இந்த நாள் இனிய நாள்

மே 8, 2012

 

Bhuvana GovindYesterday 17:27 நான் இப்ப உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். இது ஒரு உண்மை கதை. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒருத்தர பத்தின கதை. கிட்டத்தட்ட அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி… கொஞ்சம் அதிகமா இருக்கோ, சரி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் ஒரு ஊர்ல ஒரு நிமிஷம் மரம் எல்லாம் அசையாம நின்னுடுச்சாம், மேல வந்த அலை அப்படியே ஒரு செகண்ட் hang ஆய்டுச்சாம், கோவில்ல அடிச்ச மணி அப்படியே சைலண்ட் ஆய்டுச்சாம்… நான் இப்ப உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். இது ஒரு உண்மை கதை. உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒருத்தர பத்தின கதை. கிட்டத்தட்ட அம்பது அம்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி… கொஞ்சம் அதிகமா இருக்கோ, சரி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் ஒரு ஊர்ல ஒரு நிமிஷம் மரம் எல்லாம் அசையாம நின்னுடுச்சாம், மேல வந்த அலை அப்படியே ஒரு செகண்ட் hang ஆய்டுச்சாம், கோவில்ல அடிச்ச மணி அப்படியே சைலண்ட் ஆய்டுச்சாம். அதாவது, உலக இயக்கமே ஒரு நிமிஷம் நின்னுடுச்சாம். அப்ப தமிழ்நாட்டின் ஒரு அழகான ஊர்ல ஒரு பெண் கொழந்தை பொறந்துச்சாம். அந்த கொழந்தைக்கு அவங்க பாட்டி பேரை வெச்சாங்களாம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா அந்த கொழந்தை வளந்து அழகான பொண்ணா ஆச்சாம், எல்லார்கிட்டயும் ‘பிரிய’மா இருக்குமாம் அந்த பொண்ணு. இப்படி இருக்கைல ஒரு நாளு, ஒருத்தர் அந்த பொண்ணை “பொண்ணு பாக்க” வந்தாராம் (ஐயோ பாவம், யாரு பெத்த புள்ளையோ..:) அப்புறம் என்ன ஆச்சுன்னா…. (இப்ப தொடரும் போடணுமோ… ஹி ஹி… சரி மிச்சத்தையும் சொல்றேன் இருங்க) அப்புறம் என்ன ஆச்சுன்னா… அந்த நல்லவர் நம்ம அம்மணிய ‘பார்த்த முதல் நாளே’ கிளீன் போல்ட் ஆகி ஆயுள் கைதியா சிக்கிகிட்டாராம். அப்புறம் என்னவா? And they lived happily ever after தான்…;))) இப்ப எதுக்கு இந்த கதைனு கேக்கறீங்களா? நாளைக்கி அந்த “பிரிய”மான அம்மணிக்கு பர்த்டே’வாம், அதுக்கு தான் அவங்க வாழ்க்கை வரலாறை இங்க சொல்லி இருக்கேன். யாருனு கண்டுபுடிச்சீங்களா? சரி நானே சொல்லிடறேன் அவங்க சாதாரண ஆள் இல்ல, திருப்பூர் திலகி, அஞ்சா நெஞ்சி, மாதர் குல மங்கி ஐயோ சாரி ஒரு ரைமிங்ல வந்துடுச்சு… மாதர் குல மங்கைனு சொல்ல வந்தேன். எங்கள் அக்கா (ஐயோ சொக்கா) பிரியமான ப்ரியா அக்காவுக்கு நாளைக்கி ஹேப்பி பர்த்டே’ங்க. அதான் மேட்டர், அதுக்கு தான் இவ்ளோ பீட்டர்…:) ஹாப்பி பர்த்டே டு யு… ஹாப்பி பர்த்டே டு யு… ஹாப்பி பர்த்டே டு டியர் ப்ரியாக்கா… ஹாப்பி பர்த்டே டு யு… +Priya. R ப்ரியா அக்காவின் பிறந்த நாளை முன்னிட்டு உங்க எல்லாருக்கும் ஒரு கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா……….. வாங்கி தரணும்னு தான் நெனச்சேன். ஆனா கடைல வாங்கறதெல்லாம் ஒடம்புக்கு அவ்ளோ நல்லதில்ல பாருங்க. அதான் நானே ஸ்பெஷல் ஸ்வீட் ரெடி பண்ணிட்டு இருக்கேன், எல்லாருக்கும் பார்சல் அனுப்பறேன் சரியா? (இருங்க இருங்க ஓடாதீங்க…;)

 

