமிழ் மணம் சொல்லுதே

தரவரிசை பட்டியலில் எனக்கு 29 ,999  இடம் என்று கூகிள் ரிப்போர்ட் சொல்லுதே

அவங்க மொத்தமே 30000  பேரை தான் தேர்ந்து எடுத்து தர வரிசை கொடுத்து இருக்காங்கன்னு அவங்க அறிக்கையே சொல்லுதே

வந்து வந்து ……………………..!

 சொல்லுங்க மேடம்  லைவ் ப்ரோக்ராம் நடந்து கிட்டு இருக்கு இல்லே

மேடம் மீண்டும் கோவத்துடன்

சரிம்மா ;ஒன்னு செய்யி ;நீ சிரிக்க சிரிக்க ஒரு  மொக்கை பதிவு போடு !

அது அது எனக்கு பின்னூட்டம் தான் தெரியும்

உனக்கு சவால் விடறேன் உன்னாலே  ஒரு நாள் பதிவரா இருந்து ஒரு மொக்கை பதிவு  எழுதி போஸ்டா போட முடியுமா!

என்ன பேச மாட்டேன்கிறே மா!

இப்போ தெரியுதா மொக்கை பதிவு எழுதறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லே ;அதுக்கு தான் நிறைய யோசிக்கனும்

நிறைய ஹோம் வொர்க் செய்யனும் ;நிறைய மொக்கை பதிவுகளை படித்து அதை ரீமிக்ஸ் செய்து போடணும்ன்னு உனக்கு தெரியுமா !

நின்னா யோசிக்கோணும்

நடந்தா யோசிக்கோணும்

ஓடினா கூட யோசிக்கோணும்

சரி அதை விடு

காய்கறி கடைக்கு போகும்போது

மளிகை கடைக்கு போகும் போது

ஏன் ஷாப்பிங் போகும் போது கூட யோசிக்கோணும்

செஸ் விளையாடும் போது

கேரம் விளையாடும் போது

ஏன் கார்ட்ஸ் விளையாடும் போது கூட யோசிக்கோணும்

காரில் போகும் போது

ட்ரெயின்ல   போகும் போது

ஏன் பிளைட் ல போகும் போது கூட யோசிக்கோணும்

என்று  சொல்லி விட்டு மேடம் பெரு மூச்சு விட்டு கொள்கிறார்

இல்லை ;என்ன இருந்தாலும் நீங்க மொக்கை பதிவு போடறதாலே நிறைய பேருக்கு மன உளைச்சல் மற்றும் எரிச்சல்  ஆளாகி மன நிம்மதி இல்லாம இருக்காங்கன்னு ……………………….

எப்போவும் விமர்சனம் ஈஸி ;ஆனா பதிவு எழுதறது ரெம்ப கஷ்டம்!

ஒண்ணா நீ  ஒரு நாள் பதிவரா இரு ;இல்லே என்னை பாராட்டி கமெண்ட்ஸ் ஒவ்வொரு பதிவுக்கும்  போடு

என்ன டீலா !

வந்து வந்து …………………..

வந்தாவது போயாவது சொல்லும்மா லைவ் ப்ரோக்ராம் நடந்து கிட்டு இருக்கு இல்லே!

……………………….

 தொடரும் !


முயலுக்கு மூணு காலு

திசெம்பர் 15, 2010

 

தான் பிடித்த முயலுக்கு மூணு காலு என்ற பழமொழியை ஒட்டி  ஒரு சின்ன சிந்தனை!  
 
முதலில்  நீங்க பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லறதை நிறுத்துங்க !
 
 ஏன்னா அந்த முயலுக்கு ஒரு காலு அடிபட்டு இருக்கறதாலே அது நொண்டி கிட்டு
 
 வந்ததை வைத்து நீங்க அந்த  முயலுக்கு மூணு காலுன்னு முடிவு பண்ண கூடாது!
 
யார் அங்கே !நீங்க என்ன சொல்றீங்க ! முயலுக்கு ஐந்து காலா! அதுவும் தப்பு!
  
அப்புறம் இப்போ சொல்றீங்களே இந்த முயலுக்கு ஐந்து காலுன்னு இதுவும்  தப்பு !
 
 நல்ல பாருங்க இந்த முயல் நடக்க முடியாம
 
வாக்கிங் ஸ்டிக் வைத்து நடந்து வருவதை !
 
