பெண் பார்க்கும் நிகழ்வு -தொடர்ச்சி

 

இது தாங்க அந்த சுவாரஸ்யமான  நிகழ்வு. 

இது என்னை பெண் பார்க்க வந்த போது நடந்தது !

 

என்னோட ரங்க்ஸ் என்னை பொண்ணு பார்த்துட்டு ,வேறொரு அறையில் எங்க பெரிய அண்ணா ( பெரியப்பா மகன் )
கூட பேசி கொண்டு இருந்தார் .,எங்க பெரிய அக்கா (பெரியப்பா பெண் ) போய் பார்த்து விட்டு வரேன் என்று போனவர்
திரும்பி வந்து எப்படியும் திருப்பூரில் நாலைந்து  பேராவது  அவருக்கு இருப்பாங்க என்று ஒரு குண்டை போட்டு விட்டு போய் விட்டார்.

 
நாம்ப தான் கொஞ்சம் குழப்ப வாதி ஆயிற்றே ! என்னடா இது பையன் ஜாதகம் ஸ்ரீராமர் ஜாதகம் என்று எங்க வீட்டில் சொல்றாங்க
இந்த அக்கா இப்படி சொல்றாங்களே என்று ஒரு வாரம் குழம்பி போய்

 இருப்பு கொள்ளாமல் தவித்தேன் ஆனால் அப்போது எனக்கு ஏற்பட்ட மனசஞ்சலம்,

 பதைபதைப்பு ,தவிதவிப்பு அக்கா சொல்லை வேத வாக்காக நம்பி மன உளைச்சல்

 ஏற்பட்டு மிகுந்த சிந்தனையில் இருந்தது;இருந்தாலும் அக்கா சந்தேகமாக தானே

 சொல்லி இருக்காங்க என்று மனதை சமாதான படுத்தி கொண்டது,

 எங்க பெரிய அண்ணாவும் அவரும் ஒரு வருஷம் ஸ்கூலிங்க்ளில்

கிளாஸ் மேட் என்பதால் எங்க அண்ணாவுக்கு அவரின் நடத்தைகள்

 தெரிந்து தானே இருக்கும் என்று ஆறுதல் படுத்தி கொண்டது,

 என்று இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

எங்க அக்கா போய் பார்த்து பேசி விட்டு வந்ததற்கு முன்பு தான்

 நான் அவரை சரிவர கூட

பார்க்காமல் தலைவேறு ஆட்டிவிட்டு வந்து விட்டேனே ;சரியாக பார்த்து பேசி இருந்தா

கூட அதை வைத்து தெரிந்து இருப்போமா என்று வேறு சிந்தனை!

 போதாதற்கு ஒரு புறம் RC நாவல்கள் இன்னொரு புறம் சுஜாதா நாவல்கள் என்று படித்து படித்து

சற்று கற்பனையில் உலாவிய காலமாகவும் இருந்தது வந்தவர் வில்லனாக இருப்பார் என்று

 எல்லாம் நினைக்க வில்லை ஆனால் நல்ல கணவராக இருப்பார்; இருக்க வேண்டும் என்று

எதிர்பார்ப்பு இருந்தது .,

 திரும்பவும் சில நாட்கள் கழித்து வந்த அக்கா கிட்டே கேட்ட போது
அடி அசடு !  ;நம்ம வீட்டு பசங்க பொண்ணுங்களை கண்டாலே பேசாம ஓடிடுவாங்க ; இவர் கண்ணை பார்த்து தெளிவா பேசினாரா!

அதை தான் கிண்டலாக கூறினேன் என்று சொல்லி சிரித்து

 எனது மனதில் அமைதியை கொண்டு வந்தார் .,


அன்னைக்கே அவர் கேலி செய்து சிரித்து கொண்டு சொல்லியதை

 நான் தான் இருந்த டென்ஷன்னில் கவனிக்க வில்லை போலும் .

எங்க அக்கா கிட்டே கோவை குசும்பு(கோவையில் வசிக்கிறார் )

கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்று இப்போது நினைக்க    தோன்றுகிறது!

33 Responses to பெண் பார்க்கும் நிகழ்வு -தொடர்ச்சி

  1. chandrasekaran T R சொல்கிறார்:

    அன்னைக்கே அவர் கேலி செய்து சிரித்து கொண்டு சொல்லியதை
    நான் தான் இருந்த டென்ஷன்னில் கவனிக்க வில்லை போலும்
    அப்போ ஆரம்பிச்சுதுதானா இந்த டென்ஷன் இன்னும் தொடரது போல

    • priya.r சொல்கிறார்:

      வாங்க TRC சார் ;உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
      ஹி ஹீ ! இப்போ தான் தியானம் டென்ஷன் ஐ குறைக்கிறதே

  2. chandrasekaran T R சொல்கிறார்:

    எங்க அக்கா கிட்டே கோவை குசும்பு(கோவையில் வசிக்கிறார் )

    கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்று இப்போது நினைக்க தோன்றுகிறது

    கோவைக்காரங்களுக்கு குசும்பு ஜாஸ்திதான் அதான் இப்போ பாக்கிறோமே கண்கூடா

    • priya.r சொல்கிறார்:

      ஹ ஹா !நீங்க நம்ம அப்பாவியை தானே சொல்றீங்க!!!!!!
      ஆமா சார் மத்தவங்களுக்கு குசும்பு மட்டும் தான் இருக்கு
      ஆனா அப்பாவிக்கு ?!