இன்றைய நாள் மிகவும் இனிமையாக என்றுமே மறக்க முடியாததாக இருந்தது .,காரணம் அப்பாவி தங்கமணி என்று அழைக்க படும் பிரபல பதிவர் அன்பு தங்கை புவனா தான் ., இப்படி ஒரு வித்தியாசமான வாழ்த்து மடல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை ! ரொம்ப தேங்க்ஸ் புவனா

 

Advertisements

PRIZE PRIZE SURPRIZE

மார்ச் 11, 2011

 

ஹரே கிருஷ்ணா

 இன்று எங்களின் திருமண நாள் ;இறைவர் எங்களை ஆசிர்வதிப்பாராக.. .,

 

காலையில் எழுந்து பார்க்கிறேன்

 

திகைப்பு,ஆட்சிரியம் ,மகிழ்ச்சி 

 

எங்க பசங்க எங்களுக்கு முன்பே சுமார் 4 .50 க்கு எழுந்து தோரணம் ,கலர் பலூன்கள்  போன்றவற்றால் 

ஹாலை அலங்காரித்து பிரமாத படுத்தி இருந்தார்கள் 

 

தனி தனியாக அவர்களின் சேமிப்பில் இருந்து பரிசு பொருள்கள் ,

இனிப்பு(chaco bars) வகைகளை வாங்கி வேறு வைத்து இருந்தார்கள்.

 

எனக்கு ஒரு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை 

 

இந்த பசங்க இவ்வளோ சின்ன வயசிலே எப்படி இதெல்லாம் தெரிந்து வைத்து செய்து இருக்கிறார்கள் என்று தான் .,

 

அவங்க அப்பாவும் எழுந்ததும் அவருக்கு எனக்கு என்று தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

 

அவங்க அப்பாவுக்கும் சந்தோசம் .,உன்னிடம் ஏற்கனவே இதை பத்தி சொன்னார்களா என்று என்னை பார்த்து கேட்டார் 

 

அவர் எல்லாம் அவங்க பெற்றோர் களிடம் இது போல் ஒரு நாள் கூட சொன்னதோ செய்ததோ கிடையாதாம் 

 

நானும் தான் என்றேன் .,நமது காலம் வேறு இவர்கள் காலம் வேறு என்று  நாங்கள் பேசி கொண்டோம் !

 

நான் பசங்கல கண்டிப்புடன் நடத்துவதால்  பசங்க  என்னிடத்தில் தான் சற்று பயம் எல்லாம் இருக்கும்  

அவங்க அப்பா இடத்தில் செல்லம் அதிகம்

அவங்க அப்பாவிடம் கொஞ்சி பேசும் போதெல்லாம் எனக்கு கொஞ்சம் வெண் பொறாமையாக கூட இருக்கும்

நான் கண்டிப்பா இருப்பதால் பிற்காலத்தில் என்னிடம் பாசம் அன்பு இல்லாமல் போய் விடுமோ என்று என்று எனது

கவலையை அவரிடம் தெரிவிப்பேன்

அவரும் சிரித்து கொண்டே போ (போடி)  அசடு ! நீ எப்போதும் அவர்கள் அருகில் இருப்பதால் கண்டிப்போடு தான் இருக்க வேண்டும்

நான் கம்பெனி ,வெளியூர் ,வெளிநாடு என்று இருப்பதால் அதிகம் கண்டிசனோடு  இருக்க முடியாது என்பார்

 

அடுத்து நம்ம  பாமிலி சாங் (குடும்ப பாடல்) பாடுங்கப்பா என்று ஒரே கலாட்டா

 

எதுக்குடா பசங்களா குடும்ப பாடல் என்றால்,ஏன் மம்மி நீங்க சினிமாவே பார்கறது இல்லையா ; நாம எங்கையாவது போய் ஒருத்தரை ஒருத்தர் மிஸ் பண்ணிட்டால் நம்ம பாமிலி பாடல் பாடினா தானே கண்டுபிடிச்சு சேர முடியும் என்று பதில் வேறு !