ஒருக்கால் உங்களுக்கு இது பற்றி சந்தேகம் இருந்தா
 
ரெண்டே ரெண்டு கால்(  போன் காலை சொன்னேங்க ) 
 
குந்தவைக்கு ஒரு போன்கால் அப்புறம் அப்பாவி தங்க்ஸ் க்கு ஒரு போன்கால் போட்டு
 
கேட்டுகோங்க !
 
அவங்க இதற்கு அது தாங்க மூணு கால் பிரச்னைக்கு நீதிபதியா இருந்து தீர்ப்பு அளிப்பார்கள் 
 
  
உங்களை நீதிபதி பதவி எல்லாம் கொடுத்து
 
கௌரவித்து பெருமை பட்டு  கொள்கிறேன் என்பதை
 
 தெரிந்து கோங்க குந்தவை & அப்பாவி தங்க்ஸ்
 
 
என்ன குந்தவை !
 
ஜானு கிட்டே  கால் போட்டு பேசணுமா ! கால் எதுக்கு !
 
நேரிலையே போலாம்பா  
 
சரி சரி உங்க கிரெடிட் கார்ட்ல ரெண்டு டிக்கெட் புக்
 
பண்ணுங்க !சிட்னியையும் பார்த்துட்டு ஜானு கிட்டே
 
பிரசாதமும் வாங்கிட்டு வரலாம் ! ஓகே வா
 
கூடவே ஜூலியா கில்லார்டை பார்கனுமா
 
யாருங்க அது ! உங்க கிளாஸ் மேட் ஆ
 
என்ன ஆஸ் பிரதமரா ! அம்மா ஆளை விடு தாயே !
 
நான் இந்த விளையாட்டுக்கு வரலே வரலே !!
 
 
என்ன அப்பாவி ! நீங்க என்ன சொல்றீங்க
 
OG ல இருந்து 4G வரைக்கும் நீதிபதியா இருக்கணுமா
 
இந்த கோயம்புத்தூர் குசும்பு தானே வேண்டாம்கிறது !!
 
என்ன ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் நீதிபதியா!
 
உங்களுக்கு ரெம்பா குறும்புங்க!  
 
 
பின் குறிப்பு :
 
அவங்க முயலை பிடித்து கொண்டு  வாங்க  
 
என்றால் தயவு செய்து மறக்காம கேட்டு
 
அந்த முயலை திரும்ப வாங்கிகிட்டு போய்டுங்க
 
இல்லன்னா நீங்க முயல் கறி பதிவு படித்து
 
திருப்தி பட்டு கொள்ள வேண்டியது தான் தோழிகளே !
 

சின்னதா ஒரு கடி !! தொடர்ச்சி 1

ஜூன் 5, 2010

1)இவ‌ர் க‌ணி‌னி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் வேலை பா‌க்குறவரு போல?

இதய‌த் துடி‌ப்ப வ‌ச்சே எ‌ப்படி சொ‌ல்‌‌றீ‌ங்க டா‌க்ட‌ர்.

இதய‌ம் ல‌ப் ட‌ப்பு‌ன்னு துடி‌க்காம லே‌ப் டா‌ப் லே‌ப் டா‌ப்பு‌ன்னு துடி‌க்குதே.. அத வ‌ச்‌‌சி‌த்தா‌ன்.

2)ஆசிரியர் : என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியே போயிட்டு வந்தாலும் தொண . . . தொண . . . ன்னு சத்தம் போடுவீங்க.. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே . . . வெரி குட்!

மாணவன் : நீங்க வெளியே போயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே . . . . மறந்துட்டீங்களா ஸார்?

3)என் பையன் இவ்வளவு அதிக மார்க் வாங்கி பாஸ் பண்ணுவான்னு நினச்சு கூட பாக்கல்ல!

வெரி குட் அடுத்து என்ன செய்யப்போற?

இதுல நான் என்ன செய்ய வே‌ண்யடிது இரு‌க்கு, அவனே 2ம் கிளாஸ்ல போ‌ய் உ‌ட்கா‌ந்து‌க்க வே‌ண்டியதுதா‌ன்

4)எங்க ஆபீஸ்ல பிரச்சனை ஏற்பட்டா ஒரு குரூப் பிரச்சினையை அலசும், இன்னொரு குரூப் தீர்வுகள அலசும், இன்னொரு குரூப் செஞ்சு முடிச்சுடும்அப்படி என்ன பிரச்சினையை தீர்த்திங்க சமீபமா?

ஒரு டேபிளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாத்தினோம்

5)வீட்டோட மாப்பிள்ளையா இருந்தாரே உன்னோட மாப்பிள்ளை இப்ப எங்க ஆளையே காணோம்? அத ஏன் கேக்கற, வீட்டு வேலையெல்லாம் செய்யறார், ரொம்ப மரியாதையா, அடக்கமா இருந்தார் அப்படீங்கறதுக்காக, என் மனைவி வீடு வீடா போய் என் மாப்பிள்ளை மகாலட்சுமியாட்டம்-னு அடிக்கடி சொன்னா, மனுஷன் கோச்சுட்டு போயிட்டார்.

6)ஒருவ‌ர் : ட்ரெயின்ல கடைசி கோச்ல உக்காந்தாலே இதான் பிரச்சினை. டீ, காபி, டிபன் எதுவும் வரமாட்டேங்குது ம‌ற்றொருவ‌ர் : புகார் கொடுக்க வேண்டியதுதானே ஒருவ‌ர் : கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்ல ம‌ற்றொருவ‌ர் : என்ன புகார் கொடுத்த? ஒருவ‌ர் : கடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச் சொன்னேன்
7)உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள். திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns). செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men) புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible) வியாழன் : கருவாப் பசங்க (Men in Black) வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
8)டாக்டர் : என்ன ஃபேமிலியோட வந்துட்டீங்க? நோயாளி : எனக்கு 3 நாளா ஒரே காய்ச்சல், என் மனைவிக்கு சுகர், என் பையனுக்கு கால்ல ஆணி, என் பொண்ணுக்கு… டாக்டர் : நிறுத்துங்க நிறுத்துங்க..இப்படியெல்லாம் சொல்லி எனக்கு சந்தோஷத்துல ஹார்ட் அட்டாக் வர வச்சுடாதீங்க!
9)வீட்டுக்காரர் : டெய்லி காய்கறி வாங்கறதுல கமிஷன் அடிச்சு நீ வீடே கட்டியிருக்கலாமே? வேலைக்காரன் : போங்கய்யா என்னை ரொம்ப புகழாதீங்க
10) 
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.. கணவன் : ?!?!?!
முதல்ல பட்டாச பிரிக்கிறார், அப்புறம் ஒரு வாரம் கழிச்சு ஒண்ணு ஒண்ணா திரியை பிக்கறார், ஒரு வாரம் கழிச்சு தீக்குச்சிய எடுக்கறார், மீண்டும் ஒரு வாரம் கழிச்சு பத்த வைக்கிறார், அப்புறம் ஒரு வாரம் கழிச்சு வெடிய வெடிக்கறாரே – யார் அவர்? அவர் தான் மெகா சீரியல் மேகநாதன்!
 நெட்டில் படித்தது

 
   
 
 

MY ROOM

மே 21, 2010

I have visited my friend house.Her daughter wrote something in the paper and affixed in front of her room.Its interesting as shown below.,

                                                                                           MY ROOM

                                                                  AND MY RULES ARE STRICT

 

IT IS ABSOLUTELY FORBITTEN:

to enter without my permission!

-to listen outside my door!

-to borrow something without approval!

to make stupid comments on my posters!

to open my drawers!

to gothrough my collections!

to sit down on any of the scorpions!

to eat sweets without offering me one!

to criticize with my musicical taste!

to make correction on my notes!

to mention the word “HOME WORK”!

to argue with the owner of this room!

BUT IT IS PERMITTED:

-to put a coin in the money-box!!

-to flatter the owner of the room!!

 யாரங்கே ! கொங்கு மண்டல இளவரசி காத்திருப்பதாக சொல்லி
சிட்னி இளவரசி சியாமளா தேவியையும்;குவைத் இளவரசி குந்தவை தேவியையும்
கருத்துகள் கூறி  உரையாடி மகிழ அழைத்து வாருங்கள் !!

 


சின்னதா ஒரு கடி

மே 17, 2010

1)1  : ……………………………,கேள்வி பட்டிங்களா?
   2 : இல்லைங்க .,நான் கோவில் பட்டிங்க!
1     : ??????!!!!!!

2)இனிமே கதை எழுதறதில்லேன்னு முடிவு பண்ணிட்டே‌ன்..

ஏன்?

