குட்டிஸ் பக்கம்

 சென்ற வெள்ளி கிழமை நடந்தது.,

 வழக்கம் போல் பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு வந்த கார்த்திக் விளையாட போறேன் மா என்று பாட்மிட்டன் பாட்டை எடுத்து கொண்டு சென்றவன் விரைவில் வீடு திருப்பி விட்டான் ., எப்படியும் ஒரு மணி நேரம் கழித்து தான் வருவான் ;சீக்கிரம் வந்து விட்டானே என்று சற்று ஆட்சிரியத்தோடு அவனை பார்த்த போது நான் ஒரு விஷயம் சொல்றேன் ;என்னை நீங்க திட்ட கூடாது என்று சற்று பதட்டத்தோடு சொன்னான் சரி சொல்லு என்றேன் இல்லை என் மேலே எந்த தப்பும் இல்லை மம்மி என்றான் அதற்குள் அஜித் வந்து கூப்பிட திரும்பவும் விளையாட சென்று விட்டான் என்னவாக இருக்கும் என்று யோசித்து சரி அப்புறம் கேட்டு கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்

 பின்னர் ஒரு வழியாக அவன் சுற்றி வளைத்து மழலை குரலில் சொல்லிய விஷயம் இது தான் அவன் பேட்டை எடுத்து கொண்டு சுபாஷ் வீட்டிற்கு சென்று இருக்கிறான் எதோ விளையாட்டு விசயமாக இரண்டு பேருக்கும் வாய் சண்டை வந்து இருக்கிறது ரெண்டு பேரும் வெவ்வேறு ஸ்கூலில் போர்த் படித்து கொண்டு இருக்கிறார்கள் இதை கண்ட சுபாசின் பாட்டி ( காரைக் குடியில் இருந்து வந்து இருக்கிறார்) ஏண்டா சுபாஷ் ,கார்த்தி கிட்டே போய் இப்படி பேசி கிட்டு இருக்கிறே என்ன இருந்தாலும் உனக்கு தங்கச்சி ஸ்வேதா இருக்கா ; நீ தணிஞ்சு போனா தானே கார்த்திக் நம்ம ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்குவான் நம்ம வீட்டு மாப்பிள்ளையை நீ நல்லா நடத்தாம இப்படி பேசிகிட்டு இருக்கியே என்று சொல்லி இருவரையும் சமாதான படுத்தி இருக்கிறார் :)) அவனின் வெட்கத்தை கண்டு எனக்கு ஒரே சிரிப்பு!

நேற்று அந்த பாட்டி ஊருக்கு போகிறேன் என்று சொல்லி கொள்ள வந்தார் ., நீங்க வேற உங்க பேத்தியை கல்யாணம் செய்து வைக்க போறீங்க ன்னு சொல்லிடீங்கன்னு எங்க கார்த்திக் வேற உங்க வீட்டு பக்கமே திரும்ப மாட்டேன் என்கிறான் என்று சொன்னதற்கு அடடா ;கார்த்திக் ,சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று அவனிடம் சொல்லி விட்டு என்னிடம் நீங்க எல்லாம் நூறு பௌனோடு நல்லா செவப்பு கலரா இருக்கிற பொண்ணு தானே பார்ப்பீங்க என்று என்னையும் அதிர வைத்தார் :)) குறும்பு பாட்டி தான் என்று சொல்லி சிரித்து கொண்டேன்.

6 Responses to குட்டிஸ் பக்கம்

  1. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

    ஆகா, அம்மாவும் புள்ளையும் சேந்து முன்னாடியே முடிவு பண்ணின அந்த நார்த் இண்டியன் மருமகள இப்படி அம்போனு விடறது ஞாயமா தர்மமா… நூறு பவுண் என்ன ஆயிரம் பவுணும் தான் ஈடாகுமா அந்த அழகுக்கு…;)

    ஜோக்ஸ் அபார்ட்… இது செம ரகளை ப்ரியக்கா… ஒருவேள இதான் உங்களோட வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் போஸ்டா?…:) அந்த பாட்டி உங்கள விட விவரமா இருக்கும் போல இருக்கே… இப்பவே சந்தடி சாக்குல புக் பண்றாங்க…:)

    பொருத்தமான படம் போட்டு கலக்கறீங்க மேடம்…:)

    But உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்ப்பாக்குறோம் ப்ரியா மேடம்… வர வர போஸ்டே போடறதில்ல too bad, சங்கத்துல சொல்லி fine போட சொல்லணும்…;)

    • priya.r சொல்கிறார்:

      ஆகா, அம்மாவும் புள்ளையும் சேந்து முன்னாடியே முடிவு பண்ணின அந்த நார்த் இண்டியன் மருமகள இப்படி அம்போனு விடறது ஞாயமா தர்மமா… நூறு பவுண் என்ன ஆயிரம் பவுணும் தான் ஈடாகுமா அந்த அழகுக்கு…;) //
      ஆஹா! நாங்க மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போல இருக்கே 🙂

      ஜோக்ஸ் அபார்ட்… இது செம ரகளை ப்ரியக்கா… ஒருவேள இதான் உங்களோட வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் போஸ்டா?…:) //
      தேங்க்ஸ் ! V ஸ்பெஷல் போஸ்டா ! வர வர உன்ற குறும்பு அதிகமாகிட்டே போறதே 🙂
      அந்த பாட்டி உங்கள விட விவரமா இருக்கும் போல இருக்கே… இப்பவே சந்தடி சாக்குல புக் பண்றாங்க…:) //
      பாட்டி கிராமமா ரெம்ப வெகுளியும் கூட தமாசுக்கு சொல்றாங்கப்பா //
      பொருத்தமான படம் போட்டு கலக்கறீங்க மேடம்…:) //
      எல்லாம் கூகுள் ஆண்டவர் உபயம் தான் !
      But உங்ககிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர்ப்பாக்குறோம் ப்ரியா மேடம்… வர வர போஸ்டே போடறதில்ல too bad, சங்கத்துல சொல்லி fine போட சொல்லணும்…;)//
      சொல்லிட்டே இல்லே ;இனி தினம் ஒரு போஸ்ட் தான் !
      பைன் வேணா கட்டிடறேன் ;இட்லி பார்சல் மட்டும் வேணாம் புவனி ப்ளீஸ் :))

  2. T R C சொல்கிறார்:

    Ithu kathai thane:)))

பின்னூட்டமொன்றை இடுக