 

உடனே அவங்க அப்பா

 முத்துக்கு முத்தாக சொத்துக்கு  சொத்தாக

அண்ணன் தம்பி சேர்ந்து இருப்பீங்க கண்ணுக்கு கண்ணாக  என்று

பாட ,இவர்களும் கோரசாக பாட வீடு களை கட்டியது  

இது அவங்க அப்பா காலத்து பாடலாம் அவரும் அவர் தம்பியும் விளையாட்டாக பாடி கொள்வார்களாம்

இப்போ இது பாமிலி பாடல் ஆகி விட்டதாம் .,எனக்கு சிரிப்பு வந்தது

   அடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பின் நான் சமையல்  செய்ய கூடாது என்று சொல்லி இருவருக்கும் ஆளுக்கு ரெண்டு தோசை வார்த்து கொடுத்தனர்

உட்காருங்கடா பசங்களா என்று பின் நான் ஜாங்கிரி ,பூரி குருமா செய்து சாப்பிட  வைத்தேன்

அப்புறம் இந்த குட்டிப்பயல் கார்த்திக் என் கையை பிடித்து அவங்க அப்பா கையில் கொடுத்தான்

எனக்கோ முகம் சிவந்து வெட்கம் வேறு……

அதை பார்த்த அவங்க அப்பாவோ கல்யாணத்துக்கு அப்புறம் இப்போ தான் உங்க அம்மா வெட்கப்பட்டு பார்த்து இருக்கேன் என்று கிண்டல்,கேலி ………….

 

  அவரின் தங்கையிடம் சொல்லி வாங்கி வைத்து இருந்த

அழகிய முத்து மாலையை அவர் எனக்கு பரிசளித்தார்

 

பின்னர் இந்த பசங்க பிரண்ட்ஸ் ப்ரீதா,அமலன் வாழ்த்துக்கள் கூறி பரிசு கொடுத்து சென்றனர்

மற்ற அருகில் உள்ள குழந்தைகள் ஹாப்பி வெட்டிங் டே ஆண்டி அண்ட் அங்கிள் என்று ஒரே சத்தம்

 

பிறகு அருகில் உள்ள ரங்கநாதர் கோவில் சென்று பூதேவி ஸ்ரீதேவி சமேத அரங்கநாதரை அர்ச்சனை செய்து வழிபட்டு

வந்தோம்

 

இரண்டு பெற்றோர் வீட்டில் இருந்தும் வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள்
 
 
 

 

நாங்கள் ஆதர்சன தம்பதிகளா என்றெல்லாம் தெரியாது

ஆனால் ஒருவரை  ஒருவர் புரிந்து கொண்டு  ,விட்டு கொடுத்து ,சகிப்பு தன்மையோடு

மனவள  கலை  அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னபடி வாழ முயற்சி  செய்து கொண்டு

 இருக்கிறோம் என்பது தான் உண்மை! இறைநிலைக்கு எனது நன்றி  !!

 

 

 


நன்றி கூறும் நாளும் தான் !

பிப்ரவரி 14, 2011

 

 

// சொல்ல மறந்துட்டேனே, வெளிநாடுகளில் இது அன்பைக் காட்டும் ஒரு தினமே. எங்கே சென்றாலும் தெரிந்தவரோ, தெரியாதவரோ நாளைய தினம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். குழந்தைகள் அவர்கள் ஆசிரியர், சக மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். வாழ்த்து அட்டையைக்கைகளால் தயாரித்துக் கொடுப்பது அங்கே மிகவும் பெருமையான ஒன்றாகும். எங்கள் அப்பு கூட இதற்கென ஒரு பேப்பர் தயார் செய்து அதிலே அதற்குத் தெரிந்தவரையிலும் வண்ணம் அடித்து அவங்க வகுப்பு ஆசிரியருக்குக் கொடுக்கப்போகிறது. அப்புவின் வயது மூன்று. ஆக இது காதலருக்கு மட்டுமான தினம் அல்ல என்பது புரிந்ததா? என்னையும் கூப்பிட்டு நாளைக்கு அப்பு வாழ்த்துச் சொல்லும்! என்னிடம் உள்ள அன்பை அது வாழ்த்துச் சொல்லுவதன் மூலம் வெளிப்படுத்தும். ஆகவே நாளைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் தம் தம் சகோதர அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம். ஆகவே நம் கண்ணில் பட்ட தெரிந்த நபர்களுக்கு எல்லாம் நன்றியைத் தெரிவிக்கலாம். நம் அன்பை இப்படி வெளிப்படுத்தலாம். அவர்கள் மனம் மகிழ்வது உங்கள் மனம் மட்டுமல்ல வயிறும் நிறைந்திருக்கும், முயன்று பாருங்கள். பெரிய விருந்தே சாப்பிட்டாற் போன்ற உணர்வு வரும். வங்கிக்குப் போனால் வங்கி ஊழியர், காய்கறி வாங்கும் கீரைக்காரி, பால் ஊற்றும் பால்காரர் என நாம் நேசிக்கவும் அன்பு காட்டவும் இந்த உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. மறவாதீர்கள் //