 பின்னே என்ன? நான் எந்தக் கதை எழுதினாலும்… அதே‌க் கதைய வேறு ஒரு‌த்த‌ர் ஏற்கனவே எழு‌திடுறாரு.. அதா‌ன்…!!

3)கோ‌பி, எ‌ன்னோட வகு‌ப்பு நேர‌த்துல யா‌ர் யா‌ர் தூ‌ங்குறா‌ங்க‌ன்னு பே‌ர் எழு‌தி வை டா..

 இ‌ந்தா‌ங்க சா‌ர் தூ‌ங்‌கினவ‌ங்க பேரு..

எ‌ன்னடா இது.. ந‌ம்ம ‌கிளா‌ஸ்ல இ‌ல்லாதவ‌ங்க பே‌ர் எ‌ல்லா‌ம் இரு‌க்கு..

ம‌ன்‌னி‌ச்‌சி‌‌க்க‌ங்க சா‌ர்.. தூ‌க்க கல‌க்க‌த்துல அ‌ப்படி எழு‌தி‌ட்டே‌ன்.

4)பொண்ணுக்கு என்னென்ன போடுவீங்கன்னு கேட்டது தப்பாப் போச்சா? ஏன்?

காலையில ஆறு இட்லி, மதியம் குழம்பு, ரசம், தயிரோட நானூறு கிராம் சாப்பாடு, சாயங்காலம் மூணு பூரி, ராத்திரிக்கு மறுபடியும் ஃபுல் மீல்ஸ்னு சொல்லி வெறுப்பேத்துறா‌ங்க!

5) என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேண்றீங்களே?

இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தர முடியாது!

6)என்னடா இது நோட்டு புல்லா மணி மணின்னு எழுதி வச்சிருக்க

 நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு நோட்டு புத்தகத்து எடுத்து பார்த்தா கையெழுத்து மணி மணியாக இருக்கணும்னு

7)என்னடா ஓட்டப் பந்தயத்துக்கு வரும்போது கையில தீப்பந்தத்தோட வந்திருக்க?

 நீங்க தானே சார் சொன்னீங்க.. ஜெயிக்கணும்னா பயர் வேணும்டான்னு. அதான் சார் கொண்டாந்தேன்

அலுவலக‌த்‌தி‌ல் மேனேஜ‌‌ரி‌ன் டே‌பி‌ளி‌ல் இரு‌க்கு‌ம் தொலைபே‌சி அடி‌க்‌கிறது…

உத‌வியா‌ள‌ர் : ஸார்… உங்க மனைவிகிட்டேயிருந்து போன்…

மேலாள‌ர் : பெரிசா நான் என்ன பேசிடப் போறேன்…? நீயே அட்டென்ட் பண்ணி, ‘ம்…ம்…ம்…ம்…’னு செல்லிடு!

9)வக்கீல்: என்னோட கட்சிக்காரர் சார்பாக புதிய சாட்சியை கொன்டுவந்துருக்கேன் மை லார்ட்!

நீதிபதி: என்ன புதிய சாட்சியம் கிடைச்சிருக்கு?

வக்கீல்: நான் நினைச்சது போல என் கட்சிக்காரர் அவ்வளவு பஞ்சப்பிசினாரி இல்ல. அவர் கிட்ட இன்னும் ஒரு 5 லட்சம் வரை தேறும் மை லார்ட் !

10)என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல்ல ‌நி‌ச்சயமா இட‌ம் கிடைக்குமுனு தோணுது…!
கண்டிப்பா கிடைக்கும்! அது‌க்கு ஏ‌ன் கவலை‌ப்படு‌றீ‌ங்க !
இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிறது மா‌தி‌ரியே அவ‌ன் ‌பிள‌ஸ் டூலயு‌ம் வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு…

11)நோயாளி : டாக்டர் நான் கடவுளா உணர்றேன். டாக்டர் : ஓ! அப்படியா, கொஞ்சம் ஆரம்பத்திலேருந்து சொல்லுங்க.

நோயாளி : முதல்ல கா‌ற்று, ‌நீ‌ர் எ‌‌ல்லா‌ம் உருவா‌க்‌கினே‌ன். அ‌ப்பு‌ற‌‌ம் ஆகாயம், பூமி இதையெல்லாம் படைச்சேன்.

டாக்டர் : ?????
12)ஆ‌சி‌ரிய‌ர் : சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.
மாணவ‌ன் : நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

       (வலையிலிருந்து   புசித்தவை)