  3. chandrasekaran T R சொல்கிறார்:

    ஏது இப்படியே போனாஅனன்ஸ் சொன்ன வடைமாலை எனக்குதான் போல.
    mee the first

  4. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

    //திரும்பி வந்து எப்படியும் திருப்பூரில் நாலைந்து பேராவது அவருக்கு இருப்பாங்க என்று ஒரு குண்டை போட்டு விட்டு போய் விட்டார்//

    ஹ்ம்ம்… என்ன இருந்து என்ன? இப்படி வந்து சிக்கிட்டாரே… ஜஸ்ட் கிட்டிங்… நோ டென்ஷன் ஒகே…:)))

    //நாம்ப தான் கொஞ்சம் குழப்ப வாதி ஆயிற்றே//

    சிலசமயம் நீ உண்மை கூட பேசறே அக்கா… கீப் இட் அப்… குட்…:))

    • priya.r சொல்கிறார்:

      வாங்க புவனா அடிபாவி ! நீ ஒருத்தியே போதும் என்ர பெயரை damage செய்யறதுக்கு !

      குழப்பாவாதி இப்போ சிந்தனா வாதியா மாறிட்டு வராளாககும்;நோக்கு புரிஞ்சா சரி

  5. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

    //பதைபதைப்பு ,தவிதவிப்பு அக்கா சொல்லை வேத வாக்காக நம்பி மன உளைச்சல்//

    RC நாவலில் இருந்து சுட்ட வரிகள் என்பதை ஆணித்தரமாக சொல்லி கொள்கிறேன்…:)

    //சரியாக பார்த்து பேசி இருந்தா கூட அதை வைத்து தெரிந்து இருப்போமா என்று வேறு சிந்தனை//

    ஆமா… இவங்க பெரிய CID சகுந்தலா… ஒரே வார்த்தைலையே கண்டுபிடிச்சுடுவாங்க…ஹா ஹா…;))

    • priya.r சொல்கிறார்:

      இது எனது சொந்த வரிகள் என்பதை நானும் ஆணி மேல சத்தியம் செய்து சொல்லி கொள்ளட்டுமா

      இப்போ எனது துப்பறியும் திறமை உனக்கு தெரியாது அப்பாவி ;காலமும் எனது பதிவும் பதில் சொல்லும் !!

  6. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

    //எங்க அக்கா கிட்டே கோவை குசும்பு(கோவையில் வசிக்கிறார்) கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்று இப்போது நினைக்க தோன்றுகிறது//

    ச்சே ச்சே… எங்க ஊரு ரெம்ப நல்ல ஊரு யு நோ… நாங்க அதை விட நல்லவங்களாக்கும்… மனசுல வெச்சுக்காம கொஞ்சம் வளவளனு பேசுவமே தவிர நல்ல மனுசங்க… எங்களுக்கு குசும்புனா என்னனே தெரியாது யு நோ…ஹி ஹி ஹி

    • priya.r சொல்கிறார்:

      ஆம்மாமா! இதை நாங்க நம்பணுமாக்கும் !
      ஹய்யோ ! ஹய்யோ ! நீ ஒருத்தி போதும்
      அலப்பரையின் மொத்த உருவமும் நீ தான் அப்பாவி !!!!!!!!!!
      ஊரும் மனுஷாளும் நல்லவா தான் ;பேச்சு தான் சிரிக்க வைக்கும் 🙂

  7. unga thozhi சொல்கிறார்:

    Svarasyama iruku priyaka. 🙂 meendum kokila pen parkum padalam ninaivuku vanthathu. great narration!

    • priya.r சொல்கிறார்:

      வருகைக்கு நன்றி தேனு
      உங்களுடையது ஏன் ஸ்பாம் க்கு போய் விட்டது என்று சிபிஐ விசாரணை தேவை என்று
      கேட்கலாமா ன்னு ஒரே யோசனை போங்க !

      ஏன் RC நாவல் ஒன்று கூடவா நினைவுக்கு வரவில்லை தேனு 🙂
      உங்க கருத்துக்கு நன்றி தேனு

  8. Geetha Sambasivam சொல்கிறார்:

    என்னடா இது பின்னூட்டத்தை இங்கே போட்டுட்டீங்களேனு நினைச்சேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போன பதிவோட தொடர்ச்சியா இது?? அது சரி, திராச சாருக்கு என்ன கொடுத்தீங்க?? சூட்கேஸா? 😛 பொற்கிழியா?? வடை மட்டுமா?? பெரிய மாலையா? சின்ன மாலையா?? :P:P:P:P

    • priya.r சொல்கிறார்:

      நினைச்சேன் .,இது இதை இதை தான் எதிர்பார்த்தேன்.,ஹ ஹா

      ஹ ஹா !நமக்குள்ளே இந்த ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும் !