இந்த வாக்கியங்கள் நானும் புவனாவும் மதித்து போற்றும் சீனியர் பதிவர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுடையது .,இதற்கு முன்னர் இதை காதலர் மட்டும் கொண்டாடும் தினம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் .,இப்போது தான் இதர்க்கு இந்த மாதிரியும் பொருள் கொள்ளலாம் என்று எனக்கு தெரிந்தது ., இந்த வித்தியாசமான கருத்து என்னையும் யோசிக்க வைத்தது படித்தவுடன் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல அவரது கமெண்ட்ஸ் பகுதியில் பல முறை கிளிக்கியும் பின்வருமாறு தான் பதில் வருகிறது 😦

Blogger Sign In We found the following errors: Your browser’s cookie functionality is disabled. Please enable JavaScript and cookies in order to use Blogger.

இருந்தாலும் அவருக்கு இந்த பதிவின் மூலமே எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .,அவரை பற்றி உங்க எல்லோருக்கும் முன்னரே தெரிந்து இருக்கலாம் .,தெரியாதவர்களுக்கு அவர்களின் ப்லோக்குகளை பற்றி கூறட்டுமா .,

கண்ணனுக்காக

சாப்பிடலாம் வாங்க

பேசும் பொற்சித்திரமே

என் பயணங்களில்

ஆன்மீக பயணம்

இதில் முதல்மையானது எண்ணங்கள் http://sivamgss.blogspot.com/

இந்த எண்ணங்கள் ப்லோக்ளில் மட்டும் அவர் 1139 ௦ பதிவுகள் போட்டு இருக்கிறார்(இது தொடரும் ) என்றால் நீங்களே அவரின் பதிவு ஆற்றலை பார்த்து கொள்ளுங்களேன் .,

நான் சில சமயம் எனது டீமில் இருக்கும் ஆட்களிடம் விளக்கம் கேப்பேன் .,சில கட்டுரை வரிகளை அவர்களிடம் டிக்டேட் செய்து தமிழில் டைப் அடித்து தர சொல்லியும் வாங்கி பதிவாக போட்டு இருக்கிறேன்., அது போல இந்த “கீதாம்மா அவர்களே.,நீங்களே எல்லா பதிவுகளையும் எழுதனீர்களா என்று நான் கேட்கவில்லை எனது வாய் கேட்கிறது”‘ என்று கூட கேட்டு அவரை சற்று எரிச்சலும் படுத்தி இருக்கிறேன் அதற்கு கூட அவர் கோவ படாமல் மென்மையாக மறுத்து பதிலும் போட்டு இருக்கிறார் .,

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை ;மார்கழி பதிவுகளால் முடிந்து ஒரு நாள் ,”எல்லா பதிவுகளையும் படித்து பின்னூட்டங்கள் போட்ட ப்ரியாவுக்கு ஒரு பரிசு என்று ஒரு மாலையும் ( விலை மதிப்பில்லா வெங்காய மாலை!) என்று ஒரு பதிவும் போட்டு இருந்தார் படித்து ரொம்ப ரொம்ப சந்தோஷ பட்டேன் .,என்னவரிடமும் ,என் குழந்தைகளிடமும் பெருமை பொங்க கூறி மகிழ்தேன் .,அந்த வாரத்தில் ஞாயிறு அன்று எனக்கு ரங்கஸ் பார்ட்டி கூட கொடுத்தார் .,அம்மா பிரைஸ் வாங்கி இருக்காங்க என்று குழந்தைகளும் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தில் எனக்காக கொஞ்சம் செலவிட்டு மகிழ வைத்தனர்

 இந்த மாலைக்கு தான் நம்ம அப்பாவி புவனாவும் சட்ட படி உரிமை கோருவேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறார் ! நிற்க .,

 நீங்க எந்த விசயத்தையும் அவரிடம் கேட்டு விளக்கம் பெறலாம் ;என் குழந்தைகளுக்கு யாபக மறதிக்கும் புத்தி கூர்மைக்கும் அவரிடம் கேட்டு அதற்கும் பதில் சொல்லி உள்ளார் ;

ஆரோக்கிய குறிப்பு ,மருத்துவ குறிப்பு ,சமையல் குறிப்பு ,சமையல் சாமான்கள் குறிப்பு ,ஆன்மிகம் ,இறையருள் ,தியானம் ,தவம் மற்றும் மனிதர்களுக்கு தேவையான மன நிம்மதி ,மன மகிழ்ச்சி அதனை அடையும் வழி,ஆன்மிக பயன்கள்,பயணங்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் உங்களை சிரிக்கவும் வைப்பார் .,சிந்திக்கவும் வைப்பார்.,கேலி கிண்டல் நையாண்டி எல்லாமும் உண்டு. என்னுடைய ரோல் மாடல்களில் கீதாம்மா வும் ஒருவர் !

கீதாம்மா உங்களுக்கு புவனா மற்றும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் .,

 இந்நன்னாளில் தோழிகள் ஜானு ,குந்தவை ,புவனா, பொற்கொடி, அருணா ,காஞ்சனாம்மா ,மலர் ,கிருஷ்ண வேணி சந்தியா ,காயத்ரி ,சுனிதா,கீதா ,அனி,சூர்யா, அனிதா, சிந்து ,சந்தியா ,சின்ன அம்மிணி,மைத்ரேயி ,சுமா புதுகை தென்றல் ,மகி ,மேனகா, நிவி ,சுஹா ஸ்ரீ ,கெக்கே பிக்குனி ,அனாமிகா லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் தேனு எல்லோருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்!


நல்ல வாரம் !!

பிப்ரவரி 11, 2011

 

இந்த வாரம் ஒரு சிறந்த வாரம் என்று சொல்லலாம்.,

 அலுவலக வேலை விசயத்தில் நல்ல பெயர்

கணவரின் எதிர்பாராத பொருள் பரிசு

பசங்க பெரியதா குறும்பு செய்யாம சமத்தா இருந்தது

இந்தியா வந்த குந்தவை அலைபேசியில் பேசியது

வழக்கமான தோழிகளின் புதிதான பாராட்டுகள்

பின் தோழிகளின் பதிவுகளில் அதிக கவனம் செலுத்தி பின்னூட்டங்கள் போட்டது

தேனு பதிவுகளை பற்றி பாசமிகு எதிரி(!) அனாமிகா சொல்லி லிங்க் கொடுத்தது(தேங்க்ஸ் டி செல்லம் !)

தேனுவின் தொடர் கதையை படித்து மனம் ஒன்றியது (நன்றி தேனு! )

பதிவு வாழ்க்கையில் முதல் தடவையாக அவரிடம் நற்சான்று (!) பெற்றது

அதனால் உண்டான மனதின் பூரிப்பு ;சற்று பெருமிதம் தான்……..

எலாவற்றிக்கும் மேலாக எண்ணங்கள் கீதாம்மா அவர்களிடம் இருந்து பெற்ற மாலையும் இப்போது புதிதாக கிடைத்த அவர் அளித்த கொ ப செ பணியும் தான் (பதவியை நாங்க மக்களுக்கு செய்யும் பணியாக தான் கருதுவோம் !

இந்த பாடல் இன்று எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது .,

நீங்களும் தான் படித்து கேட்டு ரசியுங்களேன்………….

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் – ஒரு

மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் – கருங்

கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் – பசும்

 புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் – ஒரு

மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் – கருங்

கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் – பசும்

புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் – பனிப்

பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன் – தமிழ்ப்

பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன் – மனம்

பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் – ஒரு

மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் – கருங்

கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் – பசும்

புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் – பழச்

சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் – அருள்

உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன் – தனி

உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் – ஒரு

மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் – கருங்

கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் – பசும்

புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

முருகா முருகா முருகா முருகா


இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்

ஓகஸ்ட் 31, 2010

ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராம ராம ஹரே ஹரே

ஹரே ராம ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே  

அனைவருக்கும் இனிய  கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்  

கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்

பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை

எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,
                                                                                                 (கண்ணன் பிறந்தான்)

அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்

துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்

மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்

பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை.
                                                                                              (கண்ணன் பிறந்தான்)

சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்

பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்   .

கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.

   இந்த நன்நாளில் உங்களுக்கு எல்லா வளத்தையும் ,

     நலத்தையும் கிருஷ்ணர் வழங்கட்டும் !  


என்னுயிர் தோழி ! கேளுங்கள் செய்தி !!

மே 29, 2010
என்னுயிர் தோழி ! கேளுங்கள் செய்தி !! 
 
வேகமாக வளர்ந்து வரும் WordPress.com வலைப்பதிவுகள்
  1. Balhanuman’s Blog
  2. தமிழ் கிறுக்கன்
  3. அலசல்
  4. திரைகடல் ஓடியும் தமிழினை தேடு..!
  5. குந்தவையின் பக்கம்
  6. தாளிக்கும் ஓசை
ஜானு அண்ட் குந்தவை கலக்கிறீங்க!!வெல்  டன்;கீப் இட் அப் !!
 
பெருமையால் உள்ளம் பூரிக்கிறது .
வாழ்த்துக்களோடு பிரியா