      கீதாம்மா ! என்ர ப்ளாக் க்கு வர்றதே ஒண்ணு ரெண்டு பேர் தான் !

      TRC சார் அவர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டு இருக்கேன்.

  9. Sankar Narasimhan சொல்கிறார்:

    குழப்பவாதின்னு தலைப்புல இருந்து தெரியுது மரியாதை :கொடுக்கலும் வாங்கலும் ! னு தொடர்ச்சி தான் இந்த பதிவு.

  10. Sankar Narasimhan சொல்கிறார்:

    \இவர் கண்ணை பார்த்து தெளிவா பேசினாரா\
    இது ஒன்னு போதும்.

  11. Sankar Narasimhan சொல்கிறார்:

    \கோவை குசும்பு(கோவையில் வசிக்கிறார்\
    அப்பாவியை மனுசுல வச்சு சொல்லலியே

  12. மதிசுதா சொல்கிறார்:

    வித்தியாசமான நடையில் சுவாரசியமாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி..

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா

    பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).

  13. Karthik சொல்கிறார்:

    படிச்சேன் கமென்ட் போடமா விட்டுடேனோ ??சரி சரி இப்ப போட்டுடறேன்.

    உங்களை கல்யாணம் பண்ணிக்க மாம்சுகு கொடுத்து வெச்சிருக்கணும் ,

    கோவைகாரங்களுக்கு குசும்பு ரொம்பவே ஜாஸ்தி., எங்க வேணா வந்து சத்தியம் பண்றேன் நான்

    • priya.r சொல்கிறார்:

      ஆஹா! தம்பின்னா இப்படி தான் இருக்கணும்!
      ஆமா ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
      நீங்க திவ்யாம்மா வை மனதில் வைத்து சொல்லலை தானே ! ஹ ஹா

  14. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

    //கோவைகாரங்களுக்கு குசும்பு ரொம்பவே ஜாஸ்தி., எங்க வேணா வந்து சத்தியம் பண்றேன் நான்//

    Mr.LK, இவ்ளோ தூரத்துக்கு ஆகி போச்சா… இருக்கட்டும் இருக்கட்டும்… எங்கூரு அம்மணி ஊர்ல இல்லாத தைரியம் இப்படி பேச வெக்குது போல… வந்தப்புறம் போட்டு தர்றேன்…:)))

    • priya.r சொல்கிறார்:

      அதெப்படி ! இல்லை கேட்கிறேன் அப்பாவி அதெப்படி கமெண்ட்ஸ் க்கு பதில் போட கூட இல்லே உடனே மூக்கில் வேர்த்துடுச்சு ! அப்போவும் எங்க ஊரை எப்படி சொல்லலாம்னு கேட்ட மாதிரி தெரியலையே ! 🙂

  15. Karthik சொல்கிறார்:

    இதுகெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்

    • priya.r சொல்கிறார்:

      ஆமாம்: தைரியமா எதித்து நில்லுங்க LK உங்களுக்கு என்ன ஆனாலும் சரி 🙂 ஹோச்பிடல் செலவை நாங்க பார்த்துக்குறோம் !

  16. அப்பாவி தங்கமணி சொல்கிறார்:

    //இதுகெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்//
    அதையும் பாத்துடுவோம்…:))

    //நீங்க திவ்யாம்மாவை மனதில் வைத்து சொல்லலை தானே//
    அவங்கள தான் சொன்னேன் அக்கா… எங்க ஊர் அம்மணி ஹோம் மினிஸ்டர்ங்கற தைரியத்துல தான் பேசறேன்…:))

    //கமெண்ட்ஸ் க்கு பதில் போட கூட இல்லே உடனே மூக்கில் வேர்த்துடுச்சு//
    சொர்கமே என்றாலும் அது எங்க ஊரை போல வருமா…:))

    //அப்போவும் எங்க ஊரை எப்படி சொல்லலாம்னு கேட்ட மாதிரி தெரியலையே//
    அதைத்தான் என் ஸ்டைல்ல சொன்னேன்…:)))

  17. priya.r சொல்கிறார்:

    எப்போவும் இரண்டாவது முறை பின்னூட்டம் போட வராத
    அப்பாவியே வருக !
    வேண்டாம்பா ;அப்புறம் சேலம் மாவட்டத்துக்கும் கோவை
    மாவட்டத்துக்கும் சண்டை வந்துட போகுது !
    அப்பாவியின் கலகம் என்றும் நன்மையில் முடிவடைந்தா சரி !
    கோவை வாழ்க
    சேலம் வாழ்க வாழ்க
    மேட்டூர் அணை வாழ்க வாழ்க வாழ்க வாழியவே

  18. […] The busiest day of the year was April 22nd with 221 views. The most popular post that day was பெண் பார்க்கும் நிகழ்வு -தொடர்ச்சி . […]

chandrasekaran T R -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி